settings icon
share icon
கேள்வி

வேதாகமத்தை எழுத்தியல் பிரகாரமாக வியாக்கியானம் பண்ண முடியுமா/வேண்டுமா?

பதில்


நாம் வேதாகமத்தை எழுத்தியல் பிரகாரமாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்பது மட்டுமல்லாமல், நாம் வேதாகமத்தை எழுத்தியல் பிரகாரத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். வியாக்கியானத்திற்கான ஒரு எழுத்தியல் பிரகாரமான அணுகுமுறைதான் தேவன் நமக்கு என்ன தொடர்பு கொள்ள முயல்கிறார் என்பதைத் தீர்மானிக்கும் ஒரே வழி. எந்தவொரு இலக்கியத்தையும் நாம் படிக்கும்போது, அதை எழுதிய எழுத்தாளர் என்ன தொடர்பு கொள்ள விரும்புகிறார் என்பதை நாம் முதலில் தீர்மானிக்க வேண்டும். பலர் ஒரு வசனம் அல்லது வேதத்தின் ஒரு பத்தியை மட்டும் படித்துவிட்டு, பின்னர் அவற்றில் வருகின்ற சொற்கள், சொற்றொடர்கள் அல்லது பத்திகளுக்கு தங்கள் சொந்த வரையறைகளை உருவாக்கி, பின்னணி மற்றும் எழுத்தாளரின் நோக்கத்தை புறக்கணிப்பார்கள். ஆனால் இது தேவனின் நோக்கமல்ல, அதனால்தான் தேவன் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கச் சொல்கிறார் (2 தீமோத்தேயு 2:15).

நாம் வேதாகமத்தை எழுத்தியல் பிரகாரம் எடுத்துக்கொள்ள ஒரு காரணம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதை எழுத்தியல் பிரகாரம் எடுத்துக் கொண்டார் என்பதே. பழைய ஏற்பாட்டிலிருந்து கர்த்தராகிய இயேசு மேற்கோள் காட்டும்போதெல்லாம், அவர் அதன் நேரடி விளக்கத்தை கூறி எழுத்தியல் பிரகார வியாக்கியானத்தை அவர் நம்பினார் என்பது எப்போதும் தெளிவாக இருந்தது. உதாரணமாக, லூக்கா 4-ல் இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, அவர் பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டி பதிலளித்தார். உபாகமம் 8:3, 6:13 மற்றும் 6:16 இல் உள்ள தேவனுடைய கட்டளைகள் எழுத்தியல் பிரகாரம் இல்லை என்றால், இயேசு அவற்றைப் பயன்படுத்தியிருக்க மாட்டார், அவர்கள் சாத்தானின் வாயை அடைத்துபோட அவை சக்தியற்றவைகளாக இருந்திருக்கும்.

சீடர்களும் கிறிஸ்துவின் கட்டளைகளை (வேதாகமத்தின் ஒரு பகுதி) எழுத்தியல் பிரகாரமாக எடுத்துக் கொண்டனர். மத்தேயு 28:19-20 இல் சீடர்களை உலகமெங்கும் சென்று சுவிசேஷத்தைப் பிசங்கித்து மேலும் அநேகரை சீடர்களாக ஆக்கும்படி இயேசு கட்டளையிட்டார். அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில், சீடர்கள் இயேசுவின் கட்டளையை ஏற்று எழுத்தியல் பிரகாரம் உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்து "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசியுங்கள், அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்" என்று கூறினார்கள் (அப். 16:31). நாமும் இயேசுவின் வார்த்தைகளை எழுத்தியல் பிரகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே அவர் வந்ததார் (லூக்கா 19:10), நம் பாவத்திற்கான தண்டனையை செலுத்தினார் (மத்தேயு 26:28), மற்றும் நித்திய ஜீவனை வழங்கினார் (யோவான் 6:54) போன்றவையை நாம் நம்பவில்லை என்றால், நம்முடைய இரட்சிப்பில் நாம் எப்படி உறுதியாக இருக்க முடியும்?

வேதாகமத்தை எழுத்தியல் பூர்வமாக எடுத்துக்கொள்வது இன்னும் பேசும் உருவங்களை அனுமதிக்கிறது. "சூரியன் உதிக்கிறது" என்று ஒருவர் சொல்வது ஒரு உருவத்தின் உதாரணம். தொழில்நுட்ப ரீதியாக, சூரியன் உதயமாவதில்லை; பூமி சூரியன் உதிப்பது போல் தோற்றமளிக்கும் வகையில் சுழல்கிறது. ஆயினும்கூட, கிட்டத்தட்ட அனைவரும் இந்த வகையான தகவல்தொடர்புகளை அனுமதிக்கும் அளவுக்கு பேச்சின் உருவகங்களை நன்கு புரிந்துகொள்கிறார்கள். வேதாகமத்தில் வெளிப்படையான பேச்சின் உருவகங்கள் உள்ளன, அவை எழுத்தியல் பூர்வமாக எடுக்கப்படக்கூடாது. (சங்கீதம் 17:8 ஐப் பார்க்கவும்.)

இறுதியாக, வேதாகமத்தின் எந்தப் பகுதிகள் எழுத்தியல் பூர்வமானவை, எது இல்லை என்பதற்கான இறுதி நடுநிலைமைகளை நாம் நம்மை உருவாக்கும் போது, நாம் தேவனுக்கு மேலே நம்மை உயர்த்திக் கொள்கிறோம். அவர் நம்முடன் தொடர்புகொள்வதற்கு அவருடைய வார்த்தையை நமக்குக் கொடுத்தார். எழுத்தியல் பூர்வமற்ற விளக்கத்தால் தவிர்க்க முடியாமல் ஏற்படும் குழப்பம் மற்றும் சிதைவுகள் அடிப்படையில் வேதத்தை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கும். வேதாகமம் நமக்குள்ள தேவனுடைய வார்த்தையாகும், அவர் அதை எழுத்தியல் பூர்வமானது மற்றும் முழுமையானது என நாம் நம்பவேண்டும் என விரும்புகிறார்.

English



முகப்பு பக்கம்

வேதாகமத்தை எழுத்தியல் பிரகாரமாக வியாக்கியானம் பண்ண முடியுமா/வேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries