settings icon
share icon
கேள்வி

குறிசொல்லுதல் மற்றும் ஜாதகம் பார்ப்பதைக் குறித்து கிறிஸ்தவர்களின் கருத்து என்ன?

பதில்


அஞ்சனம்பார்க்கிறவர்கள், குறிசொல்கிறவர்கள், சூனியக்காரர்கள், மற்றும் ஆவிகளோடு தொடர்புகொள்ளக்கூடியவர்கள் ஆகியவர்களை வேதாகமம் கடுமையாக கண்டிக்கிறது (லேவியராகமம் 20:27 உபாகமம் 8:10). ஜாதகம், ஜோதிடம், கைரேகை பார்த்தல், இவைகளும் மேற்குறிப்பிட்டவைகளோடு உள்ளடங்கும். இவைகள் எல்லாம் தெய்வங்கள், ஆவிகள், செத்தவர்களில் பிரியமானவர்கள் மூலம் ஆலோசனைகள் மற்றும் அவைகளின் வழிநடத்துதலின் மூலம் நடைபெறுகின்றன. இந்த தெய்வங்களும் ஆவிகளும் சாத்தான்களே (2 கொரிந்தியர் 11:14-15). செத்துப்போன நம்முடைய பிரியமானவர்களோடு தொடர்பு கொள்ள முடியும் என்பதை விசுவாசிப்பதற்கான எந்த ஆதாரமும் வேதாகமத்தில் இல்லை. மரித்தவர்கள் விசுவாசிகளாக இருந்தால் அவர்கள் நாம் யூகிக்க முடியாத இடத்தில் தேவனோடு ஜக்கியத்திலிருப்பார்கள். அவர்கள் விசுவாசிகள் இல்லை என்றால் அவர்கள் தேவனுடைய அன்பை நிராகரித்தபடியினால் தேவனுக்கு விரோதமாக செயல் பட்ட படியினால் நரகத்திலே முடிவில்லாத கொடூரமான பாடுகளை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

நம்மை நேசித்த மரித்தவர்கள் நம்மோடு தொடர்புக்கொள்ள முடியாது என்றால், அஞ்சனம்பார்க்கிறவர்கள், குறிசொல்கிறவர்கள், ஆவிகளோடு தொடர்புகொள்ளக்கூடியவர்கள் எங்கு இருந்து தகவல்களை பெறுகின்றனர்? குறிசொல்கிறவர்கள் மோசடிக்காரர்களாகவே இருக்கிறார்கள் என்பது அநேக நேரங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிசொல்கிறவர்கள் ஒரு நபரை குறித்து அநேக தகவல்களை சாதாரண வழிகளின் மூலம் கொடுக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் தொலைபேசி எண்களை அழைப்பவர் எண்களை அறியும் வசதியுடன் அறிதல் மற்றும் இணையதளத்தில் தேடி தகவல்களை பெறுதல் ஆகியவற்றின் மூலம் பெயர்கள், விலாசம், பிறந்த நாள், திருமணநாள், குடும்ப எண் மற்றும் பலவற்றை கண்டுபிடிக்கின்றனர். குறிசொல்கிறவர்கள் சில நேரங்களில் அவர்கள் அறிவதற்கு சாத்தியமில்லாத தகவல்களை கூட அறிந்து வைத்திருக்கின்றனர். எங்கிருந்து இந்த தகவல்களை பெறுகின்றனர்? சாத்தானிடமிருந்து மற்றும் பிசாசுகளிடமிருந்து பெறுகின்றனர் என்பதே இதற்கு பதில். "அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்" (2 கொரிந்தியர் 11:14-15). அப்போஸ்தலர் 16:16-18 குறிசொல்லுகிறவளிடத்தில் இருந்து அப்போஸ்தலனாகிய பவுல் பிசாசை விரட்டும் வரை அவள் எதிர்காலத்தை கனித்துக்கொண்டிருந்தாள் என்பதை விளக்குகிறது.

சாத்தான் தயயுள்ளவனாகவும் உதவிசெய்பவனாகவும் இருப்பது போல் ஏமாற்றுகிறான். சாத்தான் நல்லவன் போல் தோற்றமளிக்க முயற்சிசெய்கிறான். சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் குறிசொல்கிறவர்களுக்கு குறிப்பிட்ட நபர்களை குறித்த தகவல்களை கொடுத்து அந்த நபரை தேவன் தடைசெய்திருக்கிற ஆவிகளின் உலகத்தோடு இணைக்க முயற்சிக்கின்றனர். ஆரம்பத்தில் இது அறியாமையாக இருக்கலாம் ஆனால் காலப்போக்கில் இவர்கள் இந்த குறிசொல்கிறவர்களுக்கு அடிமையாவார்கள் மற்றும் தங்களுக்கு அறியாமலேயே சத்தானின் கட்டுப்பாட்டிற்கு தங்களை விட்டுக்கொடுத்து தங்களின் வாழ்க்கையை அழித்துக்கொள்கின்றனர். பேதுரு சொல்கிறார், “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள், ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேதுரு 5:8). அநேக நேரங்களில் குறிசொல்கிறவர்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் எங்கு இருந்து வருகின்றன என்பதை அறியாமலே அவர்களை அவர்களே ஏமாற்றத்திற்கு உட்படுத்துகின்றனர். தகவல்கள் எதுவாயினும் எங்கிருந்து வந்தாலும் அஞ்சனம்பார்த்தல், குறிசொல்லுதல், சூனியம்செய்தல், ஆகியவைகள் தகவல் கண்டுபிடிப்பதற்கான வழிகள் அல்ல. நம்முடைய வாழ்க்கைகான தேவனுடைய சித்தத்தை நாம் எப்படி அறிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்? தேவனுடைய திட்டம் எளிமையானது ஆனால் வல்லமையும் ஆற்றலும் நிறைந்தது: வேதத்தை வாசியுங்கள் (2 தீமோத்தேயு 3:16-17) மற்றும் ஞானத்திற்காக ஜெபியுங்கள் (யாக்கோபு 1:5).

English



முகப்பு பக்கம்

குறிசொல்லுதல் மற்றும் ஜாதகம் பார்ப்பதைக் குறித்து கிறிஸ்தவர்களின் கருத்து என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries