settings icon
share icon
கேள்வி

நாத்திகம் என்றால் என்ன?

பதில்


நாத்திகம் தேவன் இல்லை என்கிற கருத்துப்பாங்கையுடையதாக இருக்கிறது. இது புதிதாக உருவானது அல்ல. சங்கீதம் 14:1ல் சுமார் 1000 வருடங்களுக்கு முன்பாகவே தாவீது நாத்திகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்: “தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான.” தற்போதைய புள்ளி விவரத்தின் படி நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஏறத்தாழ பத்து சதவீகிதம் (10%) மக்கள் இப்பொழுது நாத்திகவாதிகளாக இருக்கிறார்கள். அப்படியானால், ஏன் அநேகர் நாத்திகவாதிகளாக மாறுகின்றனர்? நாத்திகவாதிகள் கூறுவது போல் உண்மையிலேயே நாத்திகம் வாதப்பொருத்தமுடைய நிலையில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறதா?

ஏன் நாத்திகம் இருக்கிறது? ஏன் தேவன் தம்மை ஜனங்களுக்கு வெளிப்படுத்தி அவர் இருக்கிறார் என்பதை நிரூபிக்கவில்லை? தேவன் தோன்றினால் நிச்சயமாகவே எல்லோரும் அவரை விசுவாசிப்பார்கள்! இதில் பிரச்சனை என்னவென்றால் அவர் இருக்கிறார் என்று ஜனங்களை மனமாற்றுவது தேவனுடைய விருப்பமல்ல. விசுவாசத்தின் மூலம் அவர்கள் அவரை நம்ப வேண்டும் (2 பேதுரு 3:9) மற்றும் விசுவாசத்தின் மூலம் அவருடைய இரட்சிப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது (யோவன் 3:16). தேவன் இருக்கிறார் என்பதை அவர் மிகத்தெளிவாக அநேகந்தரம் பழைய ஏற்பாட்டிலே வெளிப்படுத்தியிருக்கிறார் (ஆதியாகமம் 6-9; யாத்திராகமம் 14:21-22; 1 இராஜாக்கள் 18:19-31). ஜனங்கள் தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசித்தார்களா? ஆம் விசுவாசித்தார்கள். அவர்கள் தங்களின் அநீதியான வழிகளை விட்டு தேவனிடம் திரும்பினார்களா? இல்லை. எந்த ஒரு நபர் தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசத்தின்படி ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாதவராக இருக்கிறாரோ, அவன்/அவள் நிச்சயமாக இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசத்தின்படி ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கமாட்டார் (எபேசியர் 2:8-9). ஜனங்கள் ஆத்திகர்களாக (தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசிப்பவர்கள்) இருக்கவேண்டும் என்பதல்ல மாறாக அவர்கள் தேவனை விசுவாசிக்க வேண்டும் என்பதே தேவனின் விருப்பமாகும்.

தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேதாகமம் சொல்லுகிறது. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” என்று எபிரேயர் 11:6 எடுத்துரைக்கிறது. நாம் விசுவாசத்தினால் தேவனையே நம்பி சார்ந்திருக்கும்போது நாம் பாக்கியவான்கள் என்று வேதாகமம் குறிப்பிடுகிறது: “அதற்கு இயேசு தோமாவே நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்” (யோவான் 20:29).

தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது, அதற்காக தேவனை விசுவாசிப்பது என்பது ஒரு முரண்பாட பொருத்தமற்ற செயல் என்று சொல்லிவிட முடியாது. தேவன் இருக்கிறார் என்பதற்கு அநேக நல்ல வாதங்கள் இருக்கின்றன. தேவன் இருக்கிறார் என்பது இந்த பிரபஞ்சத்தில் (சங்கீதம் 19:1-4), இயற்க்கையில் (ரோமர் 1:18-22) நம்முடைய இருதயத்தில் (பிரசங்கி 3:11) தெளிவாய் தெரிகிறது என்று வேதாகமம் போதிக்கிறது. தேவன் இருக்கிறார் என்று நிரூபிக்க முடியாது ஆனால் விசுவாசிக்க வேண்டும் என்றே இவை அனைத்தும் வெளிப்படுத்துகிறது.

அதே நேரத்தில் இதைப்போலவே நாத்திகத்தையும் ஏற்றுக்கொள்வதற்கு விசுவாசம் வேண்டியதாயிருக்கிறது. தேவன் இல்லை என்கிற உறுதியான வாதத்தை சொல்லவேண்டுமேயானல் அதற்கு முற்றிலும் எல்லாம் தெரியும் என்ற ஒரு கூற்றை சொல்வதற்கான தகுதியாகிய எல்லாவற்றை பற்றியும் தெரிந்திருத்தல் மற்றும் உலகத்தின் எல்லா பகுதிக்கும் சென்றிருத்தல்; மற்றும் எல்லாவற்றை பார்த்ததற்கான அடையாளத்தை உடையவராகவும் இருக்கவேண்டும். நிச்சயமாக எந்த நாத்திகரும் இந்த தகுதியை உடையவர்கள் என்று தங்களைக்குறித்துச் சொல்லிக் கொள்ள முடியாது. எனினும் தேவன் நிச்சயமாகவே இல்லை என்று கூறும் அவர்கள் இப்படி இருப்பதாகத்தான் தங்களைக் கருதிக்கொண்டு இருக்கிறார்கள், இது அவர்களுக்கு மிகவும் அவசியமானதாகவும் இருக்கிறது. நாத்திகவாதிகளால் தேவன் சூரியனின் மத்தியில் அல்லது வியாழன் கிரகத்தின் மேகத்திற்கு கீழ் அல்லது சூரிய மண்டலத்திற்கு அப்பால் மேகம் போன்று தோற்றம் அளிக்கும் விண்மீன் கூட்டங்களில் இல்லை என்று நிரூபிக்க முடியாது. இந்த பகுதிகளெல்லாம் நாம் அனுகுவதற்கு மிக தொலைவில் உள்ளதால் இதனில் தேவன் இல்லை என்று நிரூபிக்க முடியாது. ஆத்திகனாக இருப்பதற்கு எவ்வளவு விசுவாசம் தேவையாயிருக்கிறதோ அவ்வளவு விசுவாசம் நாத்திகவாதியாக இருப்பதற்கும் தேவையானதாக இருக்கிறது.

நாத்திகத்தை நிரூபிக்க முடியாது, மற்றும் தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கிறிஸ்தவர்கள் தேவன் இருப்பதை விசுவாசிக்கின்றனர் மற்றும் அவர் இருக்கிறார் என்பது விசுவாசத்தின் அடிப்படையிலானது என்றும் ஒப்புக்கொள்கின்றனர். அதே சமயத்தில் தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசிப்பது முரண்பாடான அல்லது பொருத்தமற்றது என்கிற கருத்தை நாம் நிராகரிக்கிறோம். தேவன் இருக்கிறார் என்பதை தெளிவாக பார்க்க முடியும், ஆர்வமுடன் உணர முடியும், தத்துவம் மற்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் முடியும் என்பதை நாம் விசுவாசிக்கிறோம். “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது” (சங்கீதம் 19 1-4).

English



முகப்பு பக்கம்

நாத்திகம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries