settings icon
share icon
கேள்வி

டினோசர்களைப் பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது? வேதாகமத்தில் டினோசர்கள் உள்ளனவா?

பதில்


பூமியின் வயது என்ன, ஆதியாகமத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கான வியாக்கியான பிரமாணங்கள் என்ன, நம்மைச் சுற்றியுள்ள இயற்கை தரும் ஆதாரங்களை எப்படிப் புரிந்துகொள்வது போன்றவற்றைப் பற்றி கிறிஸ்தவ சமுதாயத்தில் நடக்கும் பெரும் விவாதங்களில் டினோசர்கள் வேதாகமத்தில் உள்ளனவா என்கிற தலைப்பும் ஒன்று. பூமி மிகவும் பழமையானது என்கிற கருத்தை உடையவர்களுக்கு வேதாகமத்தில் டினோசர்களைப் பற்றி கூறப்படவில்லை என்பதை ஒத்துக்கொள்வதில் அதிக ஆட்சேபணை இல்லை, ஏனென்றால், அவர்களின் நிலைப்பாட்டின்படி முதலாவது மனிதன் இந்த பூமியில் நடப்பதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே டினோசர்கள் அழிந்துவிட்டன. வேதாகமத்தை எழுதினவர்கள் உயிருள்ள டினோசர்களைப் பார்த்திருக்கவே மாட்டார்கள்.

பூமி உருவாகி அதிக காலம் இல்லை என்று இளவயது பூமியை விசுவாசிப்பவர்கள், வேதாகமம் ’டினோசர்’ என்ற சொல்லை நேரடியாகக் பயன்படுத்தவில்லை என்றாலும் வேதாகமத்தில் டினோசர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது என்னும் கருத்தை ஒத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். வேதாகமம், இதற்கு பதிலாக ’தன்னியின்’ (tanniyn) என்கிற எபிரேயச் சொல்லை பயன்படுத்துகிறது. இது ஆங்கில வேதாகமங்களில் வெவ்வேறு விதங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சில வேளைகளில் “கடல் அரக்கன்” என்றும், சிலவேளைகளில் “சர்ப்பம்” என்றும் கொடுக்கப் பட்டுள்ளது. ’தன்னியின்” என்பது ஒரு இராட்சத ஊரும் பிராணி என்பதுபோல் தெரிகிறது. இந்தப் பிராணிகள் பழைய ஏற்பாட்டில் சுமார் 30 முறை குறிப்பிடப்பட்டுள்ளன. அவை நிலத்திலும் நீரிலும் காணப்பட்டன.

இந்த இராட்சத ஊரும் பிராணிகள் மட்டுமல்லாமல், வேதாகமம் குறிப்பிடும் வேறுசில பிராணிகளின் விவரணை எப்படி இருக்கிறதென்றால், இவற்றை எழுதியவர்கள் டினோசர்களைக் குறிப்பிட்டிருக்கலாம் என சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பெகெமோத் கர்த்தருடைய சிருஷ்டிப்புகள் அனைத்தைக் காட்டிலும் பெரியதாக கருதப்படுகிறது, இதன் வால் கேதாரு மரங்களுக்கு ஒப்பாகக் கூறப்பட்டுள்ளது (யோபு 40:15). வேறு சில ஆய்வாளர்கள் பெகெமோத்தை யானையாகவோ, நீர் யானையாகவோ இருக்கக்கூடும் என்கின்றனர். ஆனால் மற்றவர்கள், யானைக்கும் நீர்யானைக்கும் வால் சிறியது, அதைக் கேதாரு மரத்துடன் ஒப்பிட முடியாது என்கின்றனர். ஆனால் டினோசர்களோவென்றால் அவை ப்ராகியோசௌரஸ் மற்றும் டிப்லோடோகஸ் போல கேதாரு மரங்களுடன் ஒப்பிடக்கூடிய மிகப் பெரிய வால்களைக் கொண்டிருக்கிறவைகளை போல இருக்கிறது.

எல்லா பழமையான நாகரிகங்களிலுமே இராட்சத ஊரும் பிராணிகளை குறிக்கும் சில கலை பொருட்கள் இருந்திருக்கின்றன. வட அமெரிக்காவில் கிடைத்துள்ள சில கற்பாறைச் சிற்பங்களும், கைவினைப் பொருட்களும், மட்பாண்டப் பொருட்களும் கூட நவீன காலத்தில் சித்தரிக்கப்படும் டினோசர்கள் போல காணப்படுகின்றன. தென் அமெரிக்காவில் உள்ள குகைச் சித்திரங்களில் கூட டிப்லோடோகஸ் போன்ற பிராணிகளை மனிதர்கள் ஓட்டிக்கொண்டு செல்வதுபோல் காணப்படுகின்றன. மேலும், டிரைசெராடாப்ஸ், டெரோடாக்டைல், மற்றும் டைரனோசௌரஸ் போன்ற பிராணிகளின் உருவங்களும் காணப்படுகின்றன. ரோம மொஸைக்கள், மாயன் களிமண் பாண்டங்கள், பாபிலோனிய நகர் சுவர்கள் அனைத்துமே இந்த பிராணிகளைப் பற்றிய மனிதர்களுடைய நிலவரம்புகள் அற்ற, பல்கலாச்சார மோகத்தையே காண்பிக்கிறது. மார்கோ போலோவின் இல் மிலியொன் போன்றவற்றில் கொடுக்கப்பட்டுள்ள தெளிவான விவரணைகள் கூட புதையல்களைச் சேர்த்து வைக்கும் பிராணிகளின் அருமையான கற்பனைக் கதைகளைக் கொண்டிருக்கின்றன. மனிதனும் டினோசரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியாக பல தெளிவான மானுடவியல்சார் மற்றும் வரலாறுசார் ஆதாரங்கள் இருப்பது மட்டுமல்லாமல், வட அமெரிக்காவிலும், மேற்கு-மத்திய ஆசியாவிலும் கண்டுபிடிக்கப் பட்ட டினோசர்கள் மற்றும் மனிதனின் உறைந்துபோன காலடித்தடங்கள் இயற்கையிலிருந்தும் கிடைத்துள்ளது.

அப்படியென்றால், வேதாகமத்தில் டினோசர்கள் இருக்கின்றனவா? இதற்கு முடிவு சொல்வதென்பது இன்னமும் முடியாத காரியமாக இருக்கிறது. இது நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள இந்த உலகத்தையும், கிடைத்துள்ள ஆதாரங்களுக்கு எப்படி பொருள் காண்கிறீர்கள் என்பதையும் பொருத்தது, வேதாகமத்தை அப்படியே புரிந்துகொள்ள முயற்சித்தால், பூமியின் வயது குறைவு என்ற விளக்கம் கிடைக்கும், மேலும் மனிதனும் டினோசரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற கருத்தையும் ஏற்றுக்கொள்ளலாம். மனிதர்களும் டினோசர்களும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் டினோசர்களுக்கு என்ன ஆனது? இந்த விஷயத்தைப் பற்றி வேதாகமம் விளக்கமாக விவரிக்க வில்லையென்றாலும், பெரிய வெள்ளப்பெருக்குக்கு பின் எதோ ஒரு காலத்தில் சுற்றுப் புறச்சூழலில் நடந்த பயங்கரமான மாற்றங்களினாலும், மனிதன் விடாமல் அவற்றை வேட்டையாடினதாலும் அவைகள் முழுமையாக அழிந்துவிட்டன.

English



முகப்பு பக்கம்

டினோசர்களைப் பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது? வேதாகமத்தில் டினோசர்கள் உள்ளனவா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries