settings icon
share icon
கேள்வி

இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு (12) சீஷர்கள் / அப்போஸ்தலர்கள் யார்?

பதில்


"சீஷன்" என்கிற வார்த்தை கற்பவர் அல்லது பின்பற்றுகிறவர் என்பதைக் குறிக்கிறது. "அப்போஸ்தலன்" என்கிற வார்த்தைக்கு "அனுப்பப்பட்டவன்" என்று அர்த்தமாகும். இயேசு இந்த பூமியில் இருந்த நாட்களில் அவரை பின்பற்றிய இந்த பன்னிரண்டு பேர்களும் "சீஷர்கள்" என்று அழைக்கப்பட்டனர். இந்த பன்னிரண்டு சீஷர்களும் இயேசுகிறிஸ்துவைப் பின் பற்றினர், அவரிடமிருந்து கற்றுக்கொண்டனர் மற்றும் அவரால் போதிக்கப்பட்டனர். அவர் உயிர்த்தெழுந்தபிறகு மற்றும் பரமேறிச்செல்வதற்கு முன்பதாக இயேசு சீஷர்களை அவருடைய சாட்சியாக இருக்கும்படி அனுப்பினார் (மத்தேயு 28:18-20; அப்போஸ்தலர். 1:8). பின்பு அவர்கள் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்பட்டனர். எனினும், இயேசு இப்பூமியில் இருந்த நாட்களில் சீஷர்கள் மற்றும் அப்போஸ்தலர்கள் என்கிற வார்த்தைகள் மாறி மாறி பயன்படுத்தப்பட்டது.

அசலான பன்னிரண்டு சீஷர்கள் / அப்போஸ்தலர்கள் குறித்த பட்டியல் மத்தேயு 10:2-4 வரையிலுள்ள வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது, "அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே." வேதாகமத்தில் இந்த பன்னிரண்டு சீஷர்கள் / அப்போஸ்தலர்களுடைய நாமங்களின் பட்டியல் மாற்கு 3:16-19 மற்றும் லூக்கா 6:13-16 ஆகிய வேதப்பகுதிகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வேதப்பாகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவர்களுடைய நாமங்களில் ஒரு சில சிறிய வித்தியாசங்கள் இருப்பதைக் கண்டுகொள்ளலாம்.

ததேயு தான் "யாக்கோபின் குமாரனாகிய யூதா" (லூக்கா 6:16) மற்றும் லெபேயு (மத்தேயு 10:3) என்பதாக அழைக்கப்பட்டதாக தோன்றுகிறது. செலோத்தே எனப்பட்ட சீமோன், கானானியனாகிய சீமோன் என்றும் அழைக்கப்பட்டான் (மாற்கு 3:18). இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் காரியோத்தின் இடத்தில் மத்தியா என்பவன் பன்னிரண்டு அப்போஸ்தலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டான் (அப்போஸ்தலர் 1:20-26). சில வேதாகம ஆசிரியர்கள் மத்தியாவை தேவையில்லாத அப்போஸ்தலன் என்றும் யூதாஸ் காரியோத்தின் இடத்தில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட 12வது அப்போஸ்தலன் பவுல் தான் என்றும் விசுவாசிக்கின்றனர்.

பன்னிரண்டு சீஷர்கள் / அப்போஸ்தலர்கள் சாதாரண மனிதர்களாக இருந்தார்கள், அவர்களை தேவன் அசாதாரணமான முறையிலே பயன்படுத்தினார். இந்த பன்னிரண்டு பேர்களில் சிலர் மீனவர்கள், வரிவசுலிப்பவர்கள் மற்றும் புரட்சியாளர்கள். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய இந்த பன்னிரண்டு சீஷர்களின் தொடர்ச்சியான தோல்விகள், தடுமாற்றங்கள், மற்றும் சந்தேகங்கள் ஆகியவற்றை சுவிசேஷ புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. இயேசுவின் உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறிச்சென்றதை சாட்சியாக கண்ட பின்பு இவர்கள் இந்த உலகத்தையே கலக்கும்படியான வல்லமையுள்ள மனிதர்களாக பரிசுத்த ஆவியானவர் சீஷர்களை / அப்போஸ்தலர்களை மறுரூபமாக்கினார் (அப்போஸ்தலர் 17:6). மாற்றம் என்னவாக இருந்தது? இந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் / சீஷர்களும் இயேசுவோடு கூட இருந்தார்கள் (அப்போஸ்தலர் 4:13). இதுவே நம்மைக்குறித்தும் சொல்லப்படுவதாக!

English



முகப்பு பக்கம்

இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு (12) சீஷர்கள் / அப்போஸ்தலர்கள் யார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries