settings icon
share icon
கேள்வி

நான் மரித்தபின்பு பரலோகத்திற்கு செல்வேன் என்று எனக்கு எப்படித் தெரியும்?

பதில்


நீங்கள் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் மரித்தபின்பு பரலோகத்துக்குச் செல்வீர்கள் என்றும் உங்களுக்கு தெரியுமா? நீங்கள் இந்த காரியத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்! வேதாகமம் கூறுகிறது: “உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்” (1 யோவான் 5:13). நீங்கள் இப்பொழுது தேவனுக்கு முன்பாக நிற்கிறீர்களென எடுத்துக்கொள்வோம், தேவன் உங்களைப்பார்த்து "நான் ஏன் உங்களை பரலோகத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்?" என்று கேட்கிறார், நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? என்ன பதில் சொல்லுவது என உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நீங்கள் அறிந்திருக்கவேண்டியது என்னவென்றால், தேவன் நம்மை நேசிக்கிறார் நாம் நித்திய வாழ்வை பெறுவதற்கான வழியை தந்திருக்கிறார், அதானால் நாம் நிச்சயமாக நமது வாழ்வை நித்தியத்தில் செலவழிப்போம் என்று அறிந்திருக்க வேண்டும். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16) என வேதாகமம் கூறுகிறது.

எந்த காரியம் நாம் பரலோகம் செல்வதிலிருந்து நம்மை தடை செய்கிறது என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். பிரச்சனை இதுதான் – நம்முடைய பாவ சுபாவம் தான் தேவனுடன் ஐக்கியம் கொள்ளாதபடிக்கு நம்மை தடுக்கிறது. சுபாவத்திலும் தெரிவுகளினாலும் நாம் எல்லாரும் பாவிகள் ஆகும். "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள்" (ரோமர் 3:23). நம்மை நாமே இரட்சித்துக்கொள்ள முடியாது. “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர் 2:8-9). நாம் மரணம் மற்றும் நரகத்தை அடைவதற்கு தகுதியுடையவர்கள். "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23).

தேவன் பரிசுத்தமும் நீதியுமுள்ளவராக இருக்கிறபடியினால் பாவத்தை அவர் தண்டித்தே ஆகவேண்டும், ஆனாலும் அவர் நம்மை அளவில்லாமல் நேசிக்கிறபடியால், நம்முடைய பாவத்திற்கு மன்னிப்பு பெறத்தக்கதாக ஒரு வழியை ஏற்படுத்தி இருக்கிறார். இயேசு சொன்னார்: "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6). இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்காக மரித்தார்: “கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்” (1 பேதுரு 3:18). மரித்தோரிலிருந்து இயேசு உயிரோடு எழுப்பப்பட்டார்: “அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப் பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்” (ரோமர் 4:25).

இப்பொழுது நமது கேள்விக்கு வருவோம் – “நான் மரித்தபின்பு பரலோகத்திற்கு செல்வேன் என்று எனக்கு எப்படித் தெரியும்?” இதுதான் பதில் - கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் (அப்போஸ்தலர் 16:31). “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12). நித்திய ஜீவனை நீங்கள் ஒரு இலவச பரிசாக பெற்றுக்கொள்ளலாம். “தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்" (ரோமர் 6:23). இப்போது நீங்கள் ஒரு முழுமையான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழலாம். இயேசு சொன்னார்: “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10). நீங்கள் உங்கள் நித்தியத்தை இயேசுவோடு பரலோகத்தில் செலவழிக்க முடியும், ஏனெனில் அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்: “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவான் 14:3).

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும், தேவனிடத்திலிருந்து மன்னிப்பை பெற்றுக்கொள்ளவும் விரும்பினால், நீங்கள் இந்த ஜெபத்தை ஏறெடுங்கள். நீங்கள் ஜெபிக்கிற இந்த ஜெபமோ அல்லது இதுபோன்ற மற்ற ஜெபங்களோ உங்களை இரட்சிப்பது இல்லை. கிறிஸ்துவில் நீங்கள் வைக்கிற நம்பிக்கை மட்டுமே உங்களை உங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும். அவர்மேல் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை மற்றும் அவரால் நீங்கள் பெற்றிருக்கிற இரட்சிப்பை வெளிப்படுத்துகிற ஒரு செயல் தான் இந்த ஜெபம். "ஆண்டவரே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறேன் என்றும் அதினிமித்தம் பாவத்திற்கான தண்டனையை அடைவதற்கு பாத்திரமாய் இருக்கிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரில் நான் மன்னிப்பை பெறத்தக்கதாக நான் அடையவேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார் எனவும் அறிந்திருக்கிறேன். இரட்சிப்பிற்காக உம்மில் எனது பரிபூரண நமிக்கையை வைக்கிறேன். உமது அற்புதமான கிருபைக்காகவும் மன்னிப்பிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்! ஆமென்!"

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English



முகப்பு பக்கம்

நான் மரித்தபின்பு பரலோகத்திற்கு செல்வேன் என்று எனக்கு எப்படித் தெரியும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries