கேள்வி
வெறுப்புக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
வேதாகமத்தின் அடிப்படையில், வெறுப்புக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் உள்ளன. தேவன் வெறுக்கும் காரியங்களை வெறுப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது; உண்மையில், இது தேவனுடன் உள்ள ஒரு சரியான நிலைப்பாட்டிற்கு மிகவும் சான்றாகும். "கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்" (சங்கீதம் 97:10அ). உண்மையில், கர்த்தருடன் நாம் எவ்வளவு நெருக்கமாக நடக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அவருடன் ஐக்கியங் கொள்கிறோம், நாம் உள்ளும் புறமும் பாவத்தில் அதிக உணர்வுடன் இருப்போம். தேவனுடைய நாமம் இழிவுபடுத்தப்படும்போதும், ஆவிக்குரிய பாசாங்குத்தனத்தைக் காணும்போதும், அப்பட்டமான அவிசுவாசத்தையும், தெய்வீகமற்ற நடத்தையையும் காணும்போது, நாம் துக்கமடைந்து கோபத்தால் எரிச்சலடையவில்லையா? தேவனின் பண்புகளை நாம் எவ்வளவு அதிகமாகப் புரிந்துகொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அவரைப் போலவே இருப்போம், மேலும் அவருடைய வார்த்தைக்கும் இயல்புக்கும் முரணான காரியங்களை நாம் வெறுக்கிறோம்.
இருப்பினும், எதிர்மறையான வெறுப்பு நிச்சயமாக மற்றவர்களுக்கு எதிரானதாக இருக்க வேண்டும். கர்த்தர் மலைப்பிரசங்கத்தில் வெறுப்பைக் குறித்துக் குறிப்பிடுகிறார்: "ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்" (மத்தேயு 5:22). நாம் கர்த்தருக்கு முன்பாகச் செல்வதற்கு முன்பு, நம்முடைய சகோதரனுடன் ஒப்புரவாகவேண்டும் என்பது மட்டுமல்லாமல், அதை விரைவாகச் செய்ய வேண்டும் என்றும் கர்த்தர் கட்டளையிடுகிறார் (மத்தேயு 5:23-26). கொலைபாதகச் செயல் நிச்சயமாகக் கண்டிக்கப்பட்டது, ஆனால் வெறுப்பு ஒரு 'இருதயம்' பாவம், மேலும் எந்தவொரு வெறுக்கத்தக்க எண்ணமும் செயலும் தேவனின் பார்வையில் ஒரு கொலைபாதகமாகும், அதற்காக நீதி கேட்கப்படும், ஒருவேளை இந்த வாழ்க்கையில் அல்ல, ஆனால் நியாயத்தீர்ப்பில் கேட்கப்படும். தேவனுக்கு முன்பாக வெறுப்பின் நிலை மிகவும் கொடூரமானது, வெறுக்கும் ஒரு மனிதன் ஒளிக்கு மாறாக இருளில் நடப்பதாகக் கூறப்படுகிறது (1 யோவான் 2:9, 11). மிக மோசமான நிலை என்னவென்றால், மதத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கும் ஒரு மனிதன், ஆனால் தன் சகோதரனுடன் பகையாகவே உள்ளான் என்கிற நிலையாகும். அத்தகைய நபர் ஒரு பொய்யன் என்று வேதம் அறிவிக்கிறது (1 யோவான் 4:20), மேலும் அவன் மனிதர்களை ஏமாற்றலாம், ஆனால் தேவனை அல்ல. எத்தனை விசுவாசிகள், சக விசுவாசிக்கு எதிராக பகையை (வெறுப்பை) வளர்த்துக் கொண்டதால், இறுதியாக விரும்பத்தகாதவர்களாக, எல்லாம் நன்றாக இருக்கிறது என்று பாசாங்கு செய்து, பல ஆண்டுகளாக வாழ்கிறார்கள்?
வெறுப்பு என்பது ஒரு விஷம், அது உள்ளிருந்து பயன்பாட்டை அழிக்கிறது, கசப்பை உருவாக்குகிறது, அது நம் இதயங்களையும் மனதையும் கெடுக்கிறது. அதனால்தான், “கசப்பான வேர்” நம் இருதயங்களில் தோன்ற வேண்டாம் என்று வேதம் சொல்கிறது (எபிரெயர் 12:15). வெறுப்பு ஒரு கிறிஸ்தவனின் தனிப்பட்ட சாட்சியையும் அழிக்கிறது, ஏனெனில் அது கர்த்தருடனும் மற்ற விசுவாசிகளுடனும் ஐக்கியங் கொள்வதிலிருந்து அவர்களை நீக்குகிறது. கர்த்தர் அறிவுறுத்தியதைச் செய்வதில் கவனமாக இருப்போம், எல்லாவற்றையும் பற்றி எல்லோரிடமும் சுருக்கமாமான கணக்கு வைப்போம், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், கர்த்தர் வாக்குறுதியளித்தபடி மன்னிக்க உண்மையுள்ளவராக இருப்பார் (1 யோவான் 1:9;2:1).
English
வெறுப்புக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?