settings icon
share icon
கேள்வி

வன்முறையைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


வன்முறை என்பது "உடல் வலிமையை மீறுதல், சேதப்படுத்துதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல்" என்று வரையறுக்கப்படுகிறது, மேலும் துரதிர்ஷ்டவசமாக, வன்முறை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். இது நம்முடைய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உள்ளது, மேலும் வன்முறை மூலம் அதிகாரம் அடிக்கடி நிறுவப்படும் உலகில் நாம் வாழ்கிறோம். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு, உலகத்தின் வழி எப்போதும் வார்த்தையின் சத்தியத்தால் துரத்தப்படுகிறது. எனவே வன்முறையைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது?

முதலாவதாக, கைகளால் ஏற்படும் வன்முறையைப் போலவே மனதில் உள்ள வன்முறையும் புண்படுத்தும். லேவியராகமம் 19:17 கூறுகிறது, “உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.” ஒருவன் பாவத்தில் இருக்கிறான் என்று நமக்குத் தெரிந்தால், அவன் மீது வெறுப்பையும் கோபத்தையும் வளர்த்துக்கொண்டு அமைதியாக இருப்பது அதிக அன்பானதா? நாம் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்று தேவன் கூறுகிறார், மேலும் மத்தேயு 5:21-22 இல் இயேசு நமக்குச் சொல்கிறார், கொலைபாதக கோபம் கோபமான மனிதனை ஒரு உடல் ரீதியான அடியாக விரைவாக தேவனிடமிருந்து நியாயத்தீர்ப்புக்கு இட்டுச் செல்லும். வேறொருவர் மீது அவர் வெளிப்படுத்தும் வன்முறையை தேவனால் திரும்பக் கொண்டு வர முடியும்.

யுத்தத்தில் உண்டாகும் வன்முறைப் பற்றி என்ன? யாத்திராகமம் 20:13 "கொல்லாதே" என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆனால் அது "கொலை செய்யாதிருப்பாயாக" என்று அர்த்தம். தேவன் தம்முடைய ஜனங்களின் வரலாறு முழுவதும் நியாயமான யுத்தங்களை அனுமதித்துள்ளார். ஆபிரகாம் முதல் தெபோராள் வரை பின்பு தாவீது வரை, தேவனுடைய ஜனம் நீதியும் பரிசுத்தமுமான தேவனிடமிருந்து நியாயத்தீர்ப்பின் கருவியாகப் யுத்தம் செய்துள்ளனர். ரோமர் 13:1-4 நம்மை அரசாங்க அதிகாரிகளுக்கு அடிபணியச் சொல்கிறது, மேலும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் தீமை செய்பவர்களுக்கு எதிராக வாள் ஏந்துவதற்கு தேசங்களுக்கு உரிமை உண்டு.

வன்முறை நிகழ்கிறது, ஆனால் பாவத்தின் மீதான பரிசுத்த நியாயத்தீர்ப்புக்கும் நாம் விரும்பாதவர்களுக்கு எதிரான நமது சொந்த பழிவாங்கலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும், இது பெருமையின் தவிர்க்க முடியாத விளைவு (சங்கீதம் 73:6). ஆண்கள் வன்முறையை ஏற்கும் வாய்ப்புகள் அதிகம் (கலாச்சாரங்கள் உண்மையான மனிதர்களை குறிப்பாக அழாதவர்கள், எப்போதும் திட்டமிடுபவர்கள் மற்றும் துப்பாக்கியை ஏந்துபவர்கள் என சித்தரிப்பது போல), எல்லா காலத்திலும் ஞானமுள்ள மனுஷன் எழுதினார், “கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே” (நீதிமொழிகள் 3:31). ஜெபமும் பொறுமையும் எந்த நாளிலும் வன்முறை மற்றும் கோபத்தை வெல்லும்.

English



முகப்பு பக்கம்

வன்முறையைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries