settings icon
share icon
கேள்வி

ஈசாக்கை பலியிடும்படி தேவன் ஏன் ஆபிரகாமுக்கு கட்டளையிட்டார்?

பதில்


ஆபிரகாம் தேவனோடு நடந்த நடப்பில் பல முறை தேவனுக்குக் கீழ்ப்படிந்தார், ஆனால் ஆதியாகமம் 22-ல் இருந்ததை விட வேறு எந்த சோதனையும் ஆபிரகாமிற்கு அவ்வளவு கடுமையானதாக இருந்திருக்க முடியாது. “உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” (ஆதியாகமம் 22:2) என்று தேவன் கட்டளையிட்டார். ஈசாக்கு வாக்குத்தத்த புத்திரன் என்பதால் இது ஒரு அதிர்ச்சியூட்டும் கோரிக்கையாகும். இதற்கு ஆபிரகாம் எவ்வாறு பதிலளித்தார்? உடனடி கீழ்ப்படிந்து, மறுநாளே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். தேவனுடைய இந்த குழப்பமான கட்டளைக்கு ஆபிரகாம் எந்தஒரு கேள்வியும் கேட்காமல் தேவனுக்கு கீழ்ப்படிந்து அவருக்கு தகுதியுள்ள மகிமையை அவருக்கு கொடுத்தது, மேலும் தேவனை எவ்வாறு மகிமைப்படுத்துவது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஆபிரகாம் செய்ததைப் போலவே நாம் கீழ்ப்படியும்போது, தேவனுடைய திட்டம் மிகச் சிறந்த சூழ்நிலை என்று நம்பி, அவருடைய பண்புகளை உயர்த்தி, அவரைப் புகழ்கிறோம். இந்த நொறுக்குதலான கட்டளையை எதிர்கொள்வதில் ஆபிரகாமின் கீழ்ப்படிதல் தேவனுடைய இறையாண்மை அன்பையும், அவருடைய நம்பகத்தன்மையையும், அவருடைய நன்மையையும் புகழ்ந்தது, மேலும் இது நாம் பின்பற்ற ஒரு முன்மாதிரியை அளிக்கிறது. அவர் அறிந்த தேவன் மற்றும் அவர்மேல் வைத்திருந்த விசுவாசம், ஆபிரகாமை எபிரெயர் 11-ல் உள்ள விசுவாச வீரர்களின் கூட்டத்தில் வைத்தது.

இரட்சிப்பின் ஒரே வழிமுறையாக ஆபிரகாமின் விசுவாசத்தை தேவன் ஒரு முன்மாதிரியாக பயன்படுத்துகிறார். ஆதியாகமம் 15:6 கூறுகிறது, “ஆபிராம் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.” ரோமர் 4:3 மற்றும் யாக்கோபு 2:23 ஆகியவற்றில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளபடி இந்த உண்மை கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையாகும். ஆபிரகாமுக்கு வரவு வைக்கப்பட்ட நீதியே, நம்முடைய பாவங்களுக்காக தேவன் அளித்த பலியை இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தினால் பெறும்போது நமக்குக் கிடைத்த அதே நீதியாகும். "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" (2 கொரிந்தியர் 5:21).

பாவபரிகார பலி பற்றிய புதிய ஏற்பாட்டின் போதனையின் அடிப்படையாக ஆபிரகாமின் பழைய ஏற்பாட்டுச் சம்பவம் இருக்கிறது, அதாவது மனிதகுலத்தின் பாவத்திற்காக கர்த்தராகிய இயேசுவை சிலுவையில் பலியான காரியம். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இயேசு சொன்னார், “உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்” (யோவான் 8:56). இரண்டு வேதாகமக் கணக்குகளுக்கு இடையிலான சில ஒற்றுமைகள் பின்வருமாறு:

  • “உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” (ஆதியாகமம் 22:2); "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தருளி... இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16).

  • “மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு…” (ஆதியாகமம் 22:2); “இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்” (எபிரெயர் 13:12). இந்த பகுதி பல ஆண்டுகளுக்குப் பிறகு எருசலேம் நகரம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, இயேசு அதன் நகர சுவர்களுக்கு வெளியேதான் சிலுவையில் அறையப்பட்டார்.

  • “அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” (ஆதியாகமம் 22:2); "கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்" (1 கொரிந்தியர் 15:3).

  • “ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்தான்” (ஆதியாகமம் 22:6); இயேசு, “தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு...” (யோவான் 19:17).

  • “ஆனால் தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே?” (ஆதியாகமம் 22:7); இயேசு வருகிறதை யோவான் கண்டு, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றான் (யோவான் 1:29).

  • ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கு தன்னை பலியாக கொடுப்பதில் தனது தந்தைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து செயல்பட்டார் (ஆதியாகமம் 22:9); “என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று இயேசு ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26:39).

  • உயிர்த்தெழுதல் - ஈசாக்கு (அடையாளப்பூர்வமாக) மற்றும் இயேசு உண்மையில்: “மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான் ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே, இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்” (எபிரெயர் 11:17-19); இயேசு, “அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்” (1 கொரிந்தியர் 15:4).

  • English



    முகப்பு பக்கம்

    ஈசாக்கை பலியிடும்படி தேவன் ஏன் ஆபிரகாமுக்கு கட்டளையிட்டார்?
    இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
    © Copyright Got Questions Ministries