எபேசியருக்கு எழுதின நிருபம்
எழுத்தாளர்: எபேசியர் 1:1-வது வசனம், எபேசியருக்கு எழுதின நிருபத்தின் எழுத்தாளரை அப்போஸ்தலனாகிய பவுல் என்று அடையாளம் காட்டுகிறது.எழுதப்பட்ட காலம்: எபேசியருக்கு எழுதின நிருபம் கி.பி. 60-63 வரையிலுள்ள காலக்கட்டத்தில் எழுதப்பட்டதாகும்.
எழுதப்பட்டதன் நோக்கம்: கிறிஸ்துவைப் போலாகும் முதிர்ச்சிக்காக ஏங்கும் அனைவருக்கும்ம் இந்த நிருபத்தின் எழுத்துக்கள் ஏற்றதாக இருக்கும் என்று பவுல் சித்தங்கொண்டார். தேவனுடைய உண்மையான பிள்ளைகளாக வளரத் தேவையான ஒழுக்கம் எபேசியர் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், எபேசியர் புத்தகத்தின் படிப்பும் ஆய்வும் விசுவாசியை பலப்படுத்துவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் உதவும், இதனால் தேவன் அழைத்து நமக்களித்த அவர் நோக்கத்தை நிறைவேற்றமுடியும். இந்த நிருபத்தின் நோக்கம் ஒரு முதிர்ச்சியடைந்த திருச்சபையை உறுதிப்படுத்துவதும் கட்டியெழுப்புவதும் ஆகும். இது கிறிஸ்துவின் சரீரத்தைப் பற்றிய ஒரு சீரான பார்வையையும் தேவனுடைய பொருளாதாரத்தில் அதன் முக்கியத்துவத்தையும் முன்வைக்கிறது.
திறவுகோல் வசனங்கள்: எபேசியர் 1:3, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.”
எபேசியர் 2:8-10, “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.”
எபேசியர் 4:4-6, “உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.”
எபேசியர் 5:21, “தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.”
எபேசியர் 6:10-11, “கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.”
சுருக்கமான திரட்டு: எபேசியர் புத்தகத்தின் மிகப் பெரிய பகுதியை போதனைக்கோட்பாடு ஆக்கிரமித்துள்ளது. இந்த நிருபத்திலுள்ள போதனைகளில் பாதி கிறிஸ்துவில் நாம் நிற்பது தொடர்பானதாகும், மீதமுள்ளவை நம் நிலையை பாதிக்கிறதாய் இருக்கிறது. பெரும்பாலும் இந்த புத்தகத்திலிருந்து கற்பிப்பவர்கள் அனைத்து அடித்தள வழிமுறைகளையும் கடந்து நேரடியாக இறுதி அதிகாரத்திற்கு செல்கிறார்கள். இந்த அதிகாரம்தான் ஆவிக்குரிய யுத்தம் அல்லது பரிசுத்தவான்களின் ஆவிக்குரிய போராட்டத்தை வலியுறுத்துகிறது. எவ்வாறாயினும், இந்த நிருபத்தின் உள்ளடக்கங்களிலிருந்து முழுமையாக பயனடைய, இந்த நிருபத்தில் பவுலின் அறிவுறுத்தலின் ஆரம்பத்தில் இருந்து ஒருவர் தொடங்க வேண்டும்.
முதலாவதாக, கிறிஸ்துவின் சீஷர்களாகிய நம்மை, தேவன் யார் என்று அறிவிக்கிறார் என்பதை நாம் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். எல்லா மனிதர்களுக்குமான தேவனுடைய சாதனையைப் பற்றிய அறிவில் நாம் அடித்தளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அடுத்து, நம்முடைய தற்போதைய இருப்பு மற்றும் நடை ஆகியவை நடைமுறைப் படுத்தப்பட்டு அது பலப்படுத்தப்பட வேண்டும். புருஷர்களின் கற்பித்தல் மற்றும் நுணுக்கத்தின் ஒவ்வொரு ஆவியுடனும் நாம் இனிமேல் பின்மாறவோ அல்லது தடுமாறவோ கூடாது.
பவுலின் எழுத்துக்கள் மூன்று முக்கிய பகுதிகளாக பிரிந்து காணப்படுகிறது. (1) முதல் மூன்று அதிகாரங்கள் தேவனுடைய சாதனை தொடர்பான கொள்கைகளை அறிமுகப்படுத்துகின்றன. (2) நான்கு மற்றும் ஐந்தாவது அதிகாரங்கள் நமது தற்போதைய இருப்பைப் பற்றிய கொள்கைகளை முன்வைக்கின்றன. இறுதியாக (3) ஆறாம் அதிகாரம் நமது அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கையிலுள்ள ஆவிக்குரியப் போராட்டத்தைப் பற்றிய கொள்கைகளை முன்வைக்கிறது.
இணைப்புகள்: எபேசியரில் உள்ள பழைய ஏற்பாட்டின் முதன்மையான இணைப்பு திருச்சபையானது கிறிஸ்துவின் சரீரம் என்ற திடுக்கிடும் (யூதர்களுக்கு) கருத்தில் உள்ளது (எபேசியர் 5:32). திருச்சபையின் இந்த அற்புதமான மர்மம் (முன்னர் வெளிப்படுத்தப்படாத ஒரு உண்மை) என்னவென்றால், “புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்பதாகும்” (எபேசியர் 3:3). இது பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களிடமிருந்து முற்றிலும் மறைக்கப்பட்ட ஒரு இரகசியமாகும்/மர்மமாகும் (எபேசியர் 3:6, 9). தேவனை மெய்யாகப் பின்பற்றுபவர்களாக இருந்த இஸ்ரவேலர்கள் தாங்கள் மட்டுமே தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனம் என்று எப்போதும் நம்பினர் (உபாகமம் 7:6). புறஜாதியாரை சமமான நிலையில் யூதர்களுக்கு நிகராக ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம், இந்த புதிய முன்னுதாரணத்தில் யூத விசுவாசிகள் மற்றும் புறஜாதிய விசுவாசிகளுக்கிடையே பல மோதல்களை ஏற்படுத்தியது. திருச்சபையின் மர்மத்தை "கிறிஸ்துவின் மணவாட்டி" என்றும் பவுல் கூறுகிறார், இது பழைய ஏற்பாட்டில் முன்னர் கேள்விப்படாத ஒரு கருத்தாகும்.
நடைமுறை பயன்பாடு: வேதாகமத்திலுள்ள வேறு எந்த புத்தகத்தையும் விட, எபேசியர் புத்தகம் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆரோக்கியமான உபதேச கோட்பாட்டிற்கும் சரியான நடைமுறை வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்பை பலமாக வலியுறுத்துகிறது. பலர் "இறையியலை" புறக்கணிக்கிறார்கள், அதற்கு பதிலாக "நடைமுறை" விஷயங்களை மட்டுமே விவாதிக்க விரும்புகிறார்கள். எபேசியரில், இறையியல் நடைமுறை என்று பவுல் வாதிடுகிறார். நம் வாழ்வில் தேவனுடைய சித்தத்தை நடைமுறையில் வாழ்வதற்கு, நாம் முதலில் கிறிஸ்துவில் யார் என்னும் உபதேசக்கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும்.
English
எபேசியருக்கு எழுதின நிருபம்