கேள்வி
வேதாகமம் தெய்வீக உந்துதலால் வந்தது என்பதற்கு அர்த்தம் என்ன?
பதில்
வேதாகமத்தை மக்கள் உந்தப்பட்டது என்று கூறும்போது அவர்கள் தேவன் மனித எழுத்தாளர்களை தெய்வீக உந்துதல் கொடுத்து தாங்கள் எழுதுகிறது தேவனுடைய வார்த்தையாகவே இருக்கும்படிச் செய்தார் என்று கூறுகின்றனர். வேதவாக்கியங்களின்படி பார்க்கும் போது ‘உந்தப்படுதல்’ என்பதற்கு வேதாகமம் உண்மையாகவே தேவனுடைய வார்த்தை என்பதையும் எல்லாப் புத்தகத்திலும் தனித்துவம் வாய்ந்தது என்றும் அர்த்தம்.
எந்த அளவிற்கு வேதாகமம் உந்துதலால் எழுதப்பட்டது என்பதற்கு பல கருத்துகள் உள்ளன. வேதாகமம் அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வார்த்தையும் தேவனிடத்திலிருந்துதான் வருகின்றது என்று உறுதிப்படுத்துகின்றது (1 கொரிந்தியர் 2:12-13, 2 திமோத்தேயு 3:16-17). வேதவாக்கியங்களைக் குறித்த இந்த கருத்து ‘‘வர்பல் பிளினரி’’ உந்துதல் என்று கூறப்படுகின்றது. அப்படியென்றால் வெறும் கருத்துக்களும் எண்ணங்களும் மாத்திரம் அல்ல, ஒவ்வொரு வார்த்தையும் என்று அர்த்தம். அந்த உந்துதல் வேதவாக்கியங்களின் எல்லாப் பகுதியிலும் எல்லா தலைப்புக்கும் பொருந்தும் (பிளினரி). சிலர் வேதாகமத்தில் மதம் சார்ந்த சில பகுதிகள், அல்லது கருத்துக்கள், எண்ணங்கள் மாத்திரமே உந்துதலால் எழுதப்பட்டது என்று நம்புகிறார்கள். ஆனால் இந்த கருத்து வேதாகமம் தன்னைப் பற்றியே கூறும் கோரிக்கைக்கு மாறாக உள்ளது. முழுமையும் உந்தப்பட்டது என்பதே தேவனுடைய வார்த்தையின் முக்கியமான இயல்பாகும்.
எந்த அளவிற்கு உந்தப்பட்டது என்பதை 2 திமோத்தேயு 3:16-இல் பார்க்கலாம். ‘‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக’’ இந்த வசனம் எல்லா வேதவாக்கியங்களுமே தேவனால்தான் அருளப்பட்டதென்றும், அது நம்முடைய பிரயோஜனத்துக்காகவே என்றும் கூறுகின்றது.
வேதாகமத்தில் சில பகுதிகள் மாத்திரம் மதம் சம்பந்தப்ட்ட உபதேசங்களை உடையதாயில்லை. ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையிலிருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் அதை உள்ளடக்கியுள்ளது. தேவனால் அருளப்பட்டதாயிருக்கிறதினாலே, உபதேசங்களை ஸ்தாபிக்கிற அதிகாரமுடையதாயிருக்கிறது. மனிதன் தேவனோடு எப்படி சரியான உறவில் இருப்பது என்று போதிப்பதுமாயிருக்கிறது. வேதாகமம் தேவனால் உந்தப்பட்டது மாத்திரமல்லாமல், நம்மை மாற்றவும், பரிபூரண படுத்தவும் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை உடையதாயிருக்கிறது. வேறென்ன நமக்கு?
தெய்வீக உந்துதல் பற்றிக்கூறும்போது வேறொரு வசனம் 2 பேதுரு1:21, இந்த வசனம் தேவன் வித்தியாசமான ஆள்தத்துவம் உள்ள மனிதர்களையும், வித்தியாசமான எழுத்து பாணியுடையவர்களையும் பயன்படுத்தினாலும் தேவன் அவர்கள் எழுதின ஒவ்வொரு வார்த்தையையும் தெய்வீக உந்துதலினால் எழுதவைத்தார். இயேசு தாமே இந்த கருத்தை கூறுகின்றார்.‘‘நியாயப்பிமானத்தையானாலும், தீர்க்கதரிசனங்களையானா லும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள், அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும், பூமியம் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமானத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும் அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’’. (மத்தேயு 5:17-18). இந்த வசனங்களில் இயேசு மறுபடியும் தேவனுடைய வார்த்தையின் துல்லியத்தன்மையை இன்னும் சின்ன உறுப்புகளும் மாறாமல் இருக்கிறது . ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தை என்று கூறுகின்றார்.
ஆகவே வேதவாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டது என்பதால் அது பிழையில்லாமல் அதிகாரமுள்ளதாயிருக்கிறது. தேவனைக்குறித்த சரியான பார்வை நம்மை அவருடைய வார்த்தையைக் குறித்த சரியான பார்வையைத் தருகின்றது. ஏனென்றால் தேவன் எல்லாம் வல்லவரும், எல்லாம் அறிந்தவரும் பரிபூரணமுள்ளவருமாயிருக்கிறார். ஆகவே இயல்பாகவே அவருடைய வார்த்தையும் அதே தன்மையை உடையதாயிருக்கிறது. வேதவாக்கியங்கள் தேவனால் அருளப்பட்டது என்று கூறுகின்ற வசனங்களே அவை பிழையில்லாததும் அதிகாரமுள்ளதும் என்று கூறுகின்றது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் மறுக்க முடியாத அதிகாரமுடைய தேவனடைய வார்த்தை என்பதை வேதாகமே கூறுகின்றது.
English
வேதாகமம் தெய்வீக உந்துதலால் வந்தது என்பதற்கு அர்த்தம் என்ன?