கேள்வி
புற்றுநோயைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
புற்றுநோயைக் குறித்து வேதாகமம் குறிப்பாக எதுவும் கூறவில்லை. இருப்பினும், இது நோய்களின் பிரச்சினைகளை குறிப்பிடவில்லை என்று அர்த்தமல்ல. எசேக்கியா ராஜா ஒரு "பிளவையால்" நோய்வாய்ப்பட்டிருந்தார் (2 ராஜாக்கள் 20:6-8), இது உண்மையில் வேறு பெயரில் புற்றுநோயாக இருக்கலாம். எனவே புற்றுநோய் என்ற வார்த்தை வேதத்தில் இல்லை என்றாலும், புற்றுநோயாக இருந்திருக்கக்கூடிய நிலைமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இயேசு பூமியில் இருந்தபோது, யூதர்களுக்கு அவர் அவர்களின் மேசியா என்பதற்கு அடையாளமாக, அவரிடத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து வித பிணியாளிகளின் நோய்களையும் (வெளிப்படையாக அதில் புற்றுநோய் அடங்கும்) குணப்படுத்தினார். இருப்பினும், புற்றுநோய், எல்லா நோய்களையும் போலவே, உலகின் மீது வந்த பாவத்தினுடைய சாபத்தின் விளைவாகும். ஆதியாகமம் 3:17ல், "உன் நிமித்தம் பூமி சபிக்கப்பட்டிருக்கும்" என்று வாசிக்கிறோம். இந்த வார்த்தை "பூமி" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாவத்தின் காரணமாக பூமி சபிக்கப்பட்டது, எல்லா மனிதர்களும் மரித்துவிடுகிறோம்-நாம் அனைவரும் மண்ணுக்குத் திரும்புகிறோம்-மற்றும் இவ்வாறு நிகழ்கிற மரணத்தின் முறையானது பூமியின் மீது வந்த சாபத்தின் இயற்கையான விளைவு ஆகும். நோய்கள் "தண்டனை" அல்ல. அவை வீழ்ந்துபோன உலகில் மற்றும் சபிக்கப்பட்ட பூமியில் வாழ்வதன் விளைவாகும், மேலும் விசுவாசிகளும் அவிசுவாசிகளும் ஒரே மாதிரியாக புற்றுநோயையும் மரணத்திற்கு வழிவகுக்கும் பிற நோய்களையும் பெறுகிறார்கள். விசுவாசிகளின் வாழ்க்கையில், தேவன் "சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக நடப்பிக்கிறார்" (ரோமர் 8:28) என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்; "சகலத்தில்" புற்றுநோயும் அடங்கும்.
அற்புதமான விஷயம் என்னவென்றால், சபிக்கப்பட்ட இந்த பூமியில் உள்ள வாழ்க்கையில் நாம் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ஆளானாலும், நமக்கு நம்பிக்கை இருக்கிறது. சங்கீதம் 103-ல் ஒரு அற்புதமான பத்தி உள்ளது, அது இந்த உலகத்தின் தீமைகளுக்கு முடிவு இருக்கும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது. சங்கீதம் 103:1-4 கூறுகிறது, "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்."
இந்த ஜென்மத்தில் புற்றுநோய் அல்லது பிற நோய்களை தேவன் குணப்படுத்துவார் என்று நாம் உத்தரவாதம் அளிக்கிறோம் என்பதை இந்த பத்தி அர்த்தப்படுத்துகிறதா? இல்லை, இந்தப் பத்தியின் பொருள் அதுவல்ல. மாறாக, நம்முடைய பாவங்களை மன்னிக்கும் அதே தேவன் ஒரு நாள் அவர் நமக்காக ஆயத்தம் செய்துள்ள இடத்திற்கு நம்மைக் கொண்டுவருவார் (மத்தேயு 25:34). அவருடைய மீட்பு நம்மை அழிவிலிருந்து பாதுகாக்கிறது, பின்னர் இனி சாபமும் நோயும் இனி மரணமும் இருக்காது, அவருடைய நன்மை மற்றும் கிருபையால் நாம் என்றென்றும் முடிசூட்டப்படுவோம். பாவத்தின் சாபத்தின் மீதான இறுதி வெற்றியானது ஏற்கனவே கிறிஸ்துவில் நம்முடையதாய் இருக்கிறது.
English
புற்றுநோயைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?