கேள்வி
ஆதாம் மற்றும் ஏவாள் குறித்தக் கேள்விகள்?
பதில்
ஆதாம் மற்றும் ஏவாள் இரட்சிக்கப்பட்டவர்களா? ஆதாமும் ஏவாளும் இரட்சிக்கப்பட்டார்களா என்பதைக் குறித்து வேதாகமம் நமக்கு குறிப்பாக சொல்லவில்லை. ஆதாமும் ஏவாளும் பாவத்தால் கறைபடுவதற்கு முன்பு தேவனைக் குறித்து அறிந்த இரண்டு மனிதர்கள் மட்டுமே. இதன் விளைவாக, இன்று நம்மில் எவரையும் விட அவர்கள் வீழ்ச்சிக்குப் பிறகும் தேவனை நன்கு அறிந்திருக்கலாம். ஆதாமும் ஏவாளும் தேவனை உறுதியாக நம்பினர் மற்றும் நம்பியிருந்தனர். தேவன் ஆதாம் மற்றும் ஏவாளுடன் தொடர்ந்து பேசினார் மற்றும் வீழ்ச்சிக்குப் பிறகு அவர்களைப் பராமரித்து அவர்களுக்குத் தேவையானவைகளை வழங்குகிறார். ஆதாமும் ஏவாளும் தேவன் ஒரு இரட்சகரை வழங்குவார் என்ற வாக்குறுதியை அறிந்திருந்தார்கள் (ஆதியாகமம் 3:15). தேவன் அவர்களது வீழ்ச்சிக்குப் பிறகு ஆதாம் மற்றும் ஏவாளுக்கு தோல் உடைகளை உருவாக்கினார் (ஆதியாகமம் 3:21). பல வேத அறிஞர்கள் இதை முதல் மிருக பலியாக புரிந்துகொள்கிறார்கள், இது உலகின் பாவங்களுக்காக சிலுவையில் கிறிஸ்துவின் இறுதி மரணத்தை முன்னறிவிக்கிறது. இந்த உண்மைகளை ஒன்றாக இணைத்து பார்த்தால், ஆதாமும் ஏவாளும் இரட்சிக்கப்பட்டவர்கள், அவர்கள் மரித்தபோது உண்மையில் பரலோகம் / சொர்க்கத்திற்குச் சென்றார்கள் என்று தோன்றுகிறது.
ஆதாம் மற்றும் ஏவாளுக்கு எத்தனைப் பிள்ளைகள்? வேதாகமம் நமக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கொடுக்கவில்லை. ஆதாம் மற்றும் ஏவாளுக்கு காயீன் (ஆதியாகமம் 4:1), ஆபேல் (ஆதியாகமம் 4:2), சேத் (ஆதியாகமம் 4:25) மற்றும் பல குமாரர்கள் மற்றும் குமாரத்திகள் (ஆதியாகமம் 5:4) இருந்தனர். பல நூற்றுக்கணக்கான வருடங்கள் குழந்தை பெற்றெடுக்கும் திறனுடன், ஆதாமும் ஏவாளும் தங்கள் வாழ்நாளில் 50+ பிள்ளைகளைப் பெற்றிருக்கலாம்.
ஆதாமும் ஏவாளும் எப்போது சிருஷ்டிக்கப்பட்டார்கள்? பழைய ஏற்பாட்டின் வரலாறு மற்றும் ஆதியாகமம் 5 ஆம் அதிகாரத்தில் உள்ள காலங்களை கணக்கிட்டால், ஆதாமும் ஏவாளும் கி.மு. 4000 இல் சிருஷ்டிக்கப்பட்டிருக்கலாம்.
ஆதாமும் ஏவாளும் குகை மனிதர்களா? ஆதியாகமம் 3 ஆம் அதிகாரம் ஆதாமும் ஏவாளும் தேவனுடன் முழு அறிவுப்பூர்வமாக உரையாடுவதை பதிவு செய்கிறது. ஆதாமும் ஏவாளும் பல கருத்துக்களைப் புரிந்துகொள்வதில் "பழமையானவர்களாக" இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் "மனிதகுரங்கு-போன்றவர்கள்" அல்லது எந்த வகையிலும் அறிவுத்திறன் குறைபாடுடையவர்கள் அல்ல. ஆதாமும் ஏவாளும் உலக வரலாற்றில் மிகச் சிறந்த மனிதர்கள்.
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்கு முன்பு ஏதேன் தோட்டத்தில் எவ்வளவு காலம் இருந்தார்கள்? ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்கு முன்பு ஏதேன் தோட்டத்தில் எவ்வளவு காலம் இருந்தார்கள் என்பதைக் குறித்து வேதாகமம் வெளிப்படையாகக் கூறவில்லை. அவர்கள் தோட்டத்தில் சிறிது காலம் இருந்ததாகத் தெரிகிறது, ஒருவேளை ஓரிரு நாட்கள் கூட இருக்கலாம். ஆதாமும் ஏவாளும் வீழ்ச்சிக்குப் பிறகு பிள்ளைகளைப் பெறவில்லை (ஆதியாகமம் 4:1-2), எனவே அவர்கள் நீண்ட காலம் ஏதேன் தோட்டத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஆதாம் மற்றும் ஏவாளுக்கு தொப்புள் இருந்ததா? வயிற்றில் இருக்கும் குழந்தையை அதன் தாயுடன் இணைக்கும் தொப்புள் கொடியால் தொப்புள் உருவாகிறது. ஆதாமும் ஏவாளும் தேவனால் நேரடியாகப் படைக்கப்பட்டவர்கள், சாதாரண மனித பிறப்புச் செயல்முறையில் அவர்கள் கடந்துச்செல்லவில்லை. எனவே, ஆதாம் மற்றும் ஏவாளுக்கு தொப்புள் இருந்திருக்க வாய்ப்பில்லை.
English
ஆதாம் மற்றும் ஏவாள் குறித்தக் கேள்விகள்?