லேவியராகமம் புத்தகம்
எழுத்தாளர்: லேவியராகமம் புத்தகத்தை எழுதியவர் மோசே.எழுதப்பட்ட காலம்: லேவியராகமம் புத்தகம் கி.மு. 1440 முதல் கி.மு. 1400 வரையிலுள்ள இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.
எழுதப்பட்டதன் நோக்கம்: இஸ்ரவேலர்கள் 400 ஆண்டுகளாக எகிப்தில் சிறைப்படுத்தப்பட்ட அடிமைத்தனத்திற்குட்பட்டிருந்ததால், தேவனைப்பற்றிய கருத்து பலதெய்வ கோட்பாடு, மற்றும் அன்னியஜாதிகளால் / எகிப்தியர்களால் சிதைக்கப்பட்டது. லேவியராகமம் புத்தகத்தின் நோக்கம், ஒரு பாவமுள்ள, ஆனால் மீட்கப்பட்ட ஜனங்களை பரிசுத்த தேவனுடனான உறவில் வழிநடத்த அறிவுறுத்தலும் சட்டங்களும் வழங்குவதாகும். பரிசுத்த தேவனுக்குப் பதிலளிக்கும் விதமாக தனிப்பட்ட பரிசுத்தத்தின் தேவை குறித்து லேவியராகமத்தில் ஒரு முக்கியத்துவம் உள்ளது. சரியான பலிகளை வழங்குவதன் மூலம் பாவத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும் (அத்தியாயங்கள் 8-10). உணவில் (சுத்தமான மற்றும் அசுத்தமான உணவுகள்), பிரசவம் மற்றும் கவனமாக கட்டுப்படுத்தப்படும் நோய்கள் (11-15 அதிகாரங்கள்) இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. ஜனங்களின் ஒட்டுமொத்த பாவத்திற்காக வருடாந்திர பலி செய்யப்படும் பாவப்பரிகார நாளை 16-ஆம் அதிகாரம் விவரிக்கிறது. மேலும், தேவனுடைய ஜனங்கள் தங்களின் தனிப்பட்ட, தார்மீக மற்றும் சமூக வாழ்வில் கவனமாக இருக்க வேண்டும், அன்றைய புறஜாதிகளின் தற்போதைய நடைமுறைகளுக்கு மாறாக, அவர்களைச் சுற்றிலும் எல்லா வகையிலும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் (17-22 அதிகாரங்கள்).
திறவுகோல் வசனங்கள்: லேவியராகமம் 1:4, "அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து."
லேவியராகமம் 17:11, "மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே."
லேவியராகமம் 19:18, "பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்."
சுருக்கமான திரட்டு: 1-7 வரையிலுள்ள அதிகாரங்கள் சாதாரண பாமர மக்களுக்கும் மற்றும் ஆசாரிய வர்க்கத்தும் தேவையான பலிகளைக் கோடிட்டுக் காட்டுகின்றன. 8-10 வரையிலுள்ள அதிகாரங்கள் ஆரோனையும் அவருடைய குமாரர்களையும் ஆசாரியத்துவத்திற்கு ஒப்புக்கொடுத்ததை விவரிக்கின்றன. 11-16 வரையிலுள்ள அதிகாரங்கள் பல்வேறு வகையான தீட்டான காரியங்களுக்கான நியமங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இறுதியிலுள்ள 10 அதிகாரங்கள் நடைமுறை பரிசுத்தத்திர்கான தேவனுடைய வழிகாட்டுதல்கள் அடங்கியுள்ளன. யெகோவா தேவனை ஆராதித்து வணங்குவதில் பல்வேறு பண்டிகைகள் மற்றும் அவைகளின் ஆசரிப்புகள் நிறுவப்பட்டன, தேவனுடைய கடவுளின் நியாயப்பிரமாண சட்டங்களின்படி அவைகள் நடைமுறையில் இருந்தன. ஆசீர்வாதங்கள் அல்லது சாபங்கள் தேவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பது அல்லது புறக்கணிப்பதை சார்ந்து இருந்தன (அதிகாரம் 26). கர்த்தருக்கான பொருத்தனைகள் அல்லது நேர்ச்சைகள் 27 ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
லேவியராகமத்தின் முதன்மையான உட்கருத்து பரிசுத்தம் ஆகும். தம்முடைய ஜனங்களில் பரிசுத்தத்திற்கான தேவனுடைய கோரிக்கை அவருடைய சொந்த பரிசுத்த தன்மையை அடிப்படையாகக் கொண்டது. பாவப்பரிகாரம் என்பது ஒரு தொடர்புடைய உட்கருத்தாகும். தேவனுக்கு முன்பாக நாம் பரிசுத்தத்தைப் பேண வேண்டும், சரியான பாவப்பரிகாரத்தின் மூலம் மட்டுமே அந்த பரிசுத்தத்தை அடைய முடியும்.
முன்னிழல்கள்: வழிபாட்டின் சடங்கு நடைமுறைகள் பல வழிகளில் நம்முடைய இரட்சகராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நபர் மற்றும் வேலையை மையமாகக்கொண்டு இருக்கின்றன. மோசேயின் நியாயப்பிரமாணம் “வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறது” என்று எபிரெயர் 10:1 நமக்குச் சொல்கிறது, இதன் பொருள் ஜனங்களின் பாவத்திற்காக ஆசாரியர்கள் அன்றாடம் செலுத்தும் பலிகள் இறுதியாக வரப்போகிற பலியின் நிழல் அல்லது பிரதிபலிப்பாகும் - இயேசு கிறிஸ்து, அவரை நம்புகிறவர்களுக்கு அவருடைய சிலுவைப்பலி எல்லா நேரத்திலும் போதுமானதாக இருக்கும். கிறிஸ்துவின் நீதிக்காக கிறிஸ்தவர்கள் தங்கள் பாவத்தை பரிமாறிக்கொண்டபோது, நியாயப்பிரமாணத்தால் தற்காலிகமாக வழங்கப்பட்ட பரிசுத்தம் ஒரு நாள் பரிசுத்தத்தின் முழுமையான நிலையில் அடையத்தக்கதாக மாற்றப்படும் (2 கொரிந்தியர் 5:21).
நடைமுறை பயன்பாடு: தேவன் தம்முடைய பரிசுத்தத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார், எனவே நாமும் அவ்வாறு செய்ய வேண்டும். பின்நவீனத்துவ திருச்சபையின் போக்கு என்னவென்றால், தேவனை நம்முடைய சாயலில் உருவாக்குவது, அவருடைய வார்த்தை விவரிக்கும் பொருள்களுக்குப் பதிலாக நாம் அவரிடம் இருக்க விரும்பும் பண்புகளை அவருக்குக் கொடுப்பது. தேவனுடைய முழுமையான பரிசுத்தத்தன்மை, அவருடைய அதிசயமான மகிமை, அவருடைய “சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணும்” (1 தீமோத்தேயு 6:16) பல கிறிஸ்தவர்களுக்கு அந்நியமான கருத்துக்களாக இருக்கின்றன. நாம் அவருடைய பார்வையில் பிரியமுள்ள நடப்பை அடைவதற்காக வெளிச்சத்தில் நடக்கவும், நம் வாழ்வில் இருளை விலக்கவும் அழைக்கப்படுகிறோம். பரிசுத்தமான தேவன் தம் மக்களில் அப்பட்டமான, வெட்கம்கெட்ட பாவத்தை சகித்துக்கொள்ள முடியாது, அவருடைய பரிசுத்தமானது அதைத் தண்டித்தே ஆகவேண்டும். பாவம் அல்லது தேவன் அதை வெறுத்து தண்டிப்பதைப் பற்றிய நமது அணுகுமுறைகளில் நாம் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும், அதை எந்த வகையிலும் வெளிச்சம் போடக்கூடாது.
நம் சார்பாக நமது இயேசுவின் சிலுவை மரணம் காரணமாக அமைந்ததால், நாம் இனி மிருகங்களை/விலங்குகளை பலியிட வேண்டியதில்லை என்பதற்காக கர்த்தரைத் துதியுங்கள். லேவியராகமம் என்பது மாற்றீடு பற்றியது. மிருகங்களின் மரணம் பாவம் செய்தவர்களுக்கு மாற்று தண்டனையாகும். அதே வழியில், ஆனால் எல்லையற்றது மற்றும் சிறந்தது, சிலுவையில் மரித்த இயேசுவின் பலி, அது நம் பாவங்களுக்கு மாற்றாக இருந்தது. தேவன் கிறிஸ்துவின் நீதியை அவர் நம்மில் காண்கிறார் என்பதால், இப்போது நாம் பயமின்றி முழுமையான பரிசுத்தமுள்ள தேவனுக்கு முன்பாக நிற்க முடியும்.
English
லேவியராகமம் புத்தகம்