கேள்வி
வேதாகமம் இந்த காலத்திற்கும் பொருத்தமாக உள்ளதா?
பதில்
‘‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும், ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்று எபிரேயர் 4:12 கூறுகின்றது. வேதாகமத்தை எழுதி முடித்து 1900 வருஷங்கள் ஆகியும் அதனுடைய துல்லியமும், அன்றாட வாழ்வுக்கு உண்டான தொடர்பும் மாறாமல் இருக்கிறது. வேதாகமம் தான், தேவன் அவரைக்குறித்தும் மனுக்குலத்தின் மீது அவருடைய நோக்கம் குறித்தும் உள்ள எல்லா வெளிப்பாடுகளுக்கும் ஒரே மூலக்காரணமாக உள்ளது.
வேதமாகமம் இயற்கை உலகத்தைக் குறித்தான மிக அதிகமான தகவல்களை அளிக்கின்றது என்று அறிவியலாராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. லேவியராகமம் 17:1, பிரசங்கி 1:16-17, யோபு 36:27-29, சங்கீதம் 102:25-27 மற்றும் கொலோசியர் 1:16-17 ஆகிய வசனங்கள் இதைக்குறித்து கூறுகின்றது. தேவன் மனுக்குலத்தை மீட்கும் திட்டத்தை பற்றி வேதாகமம் கூறும்போது பல வித்தியாசமான கதாபாத்திரங்களைக் குறித்து மிகத் தெளிவாக விளக்குகின்றது. இந்த விளக்ககங்களில் மனிதனுடைய நடத்தை மற்றும் மனோபாவங்களைக் குறித்து அதிகமான தகவல்களை வேதாகமம் அளிக்கின்றது. நம்முடைய அன்றாட வாழ்வின் அனுபவங்கள், இந்த தகவல்கள் எந்த உளவியல் புத்தகத்தில் இருப்பதைக் காட்டிலும் துல்லியமாகவும் விளக்கமாகவும் மனிதனின் நிலையைக் குறித்து கூறியிருப்பதைக் காட்டுகின்றது. வேதாகமத்திலுள்ள பல வரலாற்று உண்மைகளை வேதத்திற்கு வெளியிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. வரலாற்று ஆராய்ச்சிகள் ஒரேவிதமான சம்பவங்கள் வேதத்தின்படியும் வேதத்திற்கு வெளியிலும் ஒரேவிதமாக இருப்பதைக் காட்டுகின்றது.
ஆகிலும் வேதாகமம் ஒரு வரலாற்று புத்தகமோ உளவியல் புத்தக மோ அல்லது அறிவியல் நாட்குறிப்போ கிடையாது. வேதாகமம் என்பது தேவன் அவர் யார் என்பதைக் குறித்தும், மனுக்குலத்தைக் குறித்த அவருடைய விருப்பங்கள் திட்டங்கள் ஆகியவற்றைக் குறித்தும் கொடுத்த விளக்கமாகும். இந்த வெளிப்பாட்டின் முக்கியமான கருப்பொருள் என்னவெனில் நாம் பாவத்தினால் தேவனிடத்திலிருந்து பிரிந்ததும், குமாரனாகிய இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டு பலியானதால் ஐக்கியம் மீட்கப்பட ஒரு வழி உண்டாக்க பட்டதுமே. நமக்கு மீட்பு அவசியம் என்பதில் மாற்றமில்லை, தேவனுடைய விருப்பமும் நம்மை அவரிடத்தில் ஒப்புரவாக்கிக் கொள்வதே. வேதாகமம் துல்லியமான ஒன்றுக்கொன்று தொடர்புடைய அநேக காரியங்களைக் கொண்டுள்ளது. வேதாகமத்தின் மிக முக்கியமான செய்தி மீட்பு. இது ஒட்டு மொத்த மனுக்குலத்திற்கும் ஏற்புடையதாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தையை என்றுமே காலம் கடந்ததாகவோ தள்ளிவைக்கவோ அல்லது திருத்தவோ தேவையில்லை. கலாச்சாரங்கள் மாறுகின்றது, சட்டங்கள் மாறுகின்றது, தலைமுறைகள் வந்து போகின்றன ஆனால் தேவனுடைய வார்த்தையோ அது எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை ஏற்புடையதாகவே இருக்கின்றது. எல்லா வேதவாக்கியங்களும் இன்று தெளிவாக அப்பியாசப்படுத்தமுடியாவிட்டாலும் எல்லா வேதவாக்கியங்களிலும் இன்றைக்கும் நாம் கடைபிடிக்க வேண்டிய சத்தியங்கள் அடங்கியுள்ளன.
English
வேதாகமம் இந்த காலத்திற்கும் பொருத்தமாக உள்ளதா?