settings icon
share icon

2 கொரிந்தியர் புத்தகம்

எழுத்தாளர்: 2 கொரிந்தியர் புத்தகம் முதலாம் அதிகாரத்தின் முதலாவது வசனம், 2 கொரிந்தியர் புத்தகத்தின் எழுத்தாளர் அப்போஸ்தலனாகிய பவுல் என்று அடையாளம் காட்டுகிறது, ஒருவேளை தீமோத்தேயுவுடன் சேர்ந்து பவுல் இதை எழுதியிருக்கலாம்.

எழுதப்பட்ட காலம்: 2 கொரிந்தியர் புத்தகம் ஏறக்குறைய கி.பி. 55-57 வரையிலுள்ள காலக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம்.

எழுதப்பட்டதன் நோக்கம்: கொரிந்து திருச்சபை கி.பி. 52-ல் பவுல் தனது இரண்டாவது சுவிசேஷப் பயணத்தில் அங்கு சென்றபோது ஆரம்பிக்கப்பட்டதாகும். அப்போதுதான் அவர் ஒன்றரை ஆண்டுகள் காலம் அங்கே தங்கியிருந்தார், இங்குதான் முதல் முறையாக அவர் விரும்பிய வரை ஒரே இடத்தில் தங்க அனுமதிக்கப்பட்டார். இந்த பயணம் மற்றும் திருச்சபையின் ஆரம்பம் பற்றிய பதிவு அப்போஸ்தலர் 18:1-18-ல் காணப்படுகிறது.

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது நிருபத்தில், கொரிந்தியர்கள் (விசுவாசிகள்) தன்னுடைய “கடுமையான” நிருபத்தை (இப்போது அது இல்லை, அது இழந்துபோய்விட்டது) நேர்மறையான முறையில் பெற்றிருப்பதாக பவுல் தனது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறார். அந்த கடிதம் திருச்சபையை கிழித்தெறியும் பிரச்சினைகளைக் குறித்து உரையாற்றியது, முதன்மையாக சுய பாணியில் (தவறான) அப்போஸ்தலர்களின் வருகை (2 கொரிந்தியர் 11:13) அவர்கள் பவுலின் தன்மையைத் தாக்கி, விசுவாசிகளிடையே கருத்து வேறுபாட்டை விதைத்து, தவறான கோட்பாட்டைக் கற்பித்தனர். அவருடைய உண்மைத்தன்மை (2 கொரிந்தியர் 1:15-17), அவர் பேசும் திறன் (2 கொரிந்தியர் 10:10; 11:6) மற்றும் கொரிந்து சபையின் ஆதரவை ஏற்க அவர் விரும்பாதது போன்றவற்றை அவர்கள் கேள்விக்குள்ளாக்கியதாகத் தெரிகிறது (2 கொரிந்தியர் 11:7- 9; 12:13). அவர்களுடைய உரிமம் பெற்ற நடத்தையிலிருந்து மனந்திரும்பாத சிலரும் இருந்தார்கள் (2 கொரிந்தியர் 12:20-21).

கொரிந்தியர்களில் பெரும்பாலானோர் பவுலுக்கு எதிரான கிளர்ச்சியிருந்து மனந்திரும்பியதாக தீத்துவிடமிருந்து பவுல் கேட்டறிந்து பெரும் மகிழ்ச்சியடைந்தார் (2 கொரிந்தியர் 2:12-13; 7:5-9). அப்போஸ்தலனாகிய பவுல் இதற்காக தனது உண்மையான அன்பின் வெளிப்பாடாக அவர்களை ஊக்குவிக்கிறார் (2 கொரிந்தியர் 7:3-16). ஏழைகளுக்காக ஒரு தர்மபணத்தை சேகரிப்பதை முடிக்கவும் (8—9 அதிகாரங்கள்) பொய்யான போதகர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவும் பவுல் கொரிந்தியர்களை வலியுறுத்தினார் (10—13 வரையிலுள்ள அதிகாரங்கள்). இறுதியாக, பவுல் தான் அப்போஸ்தலனாக இருப்பதை நிரூபித்தார், ஏனெனில் சபையில் சிலர் அவருடைய அப்போஸ்தல அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கலாம் (2 கொரிந்தியர் 13:3).

திறவுகோல் வசனங்கள்: 2 கொரிந்தியர் 3:5, “எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.”

2 கொரிந்தியர் 3:18, “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.”

2 கொரிந்தியர் 5:17, “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.”

2 கொரிந்தியர் 5:21, “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.”

2 கொரிந்தியர் 10:5, “அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.”

2 கொரிந்தியர் 13:4, “ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.”

சுருக்கமான திரட்டு: கொரிந்து திருச்சபையிலுள்ள விசுவாசிகளை வாழ்த்தி, முதலில் திட்டமிட்டபடி அவர் ஏன் அவர்களை சந்திக்கவில்லை என்பதை விளக்கிய பிறகு (வச. 1: 3–2:2), பவுல் தனது ஊழியத்தின் தன்மையை விளக்குகிறார். கிறிஸ்துவின் மூலம் வெற்றியும், தேவனுக்கு முன்பாக நேர்மையும் அவர் திருச்சபைகளுக்கு செய்த ஊழியத்தின் அடையாளங்களாக இருந்தன (2:14-17). அவர் கிறிஸ்துவினுடைய நீதியின் புகழ்பெற்ற ஊழியத்தை நியாயப்பிரமாணமான "கண்டன ஊழியத்திற்கு" ஒப்பிடுகிறார் (வசனம் 3:9) மற்றும் கடுமையான துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் தனது ஊழியத்தின் செல்லுபடியாகும் நம்பிக்கையை அவர் அறிவிக்கிறார் (4:8-18) . 5-ஆம் அதிகாரம் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையைக் கோடிட்டுக் காட்டுகிறது - புதிய சுபாவம் (வச. 17) மற்றும் கிறிஸ்துவின் நீதிக்காக நம்முடைய பாவத்தை பரிமாறிக்கொள்வது (வச. 21).

6 மற்றும் 7-வது அதிகாரங்கள் பவுல் தன்னையும் ஊழியத்தையும் பாதுகாத்து வருவதைக் காண்பிக்கின்றன, கொரிந்தியர்களிடம் அவர்மீது வைத்திருக்கும் நேர்மையான அன்பை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு மனந்திரும்புதலுக்கும் பரிசுத்த வாழ்க்கைக்கும் அவர்களை அறிவுறுத்துகின்றன. 8 மற்றும் 9-ஆம் அதிகாரங்களில், கொரிந்திலுள்ள விசுவாசிகளுக்கு மக்கதொனியாவில் உள்ள சகோதரர்களின் முன்மாதிரிகளைப் பின்பற்றவும், தேவைப்படும் பரிசுத்தவான்களுக்கு தாராள மனப்பான்மையை வழங்கவும் பவுல் அறிவுறுத்துகிறார். இரக்கத்துடன் கொடுப்பதன் கொள்கைகளையும் வெகுமதிகளையும் அவர் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

பவுல் தமது அப்போஸ்தல அதிகாரத்தை மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் தனது கடிதத்தை முடிக்கிறார் (10வது அதிகாரம்) மற்றும் பொய்யான கள்ள அப்போஸ்தலர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்வதில் அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருப்பதைக் கவனித்துக்கொள்கிறார். தன்னுடைய தகுதிகளையும், கிறிஸ்துவுக்காக அவர் அனுபவித்த துன்பங்களையும் தயக்கமின்றி பெருமைப்படுத்தியதற்காக அவர் தன்னை ஒரு “முட்டாள்” என்று அழைக்கிறார் (அத்தியாயம் 11). அவர் அனுபவிக்க அனுமதிக்கப்பட்ட பரலோகத்தின் தரிசனத்தையும், அவருடைய மனத்தாழ்மையையும் உறுதிப்படுத்த தேவனால் அவருக்கு வழங்கப்பட்ட “மாம்சத்தில் உள்ள முள்ளையும்” விவரிப்பதன் மூலம் அவர் தனது நிருபத்தை முடிக்கிறார் (12வது அதிகாரம்). கடைசி அதிகாரத்தில் கொரிந்தியருக்கு அவர்களுக்கு அறிவுறுத்துவது யதார்த்தமானதா என்று தங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும், மேலும் அன்பு மற்றும் சமாதானத்தின் ஒரு முடிவோடு முடிகிறது.

இணைப்புகள்: பவுல் தனது நிருபங்கள் முழுவதும், மோசேயின் சட்டத்தை அடிக்கடி மேற்கொள்காட்டிக் குறிப்பிடுகிறார், அதை இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் மிகைப்படுத்தப்பட்ட மகத்துவத்துடனும், கிருபையால் உண்டாகும் இரட்சிப்பிற்கும் ஒப்பிடுகிறார். 2 கொரிந்தியர் 3:4-11-ல், பவுல் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணச் சட்டத்தை கிருபையின் புதிய உடன்படிக்கையுடன் முரண்படுத்துகிறார், நியாயப்பிரமாணம் கொல்கிறது என்றும் ஆவியானது உயிர்ப்பிக்கிறது என்றும் நியாயப்பிரமாண சட்டத்தைக் குறித்துக் குறிப்பிடுகிறார். நியாயப்பிரமாணச் சட்டம் என்பது “எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியம்” (வச. 7; யாத்திராகமம் 24:12) ஏனெனில் அது பாவத்தைப் பற்றிய அறிவையும் அதன் கண்டனத்தையும் மட்டுமே தருகிறது. நியாயப்பிரமாணத்தின் மகிமை என்னவென்றால், அது தேவனுடைய மகிமையை பிரதிபலிக்கிறது, ஆனால் ஆவியின் ஊழியம் நியாயப்பிரமாணத்தின் ஊழியத்தை விட மிகவும் மகிமையானது, ஏனென்றால் அது கிறிஸ்துவை நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக வழங்குவதில் அவருடைய இரக்கம், கிருபை மற்றும் அன்பை பிரதிபலிக்கிறது.

நடைமுறை பயன்பாடு: இந்த நிருபம் பவுலின் நிருபங்களில் மிகவும் கூடுதல் சுயசரிதை மற்றும் குறைந்தளவு போதனைக்கோட்பாடு அடங்கியதாகும். இந்த நிருபமானது மற்றெல்லாவற்றைக் காட்டிலும் பவுலைப் பற்றி ஒரு நபராகவும் ஊழியராகவும் நமக்கு அதிகம் சொல்லுகிறது. இவற்றிலிருந்து சில விஷயங்களை நாமும் எடுத்து இன்று நம் வாழ்விற்குப் பயன்படுத்தலாம். முதல் விஷயம் உக்கிராணத்துவம், பண விஷயத்தில் மட்டுமல்ல, நேரமும் கூட. மக்கதொனியாவில் உள்ளவர்கள் தாராளமாகக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், “தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்” (2 கொரிந்தியர் 8:5). அதேபோல், தேவனுக்காக நம்மிடமுள்ள அனைத்தையும் மட்டுமல்ல, நம்மையே முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். அவருக்கு உண்மையில் நம்முடைய பணம் தேவையில்லை. அவர் சர்வ வல்லமையுள்ளவர்! அவர் விரும்புவது நம் இதயத்தை தான், நாம் முழு இருதயத்தோடு சேவை செய்ய விரும்புகிறார், நம்மேல் தயவு காண்பித்து நேசிக்கிறார். உக்கிராணத்துவம் மற்றும் தேவனுக்கு கொடுத்தல் என்பது பணத்தை விட மேலானதாகும். ஆம், நம்முடைய வருமானத்தின் ஒரு பகுதியை நாம் தசமபாகமாக கொடுக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், நாம் அவருக்குக் கொடுக்கும்போது அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்று வாக்குறுதியும் அளிக்கிறார். இன்னும் அதிகம் உள்ளது. தேவன் 100% விரும்புகிறார். நம்முடைய அனைத்தையும் அவருக்குக் கொடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாமும் நமக்குள்ளது எல்லாமும் அவருக்கே உரியதாகும். நம்முடைய பிதாவுக்கு சேவை செய்வதற்காக நாம் நம் வாழ்க்கையை வாழ வேண்டும். நம்முடைய சம்பளக் காசோலையிலிருந்து நாம் தேவனுக்குக் கொடுக்கக் கூடாது, ஆனால் நம்முடைய வாழ்க்கையே அவருக்கு கொடுக்கவேண்டும், அது அவரைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். நாம் முதலில் கர்த்தருக்கும், பின்னர் திருச்சபைக்கும், இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியத்தின் வேலைக்காகவும் கொடுக்க வேண்டும்.

English



முகப்பு பக்கம்

2 கொரிந்தியர் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries