கேள்வி
நாம் எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட (கோஷர்) வேண்டும் என்பதைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
லேவியராகமம் 11-ஆம் அதிகாரத்தில், இஸ்ரவேல் தேசத்திற்கு தேவன் கொடுத்த உணவு கட்டுப்பாடுகள் பட்டியலிடப்பட்டிருக்கிறது. உணவுச் சட்டங்களில் பன்றி இறைச்சி, ஓட்டுமீன், பெரும்பாலான பூச்சிகள், தோட்டி பறவைகள் மற்றும் பல்வேறு விலங்குகளை சாப்பிடுவதற்கான தடைகள் இருந்தன. உணவு விதிகள் ஒருபோதும் இஸ்ரவேலரைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாது. இஸ்ரவேலர்களை மற்ற எல்லா நாடுகளிலிருந்தும் வேறுபடுத்துவதே உணவுச் சட்டங்களின் நோக்கம் ஆகும். இந்த நோக்கம் முடிந்தபின், இயேசு எல்லா உணவுகளையும் சுத்தமாக இருக்கின்றதென்று அறிவித்தார் (மாற்கு 7:19). தேவன் அப்போஸ்தலனாகிய பேதுருவுக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்தார், அதில் முன்பு அசுத்தமானதாக இருந்த விலங்குகளை உண்ணலாம் என்று அறிவித்தார்: "தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று" (அப்போஸ்தலர் 10:15). இயேசு சிலுவையில் மரித்தபோது, அவர் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார் (ரோமர் 10:4; கலாத்தியர் 3:24-26; எபேசியர் 2:15). சுத்தமான மற்றும் அசுத்தமான உணவுகள் தொடர்பான பிரமாணங்களும் இதில் அடங்கும்.
எல்லா உணவுகளும் சுத்தமாக இருக்கின்றன என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எல்லோரும் விசுவாசத்தில் முதிர்ச்சியடையவில்லை என்பதை ரோமர் 14:1-23 வாயிலுள்ள வேதப்பாகம் நமக்குக் கற்பிக்கிறது. இதன் விளைவாக, "அசுத்தமான" உணவை சாப்பிடுவதால் புண்படுத்தப்படும் ஒருவருடன் நாம் இருந்தால், மற்ற நபரை புண்படுத்தாமல் இருக்க, அவ்வாறு செய்வதற்கான உரிமையை நாம் விட்டுவிட வேண்டும். நாம் எதை வேண்டுமானாலும் சாப்பிட நமக்கு உரிமை உண்டு, ஆனால் மற்றவர்கள் தவறாக இருந்தாலும் அவர்களை புண்படுத்த நமக்கு உரிமை இல்லை. இந்த யுகத்தில் உள்ள கிறிஸ்தவருக்கு, வேறொருவர் தனது / அவள் விசுவாசத்தில் தடுமாறாதவரை நாம் விரும்பும் அனைத்தையும் சாப்பிட சுதந்திரம் உள்ளது.
கிருபையின் புதிய உடன்படிக்கையில், நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதைவிட நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில்தான் வேதாகமம் அதிக அக்கறை கொண்டுள்ளது. உடல் பசி என்பது நம்மைக் கட்டுப்படுத்தும் நமது திறனின் ஒப்புமை. நம் உணவுப் பழக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், மனதின் பழக்கவழக்கங்கள் அதாவது காமம், பேராசை, அநீதியான வெறுப்பு / கோபம் போன்றவற்றையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம், மேலும் வதந்திகள் அல்லது சச்சரவுகளிலிருந்து நம் வாயைத் தடுக்க முடியாது. நம்முடைய பசி நம்மைக் கட்டுப்படுத்த விடக்கூடாது; மாறாக, நாம் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் (உபாகமம் 21:20; நீதிமொழிகள் 23:2; 2 பேதுரு 1:5-7; 2 தீமோத்தேயு 3:1-9; 2 கொரிந்தியர் 10:5).
English
நாம் எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட (கோஷர்) வேண்டும் என்பதைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?