யாத்திராகமம் புத்தகம்
எழுத்தாளர்: யாத்திராகமம் புத்தகத்தை எழுதியவர் மோசே (யாத்திராகமம் 17:14; 24: 4-7; 34:27).எழுதப்பட்ட காலம்: யாத்திராகமம் புத்தகம் கி.மு. 1440 மற்றும் கி.பி. 1400 ஆகிய ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும்.
எழுதப்பட்டதன் நோக்கம்: “யாத்திராகமம்” என்ற சொல்லுக்கு புறப்பாடு என்று பொருள். தேவனுடைய குறித்த நேரத்தில், எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் வெளியேறுவது அதாவது ஆபிரகாமின் சந்ததியினருக்கான அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியேறும் முடிவைக் குறித்தது (ஆதியாகமம் 15:13), ஆபிரகாமுக்கு அவருடைய சந்ததியினர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் வாழ்வதோடு அல்லாமல் அவர்கள் பலுகிப்பெருகி ஒரு பெரிய தேசமாக மாறுவார்கள் (ஆதியாகமம் 12:1-3, 7) என்று ஆபிரகாமிற்கு தேவன் வாக்குப் பண்ணியிருந்தார். எகிப்திலிருந்து யாக்கோபின் சந்ததியினரின் விரைவான வளர்ச்சியை அவர்களின் வாக்களிக்கப்பட்ட தேசத்தில் தேவன் ஆளும் தேசத்தை ஸ்தாபிப்பதை புத்தகத்தின் நோக்கமாக காணலாம்.
திறவுகோல் வசனங்கள்: யாத்திராகமம் 1:8, "யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்."
யாத்திராகமம் 2:24-25, "தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்."
யாத்திராகமம் 12:27, "இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்."
யாத்திராகமம் 20:2-3, "உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்."
சுருக்கமான திரட்டு: தேவன் தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாகிய யூதர்களுடன் இடைபடுவதிலிருந்து அதாவது ஆதியாகமம் முடிகிற அந்த இடத்திலிருந்து யாத்திராகமம் தொடங்குகிறது. எகிப்தில் அதிகாரமும் வல்லமையும் வாய்ந்த யோசேப்பின் விருந்தினர்களாக இஸ்ரவேலர்கள் எகிப்துக்குள் நுழைந்த காலத்திலிருந்து, அடிமைத்தனத்தின் உச்சக்கட்டமாக கொடூரமான அடிமைத்தனத்திலிருந்து அவர்கள் விடுவிக்கப்படும் வரை, அதாவது யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றி (யாத்திராகமம் 1:8) அவர்களை கொடூரமாக நடத்தும் நிலையிலிருந்து மீட்கப்படுவதாகும்.
1-14 வரையிலுள்ள அதிகாரங்கள், பார்வோனின் கீழ் யூதர்களை ஒடுக்குவதற்கான நிலைமைகள், மோசே அவர்களின் ஒரு மீட்பராக எழுப்பப்படுதல், தேவன் மோசேயின் மூலமாக எகிப்துக்குக் கொண்டுவந்த வாதைகள், இஸ்ரவேலின் தலைவனாகிய மோசே கூறின தேவனுடைய வார்த்தைக்கு பார்வோன் கீழ்ப்படிய மறுத்தல், இறுதியாக எகிப்திலிருந்து புறப்படுதல் போன்றவைகளை விவரிக்கிறது. தேவனுடைய இறையாண்மையும் அவரது வல்லமையுள்ள கரமும் எகிப்தின்மேல் அவர் கொண்டுவந்த வாதிகளில் தெளிவாக காணப்படுகிறது - இது முதற்பேறானவரின் மரணத்தின் வாதை மற்றும் முதல் பஸ்காவின் ஆசரிப்புடன் முடிவடைகிறது – அதன் பின்பு, இஸ்ரவேலரின் விடுதலைப்பயணம், செங்கடலை இரண்டாகப் பிளத்தல் மற்றும் எகிப்தியரினுடைய இராணுவம் செங்கடலில் அழிக்கப்படுதல்.
யாத்திராகமத்தின் நடுப்பகுதி, இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிவதும், தேவன் தம் ஜனத்தினை அற்புதமாக போஷித்தலையும் வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அவர்களுக்கு வானத்திலிருந்து மன்னாவையும், கசப்பிலிருந்து மதுரமான தண்ணீரையும், ஒரு பாறையிலிருந்து தண்ணீரும், அவர்களை அழிக்க எண்ணின எதிரிகளிடமிருந்து வெற்றி, அவருடைய கையால் கல்பலகையில் எழுதப்பட்ட நியாயப்பிரமாணம், மற்றும் இரவில் அக்கினி ஸ்தம்பமாகவும் பகலில் மேகஸ்தம்பமாகவும் அவருடைய பிரசன்னம், இப்படியெல்லாம் உண்டாயிருந்தும், ஜனங்கள் தொடர்ந்து முணுமுணுத்து, அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்.
புத்தகத்தின் கடைசி மூன்றில் உடன்படிக்கைப் பெட்டியை உருவாக்குதல், ஆசரிப்புக் கூடாரத்திற்கான திட்டத்தை அதன் பல்வேறு பலிகள், பலிபீடங்கள், பணிமுட்டுகள், பண்டிகைகள் மற்றும் ஆராதனை முறைமைகள் போன்றவற்றை விவரிக்கிறது.
முன்னிழல்கள்: இஸ்ரவேலர்கள் தேவனுக்கு கொண்டுவரத் தேவையான பல்வேறு பலிகள், இறுதி பலியினை சுட்டிக்காண்பிக்கும் ஒரு சித்திரமாகும், தேவனுடைய பஸ்கா ஆட்டுக்குட்டி, இயேசு கிறிஸ்துவே. எகிப்தின் கடைசி வாதையின் இரவில், ஒரு பழுதற்ற ஆட்டுக்குட்டி கொல்லப்பட்டு, அதன் இரத்தம் தேவனுடைய ஜனங்கள் வசித்துவந்த வீடுகளின் நிலைக்கால்களிலும், வீட்டு வாசல்களில் பூசப்பட்டு, சங்காரத் தூதனிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. இது தேவனுடைய ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுவை முன்னறிவித்தது (1 பேதுரு 1:19), அவருடைய இரத்தம் நமக்குப் பொருந்தியது, அது நித்திய ஜீவனை உறுதி செய்கிறது. யாத்திராகமம் புத்தகத்தில் கிறிஸ்துவின் அடையாள விளக்கக்காட்சிகளில் யாத்திராகமம் 17: 6-ல் உள்ள பாறையிலிருந்து வரும் தண்ணீரின் கதை உள்ளது. ஜனங்களுக்கு குடிப்பதற்காக கொடுக்கும் தண்ணீரை வழங்க மோசே பாறையை அடித்தது போல, தேவன் நம்முடைய இரட்சிப்பின் பாறையாகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய பாவத்திற்காக அவரை சிலுவையில் அறையும்படி ஒப்புக்கொடுத்தார், அந்த பாறையிலிருந்து ஜீவத்தண்ணீரின் ஈவு வந்தது (யோவான் 4:10). வனாந்தரத்தில் மன்னாவை வழங்குவது கிறிஸ்துவின் சரியான சித்திரமாகும், அவரே நமது ஜீவ அப்பம் (யோவான் 6:48), இது நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க தேவனால் வழங்கப்பட்டது.
நடைமுறை பயன்பாடு: மோசேயின் நியாயப்பிரமாணம் மனிதகுலத்தால் கைக்கொள்ள இயலாது என்பதைக் காட்டுவதற்காக ஒரு பகுதியாக வழங்கப்பட்டது. நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் தேவனைப் பிரியப்படுத்த முடியாது; ஆகையால், "இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல,கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே" (கலாத்தியர் 2:16) என்று பவுல் வலியுறுத்துகிறார்.
அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேலர்களின் வனாந்திர பயணத்தின்போது, வானத்திலிருந்து மன்னா மற்றும் வனாந்தரத்தில் உள்ள காடைகள் கொடுத்தது ஆகியவை அவருடைய ஜனங்களுக்கு அவர் அளித்த கிருபையின் போஷிப்பு என்பது தெளிவான அறிகுறிகளாகும். நம்முடைய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்வதாக தேவன் வாக்குறுதி அளித்துள்ளார். “தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்" (1 கொரிந்தியர் 1:9).
நாம் கர்த்தரை நம்ப வேண்டும், ஏனென்றால் அவர் நம்மை எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்க முடியும். ஆனால் பாவம் என்றென்றும் தண்டிக்கப்படாமல் இருக்க தேவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இதன் விளைவாக, அவருடைய தண்டனையிலும் நீதியிலும் நாம் அவரை நம்பலாம். தேவன் ஒரு மோசமான சூழ்நிலையிலிருந்து நம்மை அகற்றும்போது, நாம் அவற்றிற்கே திரும்பிச் செல்ல முயற்சிக்கக்கூடாது. தேவன் நம்மிடம் கோரிக்கைகளை வைக்கும்போது, அவருக்கு கீழ்படிந்து அவருக்கு நாம் இணங்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார், ஆனால் அதே நேரத்தில் அவர் கிருபையையும் இரக்கத்தையும் அளிக்கிறார், ஏனென்றால் நாம் நாமாக நமது சொந்த முயற்சியில் முழுமையாகக் கீழ்ப்படிய முடியாது என்பதை அவர் அறிவார்.
English
யாத்திராகமம் புத்தகம்