கேள்வி
வேதாகமத்தின் நியதி எப்படி எங்கு ஒருங்கிணைக்கப்பட்டது?
பதில்
நியதி என்பது தெய்வீக உந்துதலால் எழுதப்பட்ட புஸ்தகங்கள், ஆனால் அவை வேதாகமத்திற்கு சொந்தமானவைகள். வேதாகம நியதியை உறுதிப்படுத்துவது கடினமான ஒன்று. ஏனென்றால் வேதாகமம் எந்த புஸ்தகங்களெல்லாம் வேதாகமத்திலடங்கும் என்று கூறவில்லை. இந்த வேதாகமம் நியதிகளை முதலாவது யூத ரபீக்களும், ஆதி கிறிஸ்தவர்களும் உறுதிப்படுத்தினார்கள். முடிவாக தேவனே எந்த புஸ்தகங்கள் வேதாகமத்தின் நியதியில் இடம்பெற வேண்டும் என்று முடிவு செய்தார். வேத வாக்கியங்களின் புஸ்தகங்கள் தேவன் எழுத உந்தினதிலிருந்தே நியதியாக இருந்தது. அது தேவன் தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு எந்தெந்த புஸ்தகளெல்லாம் வேதாகமத்தில் இடம் பெற வேண்டும் என்று சான்று மூலம் மனமேற்கும்படி செய்துக் கொண்டிருந்தார்.
புதிய ஏறுபாட்டைக் காட்டிலும், பழைய ஏற்பாட்டின் நியதி தொகுப்பில் சிறிய சர்ச்சைகள் மட்டுமே இருந்தது. எபிரேய விசுவாசிகள் தேவனுடைய செய்திகளை கொண்டு வருபவர்களை அங்கீகரித்து அவருடைய எழுத்துக்களை தேவ உந்துதலின்படி எழுதப்பட்டது என்று ஏற்றுக் கொண்டார்கள். பழைய ஏற்பாட்டு தொகுப்பில் சில விவாதங்கள் இருந்ததுதான், ஆனால் கி.பி. 250-ல் எல்லோரும் எபிரேய வேதவாக்கியங்களை நியதியாக ஏற்றுக்கொண்டார்கள். ‘அபோகிரிபா’ என்பதைக் குறித்து மாத்திரம் விவாதம் இருந்தது, இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. பெரும்பாலான எபிரேய பண்டிதர்கள் ‘அபோகிரிபா’வை நல்ல வரலாற்று மற்றும் மதம் சம்பந்தமான ஆவணங்கள் என்று கருதுகிறார்கள், ஆனால் அவை எபிரேய வேதவாக்கியங்களுக்கு நிகராக அல்ல.
புதிய ஏற்பாட்டிற்கு , கண்டறிதல் மற்றும் தொகுத்தல் என்பது முதலாம் நூற்றாண்டின் கிறிஸ்தவ சபையில் தொடங்கியது. சில புதிய ஏற்பாட்டு புஸ்தகங்கள் முன்கூட்டியே கண்டறியப்பட்டது. பவுல் லூக்காவுடைய எழுத்துக்களை பழைய ஏற்பாட்டைப்போல அதிகாரமுடையதாய் கருதினார். ( I திமோத்தேயு 5:18, உபாகமம் 25:4, மற்றும் லூக்கா10:7). பேதுரு பவுலுடைய எழுத்துக்களை வேதவாக்கியங்களாக கண்டார். ( 2 பேதுரு 3:15-16). சில புதிய ஏற்பாட்டு புஸ்தகங்கள் சபைகளுக்குள்ளே பரவியது (கொலோசேயர் 4:16, தெசலோனெக்கியா 5:27). ரோமாபுரியின் கிளமென்ட் புதிய ஏற்பாட்டின் பத்து புஸ்தகங்களையாவது குறிப்பிட்டிருந்தார் (கி.பி. 95). அந்தியோக்கியாவின் இக்நேசியஸ் ஏழு புஸ்தகங்களை அங்கீகரித்தார் (கி.பி .115). யோவான் அப்போஸ்தலனுடைய சீஷனான பாலிகார்ப் பதினைந்து புஸ்தகங்களை அங்கீகரித்தார் (கி.பி.108). பின்பு, இரேனியஸ் 21 புஸ்தகங்களை குறிப்பிட்டிருந்தார் (கி.பி.185). ஹிப்போலைட்டஸ் 22 புஸ்தகங்களை கண்டறிந்தார் (கி.பி. 170-235). அதிகமான சர்ச்சைக்குள்ளான புதிய ஏற்பாட்டு புஸ்தகங்கள் எபிரெயர், யாக்கோபு, 2 பேதுரு, 2 யோவான் மற்றும் 3 யோவான் ஆகியவை.
முதல் ‘நியதி’ முரடோரியன் நியதி. இது கி.பி. 170-ல் தொகுக்கப்பட்டது. இது எல்லா புதிய ஏற்பாட்டு புஸ்தகங்களையும் உள்ளடக்கியது. ஆனால் எபிரெயர், யாக்கோபு மற்றும் 3 யோவானைத் தவிர கி.பி.363-ல் லவோதேக்கியாவின் பழைய ஏற்பாடு (அபோகிரிபாவையும் சேர்த்து) மற்றும் புதிய ஏற்பாட்டின் 27 புஸ்தகங்கள் மட்டுமே சபைகளில் படிக்கப்பட வேண்டும் என்று கூறியது. ஹிப்போவின் அவை (கி.பி.393) மற்றும் கார்தேகு அவை (கி.பி. 397) இதே 27 புஸ்தகங்களை அதிகாரபூர்வமாக உறுதி செய்தது.
இந்த அவைகள் ஒரு புதிய ஏற்பாட்டு புஸ்தகம் உண்மையாகவே பரிசுத்த ஆவியானவரால் உந்தப்பட்டு எழுதப்பட்டதா என்று கண்டறிவதற்கு சில விழிமுறைகளை பின்பற்றினர்.
1. அதை எழுதியவர் ஒரு அப்போஸ்தலனா அல்லது அப்போஸ்தலனோடு நெருங்கி இருக்கின்றாரா?
2. அந்த புஸ்தகம் கிறிஸ்துவின் சரீரத்தால் அதிகமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றதா?
3. அந்த புஸ்தகம் திடமான உபதேசங்கள் மற்றும் பாரம்பரிய போதனைகளை உள்ளடக்கியுள்ளதா?
4. அந்த புஸ்தகம் நல்ல ஒழுங்குமுறைகள் மற்றும் ஆவிக்குரிய காரியங்களின் சான்றாக பரிசுத்த ஆவியை பிரதிபலிக்கிறதாயிருக்கிறதா?
நாம் முக்கியமாக ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். சபை வேத்தினை தொகுக்கவில்லை. ஆதிசபையின் அவையே அதை தீர்மானித்தது. அந்த புஸ்தகங்கள் வேதாகமத்தில் இடம்பெற வேண்டும் என்று தேவன் மட்டுமே தீர்மானித்தார். தேவன் தான் ஏற்கனவே தீர்மானித்ததை தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குள் பங்களித்தார். வேதாகம புஸ்தகங்களை தொகுக்க மனிதனின் முறை தோல்வியடைந்தது, ஆனால் தேவன் தம்முடைய சர்வ வல்லமையினால், நம்முடைய அறியாமை, முரட்டாட்டம் எல்லாவற்றையும் மேற்கொண்டு, ஆதித்திருச்சபை தான் ஏவின புஸ்தகங்களை கண்டறியச் செய்தார்.
English
வேதாகமத்தின் நியதி எப்படி எங்கு ஒருங்கிணைக்கப்பட்டது?