settings icon
share icon
கேள்வி

தேவன் அன்பாக இருக்கிறார் என்பதன் அர்த்தம் என்ன?

பதில்


வேதாகமம் எப்படி அன்பை விளக்குகிறது என்று பார்ப்போம், பிறகு தேவனுடைய அன்பின் சாரத்தைக் குறித்து சில காரியங்களை பார்ப்போம். “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது, அன்புக்குப் பொறாமையில்லை, அன்பு தன்னை புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதை செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும், அன்பு ஒருக்காலும் ஒழியாது” (1 கொரிந்தியர் 13:4-8a). இதுதான் அன்பைக்குறித்த தேவனுடைய விளக்கம். ஏனென்றால் தேவன் அன்பாகவே இருக்கிறார் (1 யோவான் 4:8), அவர் அப்படியே இருக்கிறார்.

அன்பு (தேவன்) யாரையும் வற்புறுத்தாது. அப்படி அவரிடத்தில் வருகிறவர்கள் அவருடைய அன்பிற்கு இணங்கி வருகிறார்கள். அன்பு (தேவன்) எல்லாருக்கும் தயவைக் காண்பிக்கிறது. அன்பு (இயேசு) எல்லாருக்கும் பட்சபாதம் இல்லாமல் நன்மை செய்கிறவராகச் சுற்றித் திரிந்தார். அன்பு (இயேசு) மற்றவர்களை அபகரிக்கவில்லை. முறுமுறுக்காமல் தாழ்மையான வாழ்வை வாழ்ந்தார். அன்பு (இயேசு) தான் மாம்சத்தில் வெளிப்பட்ட விஷயத்தில் தற்புகழ்ச்சியை நாடாமல் தான் எதிற்கொண்ட ஒருவரையும் ஆளவும்நினைக்கவில்லை. அன்பு (தேவன்) கீழ்படிந்தேயாக வேண்டும் என்று ஒருவரையும் கட்டாயப்படுத்தாது. தேவன் குமாரனை கீழ்படியும்படி கட்டாயப்படுத்தாமலேயே, இயேசு முழுமனதோடு பிதாவிற்கு கீழ்படிந்தார். “நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்கு கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு” (யோவான் 14:31). அன்பு (இயேசு) இப்போதும் எப்போதும் பிறருடைய நலனையே நினைத்துக் கொண்டிருந்தார்.

தேவனுடைய மிகச்சிறந்த அன்பின் வெளிப்பாட்டை யோவான் 3:16ல் காண்கிறோம் (யோவான் 3:16): “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுக்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்”. ரோமா 5:8ல் இதே கருத்து சொல்லப்பட்டுள்ளது, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”. இந்த வசனங்களிலிருந்து தேவனுடைய பெரிதான விருப்பமே நாம் அவருடைய நித்திய வீடாகிய பரலோகத்தில் அவருடன் சேரவேண்டும் என்பது தான். அதற்காக ஒரு விலைக்கிரயத்தைச் செலுத்தி ஒரு வழியை உண்டாக்கி வைத்திருக்கிறார். அவர் நம்மை நேசிக்கிறது எதற்கென்றால், அவருடைய சித்தத்தின்படி அவர் செய்ய நினைப்பதால்தான். அன்பு மன்னிக்கும். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9).

அப்படியானால், தேவன் அன்பாகவே இருக்கிறார் என்பதன் அர்த்தம் என்ன? அன்பு தேவனுடைய ஒரு பண்பாக இருக்கிறது. அவருடைய பண்பு மற்றும் ஆள்தத்துவத்தின் மையமே அன்புதான். தேவனுடைய அன்புக்கும் பரிசுத்தத்திற்கும், நீதிக்கும், நியாயத்திற்கும், கோபத்திற்கும் எந்த ஒரு வேற்றுமையும் இல்லை. தேவன் செய்கிற எல்லாமே அன்பினிமித்தமே, அதேபோல அவர் நீதியாகவும் நியாயமாகவும் செய்கிறார். உண்மையான அன்பிற்கு உதாரணம் தேவன் மட்டுமே! வியக்கத்தக்கவிதமாக தேவன் அவருடைய குமாரனாகிய இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறவர்களுக்கும் பரிசுத்த ஆவியினாலே அதே அன்போடு நேசிக்க பெலத்தைக் கொடுத்திருக்கிறார் (யோவான் 1:12; 1 யோவான் 3:1, 23-24).

English



முகப்பு பக்கம்

தேவன் அன்பாக இருக்கிறார் என்பதன் அர்த்தம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries