கேள்வி
நான் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால் வேதாகமம் பிழையற்றது என்பதை நம்ப வேண்டுமா?
பதில்
வேதாகமம் பிழையற்றது மற்றும் தேவனால் அருளப்பட்டது என்று விசுவாசிப்பதினால் நாம் இரட்சிக்கப்படுவதில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, பாவதிலிருந்து மனந்திரும்பி நம் இரட்சகராக விசுவாசித்தால் இரட்சிக்கப்படுகிறோம் (யோவான் 3:16, எபேசியர் 2:8-9; ரோமர் 10:9-10). அதே சமயத்தில், இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நாம் கற்றுக்கொள்வதே வேதாகமம் மூலமாக மட்டுமேயாகும் (2 கொரிந்தியர் 5:21; ரோமர் 5:8). இரட்சிக்கப்படுவதற்காக வேதாகமத்திலுள்ள எல்லாவற்றையும் நாம் நம்புவதில்லை, ஆனால் வேதாகமத்தால் பிரசங்கிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவை நாம் நம்புகிறோம். தேவனுடைய வார்த்தையாக வேதாகமத்தை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்றும் வேதாகமம் கற்பிக்கும் எல்லாவற்றையும் நாம் முழுமையாக நம்ப வேண்டும், ஆனால் சில நேரங்களில் அது இரட்சிப்பிற்கு பின்னர் வருகிறது.
மக்கள் முதலில் இரட்சிக்கப்படுகையில், அவர்கள் பொதுவாக பைபிளைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அறிந்திருக்கிறார்கள். இரட்சிப்பு என்பது நமது பாவம் நிறைந்த நிலையை புரிந்துகொள்வதாகும், வேதாகமத்தின் பிழையற்ற நிலையைப் பற்றிய புரிதல் அல்ல. பரிசுத்த தேவனுக்கு முன்பாக நம் சொந்த நலனுக்காக நாம் நிற்க முடியாது என்பதை நம் மனசாட்சி கூறுகிறது. நாம் அதை செய்ய போதுமான நீதிமான்கள் இல்லை என்று தெரியும், எனவே நாம் அவரிடமாக திரும்பி மற்றும் நம்முடைய பாவத்திற்கான விலையை செலுத்துவதில் சிலுவையில் அவரது ஒரே பேறான குமாரன் பலியானதை ஏற்றுக்கொள்வதாகும். நாம் அவரில் முழு நம்பிக்கை வைக்கிறோம். அந்த கட்டத்தில் இருந்து, நாம் முற்றிலும் புதிய சுபாவம், பரிசுத்தம் மற்றும் பாவத்தால் கறைபடாதவர்களாக இருக்கிறோம். தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களில் வாழ்கிறார், நித்தியத்திற்காக நம்மை முத்திரையிடுகிறார். நாம் அந்தப் இடத்திலிருந்து முன்னேறுகிறோம், ஒவ்வொரு நாளும் கதேவனை நேசிப்பதும், அவருக்கு கீழ்ப்படிவதுமாய் செயல்படுகிறோம். இந்த "முன்னோக்கி செல்கிற" ஒரு பகுதியை தினமும் அவருடைய வார்த்தையின் மீது உட்கொள்ளுகிறோம், மேலும் அவருடன் நம் நட்பை வளர்க்கிறோம். இந்த அற்புதத்தை நம் வாழ்வில் நிறைவேற்றுவதற்கான வல்லமை வேதாகமத்திற்கு மட்டுமே உள்ளது.
வேதாகமத்தில் போதிக்கப்பட்டுள்ளபடி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆள்தன்மை மற்றும் வேலையை நாம் விசுவாசிப்போமானால், நாம் இரட்சிக்கப்படுவோம். என்றாலும், இயேசு கிறிஸ்துவை நம்புவோமானால், பரிசுத்த ஆவியானவர் நம் இருதயத்திலும் மனதிலும் கிரியை செய்வார், வேதாகமமே உண்மையானது என்பது விசுவாசிக்கும்படியும் நமக்கு உதவி செய்வார் (2 தீமோத்தேயு 3:16-17). வேதவாக்கியங்களின் பிழையற்ற தன்மையைக் குறித்து நம் மனதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அதைக் கையாள சிறந்த வழி, அவருடைய வார்த்தையைப் பற்றிய உறுதியையும் அவருடைய வார்த்தையிலுள்ள நம்பிக்கையையும் நமக்குத் தரும்படி அவரிடத்தில் கேட்க வேண்டும். நேர்மையாகவும் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்களுக்கு அவர் பதில் சொல்லத் தயங்குவதில்லை (மத்தேயு 7:7-8).
English
நான் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால் வேதாகமம் பிழையற்றது என்பதை நம்ப வேண்டுமா?