settings icon
share icon
கேள்வி

முன் குறித்தல் என்றால் என்ன?முன் குறித்தல் வேதத்திற்கு உட்பட்டதா?

பதில்


ரோமர் 8-29,30-ன் படி, “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” எபேசியர்-1:5,11 கூறுகிறது, “பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,… மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு.” முன்குறித்தலின் உபதேசத்தை அநேகர் எதிர்க்கின்றனர், எப்படியெனினும் முன்குறித்தல் வேதாகமத்திற்கு உட்பட்ட உபதேசம். அதை வேதத்தின் மூலம் புரிந்து கொள்வதே முக்கியம்.

மேற்கொண்ட வசனங்களில் குறிப்பிடப்பட்ட "முன்குறித்தல்" என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையாகிய “”ப்ரூரிசோ” என்ற பதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதின் அர்த்தம் என்னவென்றால் "முன்பதாக தீர்மாணிப்பது," "ப்ரதிஷ்டை," "குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடிவெடுப்பதாகும்." ஆகையால், முன்குறித்தல் என்றால், தேவன் சில காரியங்கள் நடப்பதற்கு முன்பதாகவே அவர் அதை தீர்மாணிப்பதாகும். தேவன் காலத்திற்கு முன்பதாக எதை தீர்மாணித்தார்?

ரோமர் 8-29,30ன் படி, தேவன் குறிப்பிட்ட மனிதர்களை குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார், அவர்களை அழைத்துமிருக்கிறார், நீதிமான்களாக்கியுமிருக்கிறார், மகிமைப்படுத்தியுமிருக்கிறார். அடிப்படையில், தேவன் குறிப்பிட்ட மனிதர்கள் இரட்ச்சிப்படைவார்கள் என்று முன்னறிந்துள்ளார். கிறிஸ்தவ விசுவாசிகள் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று அநேக வசனங்கள் குறிப்பிடுகிறது (மத்தேயு 24:22, 31; மாற்கு 13:20, 27; ரோமர் 8:33, 9:11, 11:5-7, 28; எபேசியர் 1:11; கொலோசியர் 3:12; 1 தெசலோனிக்கேயர் 1:4; 1 தீமோத்தேயு 5:21; 2 தீமோத்தேயு 2:10; தீத்து 1:1; 1 பேதுரு 1:1-2, 2:9; 2 பேதுரு 1:10). முன்குறித்தல் வேதாகமத்திற்கு உட்பட்ட உபதேசம்; அது தேவன் தமது விருப்பத்தின்படி குறிப்பிட்ட நபர்களை இரட்சிக்கபடும்படி தெரிந்துகொள்கிறார்.

இந்த முன்குறித்தலின் உபதேசத்திற்கு மிக பொதுவான எதிர்ப்பு என்னவென்றால், இப்படி முன்குறிப்பது நியாயமற்றது என்பதாகும். ஏன் தேவன் சிலரை தெரிந்து கொள்கிறார் மற்றவர்களை அல்ல? நம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால், ஒருவரும் இரட்சிக்கபட தகுதி உள்ளவர்கள் அல்ல என்பதே. நாம் எல்லோரும் பாவம் செய்தோம் (ரோமர் 3:23) மற்றும் எல்லோரும் நித்திய தண்டனைக்கு உட்பட்டவர்கள் (ரோமர் 6:23). ஆகையால் நம்மை நித்திய காலம் நரகத்தில் இருப்பதற்கு அனுமதிக்கின்றது தேவனின் நீதியான செயலாகும். எனினும், தேவன் நம்மில் சிலரை இரட்சிக்கபடுவற்கு தெரிந்துகொள்கிறார். தெரிந்துகொள்ளபடாதவர்களிடம் தேவன் அநீதியாக இல்லை, ஏனென்றால் அவர்களுக்கு தகுதியானதை பெற்றுகொள்கின்றனர். தேவன் சிலர் மேல் கிருபையாய் இருக்க தீர்மானிப்பதின் நிமித்தம் மற்றவர்களிடம் அநீதியாக இல்லை. ஒருவரும் தேவனிடம் இருந்து எதையும் பெற்றுகொள்ள தகுதி உள்ளவர்கள் அல்ல; ஆகையால்,தேவனிடத்தில் இருந்து ஒன்றையும் பெற்றுகொள்ளாமல் போனாலும், அவரை எதிர்பது நியாயம் அல்ல. உதாரணத்திற்கு, ஒரு மனிதன் இருவது பேர் உள்ள கூட்டத்தில் ஐந்து பேருக்கு பணம் கொடுப்பது போல் ஆகும். பணம் கிடைக்காத பதிணைந்து பேர் கோபப்படுவார்களா? ஒருவேளை கோபப்படுவார்கள். அவர்களுக்கு கோபப்பட அதிகாரம் உண்டா? இல்லை. ஏன்? ஏனென்றால் அந்த மனிதன் யாருக்கும் கடனாலி அல்ல. அவன் சிலருக்கு கிருபையாய் இருக்க முடிவெடுத்தான்.

கர்த்தர் இரட்சிக்கபட சிலரை தெரிந்துகொள்கிறார் என்றால், அது நாம் கிறிஸ்துவை தெரிந்துகொண்டு விசுவாசிக்க நமக்கு இருக்கும் சுய விருப்பத்தை வலிவற்றதாக ஆக்குகிறததில்லையா? வேதம் சொல்லுகிறது நமக்கு எல்லோருக்கும் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என்று - இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள்(யோவான் 3:16,ரோமர் 10:9,10). தேவன் தம்மை விசுவாசிக்கிறவர்களை தள்ளிவிடுகிறார் அல்லது அவரை தேடுகிறவர்களை புறக்கனிக்கிறார் என்று வேதம் விளக்குவதில்லை (உபாகமம் 4:29). எப்படியோ, தேவனுடைய மறைபொருளில்,முன்குறித்தல் தேவனன்டை ஒரு மனிதனை இழுக்கவும் (யோவான் 6:44)மற்றும் இரட்சிப்படைய விசுவாசிக்கவும் (ரோமர் 1:16) இணைந்து செயல்படுகிறது. யாரெல்லாம் இரட்சிக்கபடுவார்கள் என்று தேவன் முன்குறிக்கிறார், மற்றும் இரட்சிக்கப்படும்படி நாம் கிறிஸ்துவை தெரிந்துகொள்ள வேண்டும். இவ்விரண்டும் உண்மையே. ரோமர் 11:33 கூறுகிறது, “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!”

English



முகப்பு பக்கம்

முன் குறித்தல் என்றால் என்ன?முன் குறித்தல் வேதத்திற்கு உட்பட்டதா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries