settings icon
share icon
கேள்வி

நிர்மூலமாக்கும் கொள்கை வேதாகமத்தின்படியானதா?

பதில்


நிர்மூலமாக்கும் கொள்கை என்பது அவிசுவாசிகள் நித்தியத்தை நரகத்திலே கழிக்க மாட்டார்கள் ஆனால் அதற்கு பதிலாக இறந்த பின்பு அவர்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள் என்பதே ஆகும். நரகத்தில் நித்தியத்தை செலவு செய்தல் என்பது பரிதாபமானது அதனால் அவிசுவாசிகளின் ஆத்துமா உடலோடு சேர்ந்து அழிவுறும் அல்லது நிர்மூலமாகும் என்னும் கொள்கை அநேகருக்கு ஒரு கவர்ச்சியான விசுவாசமாக இருக்கிறது. வேதாகமத்தின் சில பகுதிகள் விசுவாசியாதவர்கள் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்படுவார்கள் என்னும் கொள்கைக்காக வாதிட்டாலும், வேதாகமத்தில் பரவலாக பார்க்கும் போது துன்மார்க்கரின் முடிவோ நரகத்தில் நித்திய அழிவு என்று சொல்லுகிறது. கீழ்காணும் காரியங்கள் உபதேசத்தினை தவறான புரிந்துக்கொள்ளுதலால் ஏற்பட்ட விளைவுதான் இந்த கொள்கையை ஒரு சிலர் விசுவாசிப்பதற்கு காரணமாயிற்று: 1) பாவத்தின் விளைவு, 2) தேவனின் நீதி 3) நரகத்தின் இயற்கைத்தன்மை.

நரகத்தினுடைய இயற்கைத்தன்மையின்படி இக்கொள்கையாளர்கள் அக்கினிக்கடலுக்கான அர்த்தத்தை தவறாக புரிந்துகொண்டுள்ளனர். நிச்சயமாக மனிதன் எரிகிற அக்கினிகுழம்பில் எறியப்பட்டால் எவ்வித சந்தேகமுமின்றி அவன் / அவள் உடனடியாக எரிந்து விடுவார்கள். ஆனால் இங்கே அக்கினிக்கடல் என்பது இயற்கை மற்றும் ஆவிக்குரிய மண்டலத்தைக் குறிக்கிறது. இது ஏதோ மனிதனின் சரீரம் அக்கினிக்கடலில் தள்ளப்படுவதல்ல, இது மனிதனின் சரீரம், ஆத்துமா, மற்றும் ஆவி தள்ளப்படுதலை குறிக்கிறது. இயற்கையான அக்கினியினால் மனிதனின் ஆவியை அழிக்க முடியாது. இரட்ச்சிக்கப்பட்டவர்களை போலவே தங்களுடைய நித்தியத்திற்காக இரட்சிக்கப்படாதவர்கள் சரீரத்தோடு உயிர்த்தெழுகின்றனர் (வெளிப்படுத்தல் 20:31; அப்போஸ்தலர் 24:15). இந்த சரீரமானது நித்தியமான அழிவுக்காக ஆயத்தமாக்கப்பட்டுள்ளது.

நிர்மூலமாக்கும் கொள்கையாளர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிற மற்றொரு அம்சம் நித்தியம் ஆகும். “அய்யோனியோன்” என்கிற கிரேக்க வார்த்தை வழக்கமாக “நித்தியம்” என்று மொழிப்பெயர்க்கப்படுகிறது. ஆனால் அதனுடைய பொருள் விளக்கம் வெறுமனே “நித்தியம்” அல்ல. இது குறிப்பாக “காலம்” அல்லது யுகம் அல்லது குறிப்பிட்ட நேரத்தை குறிக்கிறது. எனினும் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள “அய்யோனியோன்” என்கிற கிரேக்க வார்த்தை சில நேரங்களில் நித்திய நீண்ட நேரத்தை குறிக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 20:10 ல் வாசிக்கிறோம் “பிசாசானவன், மிருகமும், கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான், அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.” இந்த மூவரும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டதும் அழிந்து போகவில்லை. பின்னே ஏன் இரட்சிக்கப்படாதவர்களின் அழிவு வித்தியாசமாக (வெளிப்படுத்தல் 20:14-15) இருக்க வேண்டும்? மத்தேயு 25:46 நித்திய அக்கினிக்கடல் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள தக்கதான ஆதாரமாகும், “அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.” இந்த வசனத்தில் மேல் குறிப்பிட்ட அதே கிரேக்க வார்த்தை துன்மார்கர் மற்றும் நீதிமான்களின் முடிவை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. துன்மார்கர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தண்டிக்கப்பட்டால், நீதிமான்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அவர்கள் வாழ்க்கையை பரலோகத்தில் அனுபவிப்பார்கள். விசுவாசிகள் பரலோகத்தில் நித்தியமாய் இருப்பார்களேயானால், அவிசுவாசிகளும் நரகத்திலே நித்தியமாய் இருப்பார்கள்.

நிர்மூலமாக்கும் கொள்கையாளர்கள் எதிர்க்கிற மற்றோரு காரியம் என்னவென்றால், வரைமுறைக்குட்பட்ட பாவத்திற்காக அவிசுவாசிகள் நித்திய நரகத்தில் தண்டிக்கப்படுவது தேவனுக்கு அநீதி ஆகும் என்பதே. 70 ஆண்டுகள் பாவத்தில் ஜீவித்த மனிதனை நித்தியமாக தண்டிப்பது என்பது தேவனுக்கு எப்படி நியாயமாகும? இதற்குப் பதில் என்னவென்றால், பாவங்கள் நித்திய தேவனுக்கு விரோதமாக செய்யப்படுவதால் நம்முடைய பாவம் நித்திய விளைவை உண்டுபண்ணுகிறது. தாவீது ராஜா விபச்சாரம் மற்றும் கொலை பாவத்தை செய்த போது “தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்…” என்று அவன் சொன்னான் (சங்கீதம் 51:4). தாவீது பத்சேபாளிடத்தில் மற்றும் உரியாவினிடத்தில் பாவம் செய்தான், ஆனால் அவன் தேவனுக்கு எதிராக மட்டுமே பாவம் செய்தான் என்று எப்படி சொல்ல முடியும்? ஆக, நாம் செய்யும் எல்லா பாவங்களும் இறுதியாக தேவனுக்கு விரோதமானது என்று தாவீது புரிந்துகொண்டான். தேவன் நித்தியமானவர் மற்றும் முடிவில்லாதவர். இதன் விளைவாக அவருக்கு எதிரான எல்லா பாவங்களும் நித்திய ஆக்கினைக்கு தகுதியானது. இது நாம் எவ்வளவு காலம் பாவம் செய்கிறோம் என்பது அல்ல ஆனால் நாம் யாருக்கு எதிராக/விரோதமாக பாவம் செய்கிறோமோ அந்த தேவனின் குணாதியசத்தை சார்ந்தது ஆகும்.

மேலும் இக்கொள்கையினரின் தனிப்பட்ட அம்சம் என்னவெனில் நமக்கு பிரியமானவர்கள் நரகத்திலே நித்திய ஆக்கினையடைகிறார்கள் என்பதை நாம் அறிந்திருந்தால் பரலோகத்திலே சந்தோஷமாக இருப்பது என்பது சாத்தியமில்லாத காரியம் என்பதாகும். எனினும், நாம் எப்பொழுது பரலோகத்தில் போகிறோமோ அப்பொழுது நமக்கு கவலைப்படுவதற்கும் புகார் சொல்லுவதற்கும் எதுவும் இருக்காது. வெளிப்படுத்தல் 21:4ல் வாசிக்கிறோம் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார். இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” நமக்கு பிரியமானவர்களுள் யாரேனும் ஒருவர் பரலோகத்திலில்லை என்றால், அவர்கள் பரலோகத்திற்குரியவர்கள் அல்ல மற்றும் அவர்கள் தங்களின் சொந்த நிராகரிப்பினால் இயேசு கிறிஸ்துவை அவர்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ளாததினால் (யோவான் 3:16; 14:6) ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிற 100 சதவீதம் முழுமையான உடன்பாடு நமக்கு அப்பொழுது உண்டாயிருக்கும். இதைப் புரிந்துகொள்வது கடினமானது, ஆனால் அவர்கள் இல்லை என்றால் நாம் வருத்தப்பட மாட்டோம். நமக்கு பிரியமானவர்கள் அனைவரும் பரலோகத்தில் இல்லாத போது நாம் எப்படி சந்தோசமாக இருக்க முடியும் என்றல்ல அவர்களை எப்படி கிறிஸ்துவின் விசுவாசத்தில் நடத்துவது என்பதில் நம்முடைய கவனம் இருக்க வேண்டும் அப்பொழுது அவர்களும் நம்மோடு பரலோகத்தில் இருப்பார்கள்.

நரகமும் அதில் இருக்கும் வேதனையுமே, ஒருவேளை தேவன் ஏன் இயேசு கிறிஸ்துவை நம்முடைய தண்டனையை ஏற்றுக்கொள்ளும்படி அனுப்பினார் என்பதன் காரணமாகும். மரணத்திற்கு பின் சரீரம் அழிந்து ஒன்றுமில்லாமல் போகுதல் என்பது அழிவை குறித்து பயமே அல்ல, ஆனால் நித்திய நரகம் நமக்கு மிகுந்த பயத்தை தரக்கூடியது. நாம் நித்தியத்தை நரகத்தில் செலவிடாதபடிக்கு நம்முடைய முடிவுறாத பாவக் கடனை செலுத்த கிறிஸ்துவின் மரணம் நமக்கு பதிலாக முடிவுறாத மரணமாக இருக்கிறது (2 கொரிந்தியன் 5:21). நாம் அவரை விசுவாசிக்கும் போது இரட்ச்சிக்கப்படுகிறோம், நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, சுத்திகரிக்கப்படுகிறோம், மற்றும் நமக்கு நித்திய வாழ்வு பரலோகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தேவனுடைய ஈவாகிய நித்திய வாழ்வை நாம் தள்ளினால், அதன் விளைவாக நாம் நித்திய விளைவை அடையவேண்டும்.

English



முகப்பு பக்கம்

நிர்மூலமாக்கும் கொள்கை வேதாகமத்தின்படியானதா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries