கேள்வி
நெக்ரோமான்சி (மரித்த ஆவிகளுடன் பேசும் மாந்திரிகம்) பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
எதிர்காலத்தை மாயாஜாலமாக வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக அல்லது நிகழ்வுகளின் போக்கில் செல்வாக்கு செலுத்தும் நோக்கங்களுக்காக இறந்தவர்களின் ஆவிகளைக் கற்பனை செய்வதே நெக்ரோமான்சி (மரித்த ஆவிகளுடன் பேசும் மாந்திரிகம்) என வரையறுக்கப்படுகிறது. வேதாகமத்தில், நெக்ரோமான்சி "கணித்தல்", "சூனியம்" மற்றும் "அஞ்சனம் பார்த்தல்" என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது கர்த்தருக்கு ஒரு அருவருப்பானது என்று பல முறை தடைசெய்யப்பட்டுள்ளது (லேவியராகமம் 19:26; உபாகமம் 18:10; கலாத்தியர் 5:19-20; அப்போஸ்தலர் 19:19). இது கர்த்தர் மிகக் கடுமையாக எதிர்த்துப் பேசும் ஒன்றாகும், ஆகவே எந்தத் தீமையும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதுபோல இதுவும் தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு இரு மடங்கு காரணம் உள்ளது.
முதலாவதாக, நெக்ரோமான்சி பிசாசுகளை உள்ளடக்கியது மற்றும் அதைப் பயிற்சி செய்பவரை பிசாசு தாக்குதலுக்கு உட்படுத்தும். சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் நம்மை அழிக்க முயல்கின்றன, சத்தியத்தையோ ஞானத்தையோ அவை நமக்குக் கொடுக்கவில்லை. நம்முடைய எதிராளியான பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல யாரையாவது விழுங்கலாமா என்று வகைத்தேடி சுற்றித் திரிகிறான் என்று நமக்குச் சொல்லப்படுகிறது (1 பேதுரு 5:8). இரண்டாவதாக, நெக்ரோமான்சி தகவலைப் பெருவதற்காக கர்த்தரைச் சார்ந்திருக்காது, ஆனால் அவரிடம் கேட்கும் அனைவருக்கும் இலவசமாக ஞானத்தைக் கொடுப்பதாக வாக்களிக்கும் கர்த்தரை வேதம் அறிவிக்கிறது (யாக்கோபு 1:5). இது குறிப்பாக சொல்லப்படுகிறது, ஏனென்றால் கர்த்தர் எப்போதும் நம்மை சத்தியம் மற்றும் ஜீவனுக்கு வழிநடத்த விரும்புகிறார், ஆனால் பிசாசுகள் எப்போதும் நம்மை பொய்கள் மற்றும் கடுமையான சேதத்திற்கு வழிநடத்த விரும்புகின்றன.
மரித்தவர்களின் ஆவிகள் குறித்து தகவல் பெறலாம் என்ற கருத்து தவறானது. அத்தகைய தொடர்பு கொள்ள முயற்சிப்பவர்கள் தவிர்க்க முடியாமல் பிசாசின் ஆவிகளை தொடர்பு கொள்கிறார்கள், மரித்த அன்புக்குரியவர்களின் ஆவிகள் அல்ல. மரித்தவர்கள் உடனடியாக பரலோகம் அல்லது நரகத்திற்குச் செல்கிறார்கள் - அவர்கள் இயேசுவை இரட்சகராக நம்பினால் பரலோகம் மற்றும் அவர்கள் விசுவாசியாவிட்டால் நரகத்திற்குச் செல்கிறார்கள். மரித்தவர்களுக்கும் உயிருடன் இருப்பவர்களுக்கும் தொடர்பு இல்லை. எனவே, மரித்தவர்களைத் தேடுவது தேவையற்றது மற்றும் மிகவும் ஆபத்தானது.
English
நெக்ரோமான்சி (மரித்த ஆவிகளுடன் பேசும் மாந்திரிகம்) பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?