settings icon
share icon

1 கொரிந்தியர் புத்தகம்

எழுத்தாளர்: 1 கொரிந்தியர் முதலாம் அதிகாரம் 1-வது வசனம், 1 கொரிந்தியர் புத்தகத்தின் எழுத்தாளர் அப்போஸ்தலனாகிய பவுல் என்று அடையாளப்படுத்துகிறது.

எழுதப்பட்ட காலம்: 1 கொரிந்தியர் புத்தகம் ஏறக்குறைய கி.பி. 55-ல் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: அப்போஸ்தலன் பவுல் கொரிந்துவில் திருச்சபையை நிறுவினார். அங்குள்ள சபையிலிருந்து வெளியேறிய சில ஆண்டுகளுக்குப் பிறகு, கொரிந்திய திருச்சபையைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் சில பிரச்சனைகளான அறிக்கைகளைக் கேள்விப்பட்டார். அவர்கள் பெருமை நிறைந்தவர்கள் மற்றும் பாலியல் ஒழுக்கக்கேட்டை ஆமோதித்து சமரசம் செய்தனர். ஆவிக்குரிய வரங்கள் முறையற்ற கிரமமில்லாத முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன எனவும், மேலும் முக்கிய கிறிஸ்தவ உபதேச கோட்பாடுகளின் தவறான புரிதல் இருந்தது எனவும் அறிந்தார். கொரிந்து பட்டண திருச்சபையை அதன் அஸ்திபாரமான இயேசு கிறிஸ்துவுக்கு மீட்டெடுக்கும் முயற்சியில் அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு தனது முதல் கடிதத்தை எழுதினார்.

திறவுகோல் வசனங்கள்: 1 கொரிந்தியர் 3:3, “பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?”

1 கொரிந்தியர் 6:19-20, “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.”

1 கொரிந்தியர் 10:31, “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.”

1 கொரிந்தியர் 12:7, “ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.”

1 கொரிந்தியர் 13:4-7, “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.”

1 கொரிந்தியர் 15:3-4, “நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.”

சுருக்கமான திரட்டு: கொரிந்துவிலுள்ள திருச்சபையானது பல்வேறு உட்பிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தது. கொரிந்துவிலுள்ள விசுவாசிகள் சில ஆவிக்குரியத் தலைவர்களுக்கு விசுவாசமுள்ள குழுக்களாகப் பிரிந்து இருந்தார்கள் (1 கொரிந்தியர் 1:12; 3:1-6). கிறிஸ்துவுக்குள்ள தேவபக்தியால் கொரிந்து சபை விசுவாசிகள் ஒன்றுபட வேண்டும் என்று பவுல் அறிவுறுத்தினார் (1 கொரிந்தியர் 3:21-23). திருச்சபையில் பலர் அடிப்படையில் ஒழுக்கக்கேடான உறவை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டனர் (1 கொரிந்தியர் 5:1-2). துன்மார்க்கரை சபையிலிருந்து வெளியேற்றும்படி பவுல் அவர்களுக்குக் கட்டளையிட்டார் (1 கொரிந்தியர் 5:13). கொரிந்து சபை விசுவாசிகள் ஒருவருக்கொருவர் வழக்குண்டாக்கிக்கொண்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றார்கள் (1 கொரிந்தியர் 6:1-2). கிறிஸ்தவ சாட்சியை சேதப்படுத்துவதை விட சாதகமாகப் பயன்படுத்துவது நல்லது என்று பவுல் கொரிந்தியருக்குக் கற்பித்தார் (1 கொரிந்தியர் 6:3-8).

பவுல் கொரிந்து சபையிலுள்ள விசுவாசிகளுக்கு திருமணம் மற்றும் பிரம்மச்சரியம் (7-ஆம் அதிகாரம்), விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவு (8 மற்றும் 10 வது அதிகாரங்கள்), கிறிஸ்தவ சுதந்திரம் (9-ஆம் அதிகாரம்), ஸ்திரீகள் தலையை முக்காடிட்டுக்கொண்டிருத்தல் (1 கொரிந்தியர் 11:1-16), கர்த்தருடைய பந்தி (1 கொரிந்தியர் 11:17-34), ஆவிக்குரிய வரங்கள் (12-14 வரையிலுள்ள அதிகாரங்கள்), மற்றும் உயிர்த்தெழுதல் (15-ஆம் அதிகாரம்) ஆகியவைகளைக் குறித்த போதனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார். கொரிந்து சபை விசுவாசிகள் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலமும், அவர்கள் ஏற்றுக்கொண்ட தவறான நடத்தை மற்றும் தவறான நம்பிக்கைகளுக்கு பதிலளிப்பதன் மூலமும் பவுல் 1 கொரிந்தியர் புத்தகத்தை சீராக மற்றும் நேர்த்தியாக எழுதினார்/வடிவமைத்தார்.

இணைப்புகள்: 1 கொரிந்தியர் புத்தகத்தின் 10-ஆம் அதிகாரத்தில், பவுல் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த இஸ்ரவேலர்களின் சரித்திரத்தை கொரிந்து சபை விசுவாசிகளுக்கு எடுத்துக்காட்டி விளக்குகிறார். கொரிந்தியர்களுக்கு சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு இல்லாததைப் பற்றி பவுல் கடுமையாக எச்சரித்திருக்கிறார் (1 கொரிந்தியர் 9:24-27). தேவனுடைய அற்புதங்களைப் பார்த்து, அவர்களை தேவன் எவ்வாறு கருதினார் என்பதை அறிந்தபோதிலும், செங்கடலை இரண்டாகப் பிரித்தது, வானத்திலிருந்து மன்னா மற்றும் ஒரு பாறையிலிருந்து தண்ணீர் போன்ற அற்புதமான ஏற்பாடுகளைச் செய்தபோதிலும், அவர்கள் தங்கள் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினார்கள், தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள், ஒழுக்கக்கேடு மற்றும் விக்கிரக ஆராதனை போன்றவற்றில் ஈடுபட்டார்கள். இஸ்ரவேலரின் முன்மாதிரியைக் கவனிக்கவும், காமங்களையும் பாலியல் ஒழுக்கக்கேட்டையும் தவிர்க்கவும் மற்றும் கிறிஸ்துவை சோதனைக்கு உட்படுத்தி புகார் கூறுகிறதை தவிர்க்கவும் பவுல் கொரிந்து சபை விசுவாசிகளை அறிவுறுத்துகிறார் (வச. 6-10). எண்ணாகமம் 11:4, 34, 25:1-9; யாத்திராகமம் 16:2, 17:2, 7 ஆகிய வசனங்களையும் காண்க.

நடைமுறை பயன்பாடு: கொரிந்து சபையானது கையாண்ட பல பிரச்சினைகள் மற்றும் கேள்விகள் இன்றும் இன்றைய திருச்சபைகளில் காணப்படுகின்றன. திருச்சபைகள் இன்றும் பிளவுகளுடன், ஒழுக்கக்கேட்டோடு, ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்துகின்றன. 1 கொரிந்தியர் புத்தகம் இன்றுள்ள திருச்சபைக்கும் மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது, ஆகையால் பவுலின் எச்சரிக்கைகளுக்கு செவிசாய்த்து அவற்றை நமக்குப் பயன்படுத்துவோமாக. எல்லா கண்டனங்களும் திருத்தங்களும் இருந்தபோதிலும், 1 கொரிந்தியர் புத்தகம் கிறிஸ்துவின் மீது நமக்கு இருக்க வேண்டிய இடத்திற்கு நம் கவனத்தை மீண்டும் கொண்டு வருகிறது. உண்மையான கிறிஸ்தவ அன்பு பல பிரச்சினைகளுக்கு விடையாக இருக்கிறது (13-வது அதிகாரம்). கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பற்றிய சரியான புரிதல், 15 ஆம் அதிகாரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, அதன் மூலம் நம்முடைய சொந்த உயிர்த்தெழுதலைப் பற்றிய சரியான புரிதலும், நம்மைப் பிரித்து தோற்கடிப்பதற்கான காரணிகளுக்கு தீர்வாகும்.

English



முகப்பு பக்கம்

1 கொரிந்தியர் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries