கேள்வி
வேதாகமத்தின் பிழையற்ற தன்மை மூல கையெழுத்துப் பிரதிகளுக்கு மட்டுமே பொருந்துமா?
பதில்
பிழையற்ற தன்மை என்பது பிழை எதுவும் இல்லாததாகும். மூல கையெழுத்துப் பிரதிகள் (அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போன்றோர்களால் எழுதப்பட்ட மூல கையெழுத்துப் பிரதிகள்) மட்டுமே தேவனால் ஏவப்பட்டதும் மற்றும் பிழையற்றதும் என தெய்வீக வாக்குறுதியின் கீழ் உள்ளன. வேதாகமத்தின் புத்தகங்கள், அவை முதலில் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலின் கீழ் எழுதப்பட்டவை (2 தீமோத்தேயு 3:16-17; 2 பேதுரு 1:20-21), 100 சதவீதம் பிழையற்றது, துல்லியமானது, அதிகாரப்பூர்வமானது மற்றும் மெய்யானது. மூல கையெழுத்துப் பிரதிகளின் நகல்கள் சமமான பிழையற்றவை அல்லது பிழைகள் இல்லாதவை என்பதாக வேதாகம வாக்குறுதி எதுவும் இல்லை. வேதாகமம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான முறை நகலெடுக்கப்பட்டதால், சில நகலெடுப்போர் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம்.
இன்று நம்மிடம் உள்ள வேதாகம கையெழுத்துப் பிரதிகள் ஒன்றுக்கொன்று 99 சதவீத உடன்பாட்டில் உள்ளன என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஆமாம், சில சிறிய வேறுபாடுகள் மட்டுமே உள்ளன, ஆனால் வேதாகம உரையின் பெரும்பகுதி ஒரு கையெழுத்துப் பிரதியிலிருந்து மற்றொன்றுக்கு ஒத்ததாக இருக்கிறது. பெரும்பாலான சிறிய வேறுபாடுகள் நிறுத்தற்குறிகள், சொல் முடிவடைவது, சிறிய இலக்கணப் பிழைகள், சொல் வரிசை போன்றவற்றில் மட்டுமே உள்ளன—பிரச்சனைகள் யாவற்றையும் நகலெடுத்ததன் பிழைகள் அல்லது எழுத்துருக்களின் பிழைகளில் ஏற்படும் மாற்றங்கள் என எளிதில் விளக்கலாம். எந்தவொரு முக்கியமான இறையியல் போதனையும் ஏதேனும் பிழை அல்லது முரண்பாட்டால் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பதினைந்தாம் நூற்றாண்டின் வேதாகம கையெழுத்துப் பிரதிகள் மூன்றாம் நூற்றாண்டின் கையெழுத்துப் பிரதிகளுடன் முழுமையாக உடன்படுகின்றன. இன்று நம்மிடம் உள்ள வேதாகமம் ஏறக்குறைய 2,000-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் எழுதியதைப் போலவே இருக்கிறது என்பதில் நாம் முழுமையான நம்பிக்கையுடன் இருக்கலாம்.
"ஓ, அது ஒரு நகலெடுத்ததன் பிழை" என்று நாம் அவசரப்படக்கூடாது. வேதாகமத்தின் "பிழைகள்" தர்க்கரீதியான மற்றும் நம்பகமான முறையில் விளக்கப்படலாம். விளக்க முடியாத முரண்பாடுகள்—அல்லது விளக்குவது மிகவும் கடினமான முரண்பாடுகள்—இந்த கட்டத்தில் நமக்குத் தெரியாத ஒரு பதிலை நன்றாகக் கொண்டிருக்கலாம். நம்மால் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், தீர்வே இல்லை என்று அர்த்தமல்ல. ஒரு நகலெடுத்ததன் பிழை இருப்பதாக நம்புவது வேதாகமத்தின் "பிழையை" முழுமையாக அகற்றுவதற்கான கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்.
நமது நவீன கையெழுத்துப் பிரதிகளிலும் வேதாகமத்தின் மொழிபெயர்ப்புகளிலும் சிறிய தவறுகள் ஊடுருவியிருக்கலாம். நகலெடுப்பவர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் மனிதர்கள், அவர்கள் தவறு செய்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள வேதாகமம் நம்பமுடியாத அளவிற்கு துல்லியமானது என்பது தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது மற்றும் பாதுகாக்கப்பட்டிருப்பதற்கு ஒரு சான்று.
நாம் இன்னும் வேதாகமத்தை நம்பலாமா? நிச்சயமாக முற்றிலும் நம்பலாம்! நவீன வேதாகம மொழிபெயர்ப்புகளும் தேவனுடைய வார்த்தைதான். கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே இன்றுள்ள வேதாகமமும் அதிகாரப்பூர்வமானது. வேதாகமத்தை தேவனுடைய செய்தி என்று நாம் முழுமையாக நம்பலாம். ஆமாம், தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது மற்றும் பிழையற்ற தன்மை பற்றிய வேதாகமத்தின் வாக்குறுதிகள் நேரடியாக மூல கையெழுத்துப் பிரதிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் அது நமது நவீன வேதாகமத்தின் துல்லியத்தையும் அதிகாரத்தையும் பாதிக்காது. தேவனுடைய வார்த்தை எப்போதாவது தவறுகிறது மற்றும் நகலெடுப்பவர்கள் பிழை மற்றும் மொழிபெயர்ப்பாளர்களின் பிழைகள் இருந்தபோதிலும், அது என்றென்றும் நிலைத்திருக்கும்.
English
வேதாகமத்தின் பிழையற்ற தன்மை மூல கையெழுத்துப் பிரதிகளுக்கு மட்டுமே பொருந்துமா?