settings icon
share icon
கேள்வி

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை நான் எப்படி புரிந்துகொள்ள முடியும்?

பதில்


வேதாகம வியாக்கியானம் செய்தலின் திறவுகோல் காரியம், குறிப்பாக வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை வியாக்யானம் செய்வதற்கு, ஒரு நிலையான வியாக்கியான முறை தேவையாக உள்ளது. வியாக்கியானம் என்பது விளக்கங்களின் கொள்கைகளை குறித்த ஆய்வாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், நீங்கள் வேதவாக்கியங்களை இந்த முறையில்தான் விளக்குகிறீர்கள். வேதாகமத்தின் ஒரு சாதாரண வியாக்கியானம் அல்லது சாதாரண விளக்கம் என்பது, ஒரு வசனம் அல்லது பத்தியை தெளிவாக்குவதற்கு எழுத்தாளர் உருவக மொழியைப் பயன்படுத்துவதை தவிர்த்து மற்ற எல்லா காரியங்களையும் அதன் சாதாரண அர்த்தத்தில்தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும். வசனத்திலுள்ள வாக்கியத்தின் இயற்கை அர்த்தம் அர்த்தமுள்ளதாக இருந்தால், நாம் மற்ற அர்த்தங்களைத் தேடக்கூடாது. மேலும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலினாலே, எழுத்தாளர் ஒரு காரியத்தை தெளிவாக விளங்கப்பண்ணும்போது, அவருடைய வார்த்தைகளுக்கு அல்லது வாக்கியங்களுக்கு நாமாக அர்த்தங்களை கொடுத்து எல்லாவற்றையும் ஆவிக்குரியப்படுத்தக் கூடாது.

ஒரு உதாரணம் வெளிப்படுத்துதல் 20-ஆம் அதிகாரம். இந்த அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயிரம் ஆண்டு கால குறிப்பு குறித்து பலரும் பல அர்த்தங்களை கொண்டு வருகிறார்கள். ஆனாலும், ஆயிரம் ஆண்டுகள் என்று எழுத்தியல் பூர்வமாக எடுத்துக்கொள்வதை தவிர வேறொன்றுக்கும் அர்த்தம் வருகிற நிலையில் இல்லை என்பதை இதனை குறிப்பிட்ட மொழி தெளிவாக்குகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்திற்கு ஒரு எளிய வரைக்குறிப்பு வெளி. 1:19ல் காணப்படுகிறது. முதல் அதிகாரத்தில் உயிர்த்து உயர்ந்து நிற்கும் கிறிஸ்து யோவானிடம் பேசுகிறார். கிறிஸ்து யோவானிடம், “நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது” என்று கூறுகிறார். யோவான் ஏற்கனவே கண்டவைகளை முதலாம் அதிகாரத்தில் பதிவு செய்துள்ளார். இருக்கிற காரியங்களை (யோவானின் நாளில் உண்டாயிருந்த காரியங்கள்) 2-3 அதிகாரங்களில் (சபைகளுக்கான கடிதங்கள்) பதிவு செய்யப்பட்டுள்ளன. "இனி சம்பவிக்கப்போகிறவைகள்" (எதிர்கால காரியங்கள்) 4-22 அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக, வெளிப்படுத்துதல் 4-18 வரையிலுள்ள அதிகாரங்களில், பூமியில் வாழும் ஜனங்கள்மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளைக் குறித்துக் கூறுகிறது. இந்த நியாயத்தீர்ப்புகள் திருச்சபைக்கு இல்லை (1 தெசலோனிக்கேயர் 5:2, 9). நியாயத்தீர்ப்புகள் தொடங்கும் முன்பாக, திருச்சபையானது பூமியில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும், இந்த நிகழ்வை சபை எடுத்துக்கொள்ளப்படுதல் என்று அழைக்கிறோம் (1 தெசலோனிக்கேயர் 4:13-18; 1 கொரிந்தியர் 15:51-52). 4-18 வரையிலுள்ள அதிகாரங்கள் "யாக்கோபின் இக்கட்டுகாலம்" என்கிற ஒரு காலத்தைக் குறிக்கிறது – இஸ்ரவேலில் இக்கட்டுகாலம் (எரேமியா 30:7, தானியேல் 9:12; 12:1). தேவன் அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் அவிசுவாசிகளை நியாயந்தீர்ப்பதும் இந்த காலமாகும்.

கிறிஸ்துவின் மணவாட்டியாகிய திருச்சபையோடு கிறிஸ்து இரண்டாம் வருகையில் வருவார் என்று 19-ஆம் அதிகாரம் விவரிக்கிறது. மிருகத்தையும் கள்ளத் தீர்க்கதரிசியையும் அவர் தோற்கடித்து, அவர்களை அக்கினிக் கடலிலே போடுவார். 20-ஆம் அதிகாரத்தில், சாத்தான் சங்கிலியால் கட்டப்பட்டு, அடியில்லா குழியில் போடப்படுவான். பின்னர், பூமியில் 1000 ஆண்டுகள் நீடிக்கும் ஒரு அரசாட்சியை பூமியில் இயேசு ஸ்தாபிப்பார். 1000 ஆண்டுகளின் முடிவில், சாத்தான் விடுதலை செய்யப்பட்டவுடன் அவன் தேவனுக்கு விரோதமாக ஒரு கிளர்ச்சி ஏற்படுத்துவான். அவன் விரைவில் தோற்கடிக்கப்பட்டு, அக்கினிக்கடலுக்குள் தள்ளப்படுவான். பின்னர் இறுதி நியாயத்தீர்ப்பு ஏற்படும், அனைத்து அவிசுவாசிகளுக்குமுள்ள நியாயத்தீர்ப்பு, அவர்களும்கூட அவியாத அக்கினிக் கடலில் தள்ளப்படுவார்கள்.

21 மற்றும் 22 ஆகிய அதிகாரங்கள் நித்திய நிலையைக் குறித்து விவரிக்கின்றன. இந்த அதிகாரங்களில் தேவனோடுள்ள நித்தியம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று விவரிக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் புரிந்துகொள்ளத்தக்கது. அதன் பொருள் முற்றிலும் ஒரு மர்மம் என்றால் தேவன் அதை நமக்கு வழங்கியிருக்க மாட்டார். வெளிப்படுத்துதல் புத்தகத்தை புரிந்துகொள்வதற்கு முக்கியமானது, அதை முடிந்தவரை எழுத்தியல் ரீதியாக புரிந்துகொள்வதாகும் - இது என்ன அர்த்தம் கொள்கிறதோ அதையே சொல்கிறது மற்றும் இது என்ன அர்த்தப்படுத்துகிறதோ அதையே சொல்லுகிறது.

English



முகப்பு பக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை நான் எப்படி புரிந்துகொள்ள முடியும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries