settings icon
share icon
கேள்வி

செல்லப் பிராணிகள் / மிருகங்கள் பரலோகத்திற்கு செல்லுமா? செல்லப் பிராணிகளுக்கு / மிருகங்களுக்கு ஆத்துமாக்கள் உண்டா?

பதில்


செல்லப் பிராணிகளுக்கு / மிருகங்களுக்கு ஆத்துமாக்கள் உண்டு என்றோ, செல்லப் பிராணிகள் / மிருகங்கள் பரலோகத்தில் காணப்படும் என்றோ வேதாகமத்தில் வெளிப்படையான ஒரு தெளிவும் இல்லை. இருப்பினும், சில பொதுவான வேதாகமக் கோட்பாடுகளைக் கொண்டு இந்த காரியத்தைப் பற்றிய ஒரு தெளிவுக்கு வரலாம். மனிதனுக்கும் (ஆதியாகமம் 2:7) மிருகங்களுக்கும் (ஆதியாகமம் 1:30; 6:17; 7:15, 22) ஜீவ சுவாசம் அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள மிகப்பெரும் அடிப்படை வித்தியாசம் என்னவெனில் மனிதன் தேவனுடைய சாயலாகவும் அவரின் ரூபத்தின்படியேயும் சிருஷ்டிக்கப்பட்டான் (ஆதியாகமம் 1:26-27), ஆனால் மிருகங்களோ அப்படியல்ல. மனிதன் தேவனுடைய சாயலாகவும் அவரின் ரூபத்தின்படியேயும் சிருஷ்டிக்கப்பட்டவன் என்பதால் தேவனைப்போலவே, ஆவிக்குரிய தன்மை, சிந்தை, உணர்வு மற்றும் சித்தம் உள்ளவர்கள் ஆகும். மேலும் மரணத்திற்குப் பின்னும் நிலைத்திருக்கும் பகுதியை தங்களின் பெற்றுள்ளனர். ஆனால் செல்லப் பிராணிகளுக்கு / மிருகங்களுக்கு “ஆத்துமா” அல்லது உடலல்லாத ஒரு அம்சம் இருக்குமேயானாலும் அதன் “குணம்” வேறாகவும், குறைந்ததாகவுமே இருக்கமுடியும். செல்லப் பிராணிகளின் / மிருகங்களின் “ஆத்துமாக்கள்” மரித்தபின் நிலைப்பதில்லை என்பதே இந்த வேறுபாட்டின் பொருளாக இருக்கமுடியும்.

ஆதியாகமத்திலுள்ள தேவனுடைய சிருஷ்டிப்பின் வேலையில் மிருகங்களும் உட்பட்டுள்ளன என்பது நாம் கருத்தில்கொள்ள வேண்டிய இன்னொரு உண்மையாகும். தேவன் மிருகங்களைப் சிருஷ்டித்தபின்பு அவைகள் நல்லது என்று கண்டார் (ஆதியாகமம் 1:25). ஆகவே இனி சிருஷ்டிக்கப்போகிற புதிய பூமியிலே ஏன் பிராணிகள் இருக்கக்கூடாது என்பதற்கான எந்தக் காரணமுமில்லை (வெளிப்படுத்தின விசேஷம் 21:1). அதேவேளையில் ஆயிரமாண்டு ஆட்சியில் மிருகங்கள் நிச்சயமாகவே இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம் (ஏசாயா 11:6; 65:25). இந்த மிருகங்களில் சில நாம் இந்த பூமியில் வைத்திருந்த செல்லப்பிராணிகளாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நமக்கு தெரியும் தேவன் நீதியுள்ளவர் ஆகவே நாம் பரலோகத்திற்குச் சென்றடையும்போது இந்த விஷயத்தில் அவரது முடிவு என்னவானாலும் அதை சரி என்று அப்படியே முழுவதுமாக ஒப்புக்கொள்ளக் கூடியவர்களாக இருப்போம்.

English



முகப்பு பக்கம்

செல்லப் பிராணிகள் / மிருகங்கள் பரலோகத்திற்கு செல்லுமா? செல்லப் பிராணிகளுக்கு / மிருகங்களுக்கு ஆத்துமாக்கள் உண்டா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries