settings icon
share icon
கேள்வி

விவாகத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


ஆதியாகமம் 2:23-24-ல் விவாகம் எப்படி தோற்றுவிக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறது: “அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” தேவன் முதலாவது மனிதனை படைத்தார்; பிறகு உறுதுணையாக இருக்கும்படி ஸ்திரீயைப் படைத்தார். “மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல” (ஆதியாகமம் 2:18) என்று கண்டு, தேவன் இதற்கு ஒரு “தீர்வாக” விவாகத்தை ஏற்படுத்தினார்.

வேதாகமம் முதல் விவாகத்தைக் குறித்து விவரிக்கிறபோது, எவாளை “துணை” என்கிற சொல்லைப்பயன்படுத்தி ஏவாளை அடையாளப்படுத்துகிறது (ஆதியாகமம் 2:20). “துணை” என்கிற வார்த்தையின் பின்னணி அர்த்தம் என்னவென்றால், “சூழ்ந்துகொள்ளுதல், காப்பாற்றுதல், உதவிசெய்தல்” என்பதாகும். ஆதாமுடன் வாழ்வதற்கு மற்றும் அவனின் “மற்றொரு பகுதியாக” இருந்து அவனுக்கு உதவியாயிருப்பதற்காகவே ஏவாள் சிருஷ்ட்டிக்கபட்டாள். விவாகம் செய்வதினால் ஒரு மனிதனும் மனுஷியும் “ஒரே மாம்சமாகிறார்கள்.” இந்த ஒருமை மிக முழுமையாக பாலியல் உறவில் வெளிப்படுத்தப்படுகிறது. புதிய ஏற்பாடு இந்த ஒருமைப்பாட்டைப்பற்றி சொல்லும்போது நம்மை எச்சரிக்கிறது: “இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்” (மத்தேயு 19:6).

விவாகத்தைப் பற்றிய மற்றும் விவாக உறவில் விசுவாசிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை பற்றிய காரியங்களை அப்போஸ்தலனாகிய பவுல் தனது அநேக நிருபங்களில் குறிப்பிடுகிறார். உதாரணமாக அவைகளில் ஒரு வேதப்பகுதி, எபேசியர் 5:22-33. இந்த பகுதியை வாசிக்கும்போது, விவாகம் எவ்வகையில் இருக்கவேண்டும் என்று வேதாகமம் கூறுகிற சில திறவுகோல் சத்தியங்களை நாம் காணமுடியும்.

ஒரு வெற்றிகரமான வேதாகம விவாகத்திற்கு எபேசியர் 5ஆம் அதிகாரத்தில் புருஷனும் மனைவியும் நிறைவேற்றுவதற்கான சில பங்குகள் இருக்கின்றன என்று கூறுகிறது: “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.” (எபேசியர் 5:22-23). “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூருங்கள்” (எபேசியர் 5:25). "அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்” (எபேசியர் 5:28-29). “இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” (எபேசியர் 5:31).

விசுவாசியான கணவனும் மனைவியும் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவாகத்தைக்குறித்ததான தேவனுடைய பிரமாணங்களைப் பின்பற்றுவதின் மூலம், ஒரு நிலையான, ஆரோக்கியமான விவாகத்தை அமைத்துக்கொள்ள முடியும். வேதத்தின் அடிப்படையில் உள்ள ஒரு விவாகம் கிறிஸ்துவை கணவனுக்கும் மனைவிக்கும் தலையாக கொண்டிருக்கும். விவாகத்தை பற்றிய வேதத்தின் கருத்து என்னவென்றால், விவாகம் என்பது இரண்டு நபர்களுக்கிடையே உண்டாக்கப்படும் ஒருமைப்பாடு, அது கிறிஸ்துவும் அவரது சபைக்கும் இடையேயுள்ள ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

English



முகப்பு பக்கம்

விவாகத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries