settings icon
share icon
கேள்வி

கல்வியைப் பற்றி வேதாகமம் என்னச் சொல்லுகிறது?

பதில்


நீதிமொழிகள் புத்தகம் சாலமோன் தனது மகன்களுக்கு வழங்கிய அறிவுரைகளால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலில் இருந்து கற்றுக்கொள்ள மகன் அறிவுறுத்தப்படுகிறான், மேலும் கற்ற அறிவைப் பயன்படுத்துவதன் விளைவு ஞானம் என்று அழைக்கப்படுகிறது. கல்வி செயல்முறை பற்றி வேதம் நிறையக் கூறுகிறது, அது பெற்றோர் மற்றும் பிள்ளைகளுடன் தொடங்குகிறது. பெற்றோருக்குக் கட்டளையிடுவது, தங்கள் பிள்ளைகளை கர்த்தருக்குள் வளர்க்க வேண்டும் (எபேசியர் 6:4), மற்றும் கிரேக்க வார்த்தையான பைடியா (paideia, "வளர்ப்பு") பயிற்சி, கல்வி, அறிவுறுத்தல் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிள்ளைகள் தேவனைப் பற்றிக் கற்றுக் கொள்ளும்போது, அவர்கள் தங்கள் பெற்றோரை புத்திசாலித்தனமாக மதிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது, மேலும் அந்த மரியாதையின் அடிப்படையானது கல்வியின் தொடர்ச்சியான செயல்முறை மற்றும் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்துவதாகும். எல்லா உண்மையான அறிவுக்கும் அடிப்படையானது கர்த்தருக்குப் பயப்படுவதே என்று சாலமோன் கூறுகிறார் (நீதிமொழிகள் 1:7). இங்கே "பயம்" என்ற வார்த்தை பயங்கரம் அல்லது பயம் பற்றிய கருத்தைக் கொண்டிருக்கவில்லை, மாறாக அது தேவனின் பரிசுத்தம் மற்றும் மகத்துவத்திற்கான பிரமிப்பு மற்றும் பயபக்தி மற்றும் அவருக்கு ஏமாற்றம் அளிக்க அல்லது கீழ்ப்படியாமல் இருக்க தயக்கம் காண்பிப்பதாகும். நாம் சத்தியத்தை அறிந்தால், சத்தியம் நம்மை விடுதலையாக்கும் என்று இயேசு கூறினார் (யோவான் 8:32). பயத்தில் இருந்து விடுபடுவது சத்தியத்தைக் கற்றால் கிடைக்கும்.

ரோமருக்கு எழுதிய நிருபத்தில், அப்போஸ்தலனாகிய பவுல் பதினொரு முறை "அறிவு" அல்லது "அறிதல்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? நாம் தேவனுடைய வார்த்தையில் நம்மைப் பயிற்றுவிக்க வேண்டும், ஏனென்றால் நாம் ஆவிக்குரிய அறிவைப் பெறும்போது, அந்த அறிவை நடைமுறை வழிகளில் நம் வாழ்வில் பயன்படுத்தலாம், அவருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கலாம் மற்றும் ஆவியிலும் உண்மையிலும் கர்த்தருக்கு சேவை செய்ய தெய்வீக அறிவைப் பயன்படுத்தலாம் (ரோமர் 6:11-13). "நமக்குத் தெரியாததைப் பயன்படுத்த முடியாது" என்பது பழைய பழமொழி. வேதாகமக் கல்விக்கு வரும்போது இந்தக் கொள்கை இரட்டிப்பு உண்மையாயிருக்கிறது. வேதாகமத்தின் அர்த்தத்தில் நாம் எவ்வாறு கல்வி கற்பது? தேவனுடைய வார்த்தையைப் வாசிக்கிறோம், படிக்கிறோம், மனப்பாடம் செய்கிறோம், மற்றும் தியானிக்கிறோம்!

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுரை கூறினார்: “சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு” (2 தீமோத்தேயு 2:15). “படிப்பு” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அர்த்தம், விடாமுயற்சியைக் கொடுப்பது, தன்னையே பிரயாசப்படுத்துவது அல்லது தன்னைப் பிரயோகிப்பதற்கு அவசரப்படுத்துவது என்பதாகும். எனவே, நம்மைக் கற்றுக்கொள்வதற்காக அல்லது நம்மைப் பயிற்றுவிப்பதற்காக, தேவனுடைய வார்த்தையை விடாமுயற்சியுடன் படிக்க நம்மைப் பிரயோகிக்கச் சொல்லப்படுகிறது. தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய இரண்டாவது நிருபத்திலும் காரணம் காணப்படுகிறது. "வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" (2 தீமோத்தேயு 3:16-17). இங்குள்ள கருத்து என்னவென்றால், தேவனுடைய வார்த்தை நம்மை முழுமையாக்குகிறது அல்லது பக்குவப்படுத்துகிறது மற்றும் படித்த, உண்மையுள்ள ஊழியர்களாக இருக்க நம்மைச் சீர்பொருந்தப் பண்ணும்படிச் செய்கிறது.

வேதாகமக் கல்வி மறுபடியும் பிறந்த விசுவாசிகளை சீர்பொருந்தப் பண்ணும்படிச் செய்கிறது, இதனால் தேவன் அவர் நியமித்த கிரியையை அவர்களில் செய்ய முடியும் (எபேசியர் 2:10). வேதாகமக் கல்வி நம் மனதைப் புதுப்பிப்பதன் மூலம் நம்மை மாற்றுகிறது (ரோமர் 12:2), கிறிஸ்துவின் மனதில் அறிவைப் பயன்படுத்துவதற்கான தொடர்ச்சியான செயல்முறை, "அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்" ( 1 கொரிந்தியர் 1:31).

English



முகப்பு பக்கம்

கல்வியைப் பற்றி வேதாகமம் என்னச் சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries