கேள்வி
வேதாகமம் அடிமைத்தனத்தை பொறுத்துக்கொள்ளுகிறதா?
பதில்
அடிமைத்தனம் என்பதை கடந்த காலங்களில் இருந்தது என்கிற மனோபாவம் பொதுவாக இருந்து வருகிறது. ஆனால், அடிமைத் தொழிலாளர்கள், பாலியல் வர்த்தகம், மற்றும் கைப்பற்றப்பட்ட பகுதியில் வாழும் மக்கள் ஆகிய பலவிதமான அடிமைத்தனத்தில் இன்னும் 27 மில்லியன் உலக மக்கள் இருந்து வருகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்டெடுடத்த இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம் முதன்மையானவர்களாய் இந்த மனித அடிமைத்தனத்தை இன்றைய உலகத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். ஏன் வேதாகமம் அடிமைத்தனத்திற்கு எதிராக உறுதியான கருத்தை சொல்லவில்லை என்பது கேள்வி? வேதாகமம் ஏன் மனிதனை அடிமைப்படுத்துகிறதற்கு ஆதரவு தெரிவிக்கிறது?
குறிப்பிட்டு வேதாகமம் அடிமைத்தன முறையை கண்டிக்கிறது இல்லை. மாறாக அது அடிமைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்குகிறது (உபாகமம் 15:12-15; எபேசியர் 6:9; கொலோசெயர் 4:1). ஆனால் அடிமைத்தனத்தை முற்றிலும் தடை செய்யவில்லை. சிலர் வேதாகமம் எல்லா விதமான அடிமைத்தனத்தையும் கண்டுகொள்ளவில்லை என்கிற கண்ணோட்டத்தில் இதை பார்க்கிறார்கள். வேதாகமத்தின் நாட்களில் காணப்பட்ட அடிமைத்தனம் கடந்த சில நூற்றாண்டுகளாக உலகின் பல பகுதிகளில் காணப்படுகிற அடிமைத்தனத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை அநேகர் புரிந்துகொள்ள தவறுகின்றனர். வேதாகமத்தில் சொல்லப்பட்ட அடிமைத்தனம் இனம் சார்ந்த அடிமைத்தனமல்ல. ஜனங்கள் தேசிய இனம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் அடிமைப்படுத்தவில்லை. வேதாகமத்தின் நாட்களில் அடிமைத்தனம் பெரும்பாளும் பொருளாதாரத்தின் அடிப்படையில் இருந்தது, அதாவது சமுதாய அந்தஸ்தை சார்ந்து இருந்தது. தங்களுடைய கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாதபோது அல்லது குடும்பத்தினுடைய தேவைகளுக்காக மக்கள் தங்களையே அடிமைகளாக விற்றார்கள். புதிய ஏற்பாட்டு நாட்களில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகளும் கூட அடிமைகளாக சில பகுதிகளில் இருந்தனர். தங்களுடைய தேவைகளெல்லாம் தங்களுடைய எஜமான்களால் சந்திக்கப்படும் என்பதற்காக சிலர் அடிமைகளாக இருப்பதை தேர்வு செய்துக்கொண்டனர்.
கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அடிமைத்தனம் மனிதனின் நிறத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஐக்கிய நாடுகளில் அநேக கருப்பு இனத்தினர் அவர்களுடைய தேசிய அந்தஸ்தின் காரணமாக அடிமைகளாகவே கருதப்பட்டனர். அநேக அடிமைகளின் முதலாளிகள் கருப்பு இன மக்களை தாழ்ந்தவர்கள் என்றே விசுவாசித்தனர். வேதாகமம் இனம் சார்ந்த அடிமைதனத்தை கண்டிக்கிறது மற்றும் எல்லா மனிதர்களும் தேவனுடைய சிருஷ்டிப்பே அவர்கள் அனைவரும் தேவ சாயலில் படைக்கப்பட்டுள்ளனர் என்பதே வேதாகமத்தின் போதனையாகும் (ஆதியாகமம் 1:27). அதே நேரத்தில் பழைய ஏற்பாடு பொருளாதார அடிப்படையிலான அடிமைத்தனத்தை அனுமதித்து அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. வேதாகமம் அனுமதித்த அடிமைத்தனம் கடந்த சில நூற்றாண்டுகளாக இந்த உலகத்தில் இருந்து வருகிற இன அடிமைத்தனத்திற்கு ஒத்தது அல்ல என்பது முக்கிய பிரச்சனையாகும்.
மேலும் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் ஆள் கடத்தலை, கடுமையாக கண்டிக்கிறது அதுவே ஆப்பிரிக்காவில் 19ம் நூற்றாண்டில் நடைபெற்றது. ஆப்பிரிக்கா தேசம் அடிமைகளை வேட்டையாடுபவர்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் அடிமைகளை வேட்டையாடி அடிமைகளை வாங்குபவர்களிடம் விற்றுவிடுகின்றனர். அப்படி விற்க்கப்பட்டவர்கள் புதிய உலகத்திலே தோட்டங்களிலும் பண்ணைகளிலும் அடிமைகளாக பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இந்த காரியத்தை தேவன் அருவருக்கிறார். மோசேயின் நியாயப்பிரமாணத்தின் படி இந்த குற்றத்திற்கான தண்டனை மரணமே: “ஒருவன் ஒரு மனிதனை திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன்" (யாத்திராகமம் 21:16). அதை போலவே புதிய ஏற்பாடும் அடிமைகளை வாங்கும் மற்றும் விற்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை தெய்வபக்தியில்லாதவர்களோடும் பாவிகளோடும் பட்டியலிடுகிறது. மேலும் இவர்கள் தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்கள் கொலைபாதகர்கள், வேசிக்கள்ளர்கள், பொய்யருக்கு பொய்யாணை இடுகிறவர்களோடு இணைத்து சொல்லப்பட்டுள்ளது (1 தீமோத்தேயு 1:8-10).
வேதாகமத்தினுடைய நோக்கம் இரட்சிப்புக்கான வழியை காட்டுவதேயல்லாமல் சமுதாயத்தை சீர்திருத்துவது அல்ல என்பது மற்றொரு முக்கிய கருத்து ஆகும். வேதாகமம் அநேக நேரங்களில் உள்ளும் புறமுமான பிரச்சனைகளை அனுகுகிறது. ஒரு நபர் தேவனுடைய இரட்சிப்பை அடைந்ததன் மூலம் அன்பு, இரக்கம் மற்றும் தேவனுடைய கிருபையை அனுபவிக்கிறான் ஏனென்றால், தேவன் அவனுடைய ஆத்துமாவை புதுப்பிப்பார், அவன் யோசிக்கிற மற்றும் செயல்படுகிற முறை மாறுகிறது. ஒரு நபர் தேவனுடைய ஈவாகிய இரட்சிப்பை மற்றும் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பை அனுபவிப்பானேயானால் தேவன் அவனுடைய ஆத்துமாவைப் புதுப்பித்ததை நினைவுக்கூர்ந்து பிற மனிதர்களை அடிமைபடுத்துவது தவறானது என்று உணர்ந்துகொள்வான். பவுலோடு இணைந்து அடிமையையும் “தேவனுக்குள்ளாக தன்னுடைய ஒரு சகோதரன்” (பிலேமோன் 1:16) என்று பார்க்க ஆரம்பிப்பான். தேவனுடைய கிருபைகளை உண்மையாக அனுபவித்த நபர் பிறனிடத்திலும் கிருபையாக நடந்து கொள்வார். இதுவே அடிமைத்தனத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வேதாகமத்தின் தீர்வாகும்.
English
வேதாகமம் அடிமைத்தனத்தை பொறுத்துக்கொள்ளுகிறதா?