யோனாவின் புத்தகம்
எழுத்தாளர்: யோனா 1:1, யோனா தீர்க்கதரிசி தான் யோனா புத்தகத்தை எழுதியவர் என்று குறிப்பாக அடையாளம் காட்டுகிறது.எழுதப்பட்ட காலம்: யோனாவின் புத்தகம் கி.மு. 793 முதல் கி.மு. 758 வரையிலான காலக்கட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாக நம்பபடுகிறது.
எழுதப்பட்டதன் நோக்கம்: கீழ்ப்படியாமை மற்றும் எழுப்புதல் ஆகியவை இந்த புத்தகத்தின் முக்கிய பிரதானமான கருப்பொருள்கள். திமிங்கலத்தின் வயிற்றில் யோனாவின் அனுபவம் அவருக்கு ஒரு தனித்துவமான விடுதலையைத் தேடுவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது, ஏனெனில் அவர் இந்த தனித்துவமான பின்வாங்கலின் போது மனந்திரும்புகிறார். அவரது ஆரம்ப ஒத்துழையாமை/கீழ்ப்படியாமை அவரது தனிப்பட்ட எழுப்புதலுக்கு மட்டுமல்ல, நினிவே ஜனங்களுக்கும் வழிவகுக்கிறது. நினிவேவுக்கு யோனா கொண்டு வரும் எழுப்புதலை எல்லா காலத்திலும் மிகப்பெரிய சுவிசேஷ முயற்சிகளில் ஒன்றாக பலர் வகைப்படுத்துகின்றனர்.
திறவுகோல் வசனங்கள்: யோனா 1:3, “அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.”
யோனா 1:17, “யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.”
யோனா 2:2, “என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.”
யோனா 3:10, “அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.”
சுருக்கமான திரட்டு: யோனாவின் பயமும் பெருமையும் அவரை தேவனிடமிருந்து ஓடச் செய்கின்றன. தேவன் கட்டளையிட்டபடி, ஜனங்களுக்கு மனந்திரும்புதலைப் பிரசங்கிக்க அவர் நினிவேவுக்குச் செல்ல விரும்பவில்லை, ஏனென்றால் அவர்களை தம்முடைய எதிரிகள் என்று அவர் எண்ணினார், மேலும் நினிவே நகரத்தை அழிக்க தேவன் தமது அச்சுறுத்தலை நிறைவேற்ற மாட்டார் என்றும் அவர் உறுதியாக நம்பினார். அதற்குப் பதிலாக அவர் தர்ஷீசுக்குப் போக ஒரு கப்பலில் ஏறுகிறார், அது நினிவே பட்டணத்திற்கு எதிர் திசையில் உள்ளது. விரைவில் ஒரு பொங்கி எழும் புயற்காற்று மற்றும் கொந்தளிப்பு கப்பல் பயணிகளை நடுங்க வைக்கிறது மற்றும் யோனா தான் பிரச்சினை என்று தெரியவருகிறது. அவர்கள் யோனாவை கப்பலில் இருந்து கடலில் வீசுகிறார்கள், அப்பொழுது அவர் ஒரு பெரிய மீனால் விழுங்கப்படுகிறார். அதன் வயிற்றில் ஏறக்குறைய 3 பகல் மற்றும் 3 இரவுகளில், யோனா தனது பாவத்தை தேவனிடம் அறிக்கைச்செய்து மனந்திரும்புகிறார், மீன் அவரை வெட்டாந்தரையான நிலத்தில் வாந்தி எடுக்கிறது (மனந்திரும்புவதற்கு அவரை இவ்வளவு நேரம் எடுக்கச் செய்தது என்ன என்று நாம் ஆச்சரியப்படுகிறோம்). யோனா பின்னர் நினிவேவுக்கு ஏறக்குறைய 500 மைல் தூர பயணத்தை மேற்கொண்டு நகரத்தை ஒரு பெரிய மனந்திரும்புதலின் எழுச்சிக்கு கொண்டு செல்கிறார். ஆனால் நினிவே மனந்திரும்பும்போது நன்றி செலுத்துவதற்குப் பதிலாக தீர்க்கதரிசி அதிருப்தி அடைகிறார் (உண்மையில் கூச்சலிடுகிறார்). ஆயினும், தேவன் இரக்கமுள்ளவர் என்று அவருக்குக் கற்பிக்க அவர் ஒரு காற்றையும், ஆமணக்குச்செடியையும், புழுவையும் பயன்படுத்தும்போது, யோனா தனது பாடத்தைக் கற்றுக்கொள்கிறார்.
முன்னிழல்கள்: யோனா ஒரு வகையில் கிறிஸ்துவின் மாதிரிப்படிவமாக இருக்கிறார் என்பது இயேசுவின் சொந்த வார்த்தைகளிலிருந்து தெளிவாகிறது. மத்தேயு 12:40-41-ல், யோனா திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த அதே காலளவு நேரம் கல்லறையில் இருப்பார் என்று இயேசு தம்மைக் குறித்து அறிவிக்கிறார். யோனாவின் பிரசங்கத்திற்கு செவிகொடுத்து நினிவே மக்கள் அவரது முகத்திற்கு நேராக மனந்திரும்பினாலும், இயேசுவை நிராகரித்த பரிசேயரும் நியாயப்பிரமாண ஆசிரியர்களும் யோனாவை விட மிகப் பெரியவரை நிராகரிக்கிறார்கள் என்று அவர் தொடர்ந்து கூறுகிறார். மனந்திரும்புதல் மற்றும் இரட்சிப்பு குறித்து யோனா நினிவே மக்களுக்கு தேவனுடைய சத்தியத்தைக் கொண்டு வந்ததைப் போலவே, இயேசுவும் தேவன் மூலமாக இரட்சிப்பின் அதே செய்தியை (யோனா 2:9; யோவான் 14:6) கொண்டு வருகிறார் (ரோமர் 11:36).
நடைமுறை பயன்பாடு: நாம் தேவனிடடமிருந்து மறைந்து ஒளிந்துகொள்ள முடியாது. நம்முடைய எல்லா ஆட்சேபனைகளையும், கால் பின்வாங்கலையும் மீறி, அவர் நம்மால் சாதிக்க விரும்புவது நிச்சையமாக நிறைவேறும். எபேசியர் 2:10 நமக்கு நினைவூட்டுகிறது, அவர் நமக்கென்று திட்டங்களை வைத்திருக்கிறார், அந்தத் திட்டங்களுக்கு நாம் இணங்குவதைக் காண்போம். யோனாவைப் போலல்லாமல், தாமதமின்றி அவருக்குக் கீழ்ப்படிவோமானால் எவ்வளவு எளிதாக இருக்கும்!
நம்முடைய நற்பெயர், தேசியம் அல்லது இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய அன்பு அனைவருக்கும் அவர் அணுகுவதில் வெளிப்படுகிறது. நற்செய்தியின் இலவச சலுகை எல்லா மக்களுக்கும் எல்லா நேரங்களிலும் கிடைக்கிறது/உள்ளது. கிறிஸ்தவர்களாகிய நம்முடைய பணி, உலகத்தை தேவன் சொல்லும் சலுகையின் வழிமுறையாகவும், மற்றவர்களின் இரட்சிப்பில் மகிழ்ச்சியடையவும் செய்வதாகும். இது ஒரு அனுபவமாகும், "கடைசி நிமிட மாற்றங்களில்" கிறிஸ்துவிடம் வருபவர்களிடம் பொறாமைப்படவோ அல்லது கோபப்படவோ கூடாது அல்லது நம்முடைய சொந்த அனுபவத்திற்கு முரணான சூழ்நிலைகளில் வருபவர்களிடமும் நாம் அவரைப்பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
English
யோனாவின் புத்தகம்