எண்ணாகமம் புத்தகம்
எழுத்தாளர்: எண்ணாகமம் புத்தகத்தை எழுதியவர் மோசே.எழுதப்பட்ட காலம்: எண்ணாகமம் புத்தகம் கி.மு. 1440 முதல் கி.மு. 1400 வரையிலுள்ள இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.
எழுதப்பட்டதன் நோக்கம்: எண்ணாகமம் புத்தகத்தின் செய்தியானது உலகளாவிய மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டது. விசுவாசிகள், அவர்கள் ஈடுபட்டுள்ள ஆவிக்குரிய யுத்தத்தை இது நினைவூட்டுகிறது, ஏனென்றால் எண்ணாகமம் என்பது தேவனுடைய மக்களின் ஊழியம் மற்றும் நடையின் புத்தகமாகும். எண்ணாகமம் புத்தகம் இஸ்ரவேலர்கள் நியாயப்பிரமாணத்தை (யாத்திராகமம் மற்றும் லேவியராகமம்) பெற்றுக்கொள்வதற்கும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் (உபாகமம் மற்றும் யோசுவா) நுழைய அவர்களைத் தயார்படுத்துவதற்கும் இடையிலான இடைவெளியைக் நிரப்பி அவைகளுக்கு ஒரு பாலமாக இருக்கிறது.
திறவுகோல் வசனங்கள்: எண்ணாகமம் 6:24-26, "கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே."
எண்ணாகமம் 12:6-8, "அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன என்றார்."
எண்ணாகமம் 14:30-34, "எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை. கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள். உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும். அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பதுவருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள். நீங்கள் தேசத்தை சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்."
சுருக்கமான திரட்டு: எண்ணாகமம் புத்தகத்தின் பெரும்பாலான நிகழ்வுகள் வனாந்தரத்தில் நடைபெறுகின்றன, அதுவும் முதன்மையாக இஸ்ரவேலர்கள் அலைந்து திரிந்த இரண்டாம் மற்றும் நாற்பதாம் ஆண்டுகளுக்கு இடையில் உள்ளவைகள் விவரிக்கப்பட்டுள்ளன. புத்தகத்தின் முதல் 25 அதிகாரங்கள் வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களின் முதல் தலைமுறையின் அனுபவங்களை விவரிக்கின்றன, மீதமுள்ள புத்தகம் இரண்டாம் தலைமுறையின் அனுபவங்களை விவரிக்கிறது. கீழ்ப்படிதல் மற்றும் கலகத்தை தொடர்ந்து மனந்திரும்புதல் மற்றும் ஆசிர்வாதம் இந்த புத்தகத்தின் கருப்பொருள் ஆகும், இது முழு புத்தகத்திலும், பழைய ஏற்பாட்டிலும் இயங்குகிறது.
தேவனுடைய பரிசுத்தத்தின் கருப்பொருள் லேவியராகமம் புத்தகத்திலிருந்து எண்ணாகமம் புத்தகத்திலும் தொடர்கிறது, இது தேவனுடைய அறிவுறுத்தலையும் அவருடைய ஜனங்களை வாக்குறுதியளிக்கப்பட்ட கானான் தேசத்திற்குள் நுழையத் தயார்படுத்துவதையும் வெளிப்படுத்துகிறது. எண்ணாகமம் புத்தகத்தின் முக்கியத்துவம் புதிய ஏற்பாட்டில் பல முறை குறிப்பிடப்படுவதன் மூலம் குறிக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் 1 கொரிந்தியர் 10:1-12-ல் குறிப்பிடப்பட்டுள்ள காரியங்கள், எண்ணாகமம் புத்தகத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தும்படி சித்தமானார். "இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது" என்ற வார்த்தைகள் இஸ்ரவேலர்களின் பாவத்தையும், தேவன் அவர்களுக்குள்ள அதிருப்தியாய் இருந்ததையும் குறிக்கிறது.
ரோமர் 11:22 ல் பவுல் "தேவனுடைய தயவையும் கண்டிப்பையும்" பற்றி பேசுகிறார். சுருக்கமாக, இதுதான் எண்ணாகமம் புத்தகத்தின் செய்தி. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் ஒருபோதும் நுழையாதவர்கள், வனாந்தரத்தில் கலகக்கார தலைமுறையினரின் மரணத்தில் தேவனுடைய தீவிரம் காணப்படுகிறது. தேவனுடைய நன்மை புதிய தலைமுறையில் உணரப்படுகிறது. இந்த ஜனங்கள் தங்கள் நிலத்தை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் சுதந்தரிக்கும் வரை தேவன் அவர்களைப் பாதுகாத்து, போஷித்து வழி நடத்தினார். இது எப்போதும் இறையாண்மை ஒற்றுமையுடன் இருக்கும் தேவனுடைய நீதியையும் அன்பையும் நினைவூட்டுகிறது.
முன்னிழல்கள்: தம்முடைய ஜனத்தின் சார்பாக நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்த இயேசு கிறிஸ்துவில் அவருடைய மக்கள் பரிசுத்தத்திற்கான தேவனுடைய கோரிக்கையை முழுமையாகவும் இறுதியாகவும் திருப்தி அடைகிற வகையில் செய்தது (மத்தேயு 5:17). வாக்குறுதியளிக்கப்பட்ட மேசியாவின் கருத்து புத்தகத்தில் பரவி இருக்கிறது. சிவப்பு கடாரியின் பலியானது 19 ஆம் அதிகாரத்திலுள்ள சம்பவம் “கறைதிரை இல்லாமல் மாசற்ற” கிறிஸ்துவை முன்னிலைப்படுத்துகிறது, நம்முடைய பாவங்களுக்காக பலியிடப்பட்ட மாசற்ற தேவனுடைய ஆட்டுக்குட்டியாக இயேசு இருக்கிறார். உடல் ரீதியான குணப்படுத்துதலுக்காக மரத்தில் உயர்த்தப்பட்ட வெண்கல பாம்பின் உருவம் (அத்தியாயம் 21) கிறிஸ்துவின் சிலுவையின் மரணம் அல்லது வார்த்தையின் ஊழியத்தை முன்னறிவிக்கிறதாக இருக்கிறது, விசுவாசத்தினாலே அவரைப் பார்க்கிறவருக்கு ஆவிக்குரிய சுகம் கிடைக்கும்.
24 ஆம் அத்தியாயத்தில், பிலேயாமின் நான்காவது தேவ வாக்கு யாக்கோபிலிருந்து புறப்படவிருக்கும் நட்சத்திரம் மற்றும் செங்கோல் பற்றி பேசுகிறது. வெளிப்படுத்துதல் 22:16-ல் "அதிகாலையின் நட்சத்திரம்" என்று அழைக்கப்படும் கிறிஸ்துவின் தீர்க்கதரிசனம் இங்கே உள்ளது, அவருடைய மகிமை, பிரகாசம், கனம் மற்றும் அவரால் ஒளியும் பிரகாசமும் வருகிறது. அவரது ராஜரீகத்தன்மை காரணமாக அவர் ஒரு செங்கோல், அதாவது செங்கோல் தாங்கி என்றும் ராஜாவாக இருக்கிறார் என்றும் அழைக்கப்படலாம். அவர் ஒரு ராஜாவின் பெயரை மட்டுமல்ல, ஒரு ராஜ்யத்தையும் கொண்டிருக்கிறார், மேலும் கிருபை, இரக்கம் மற்றும் நீதியின் செங்கோலுடன் அவர் ஆட்சி செய்கிறார்.
நடைமுறை பயன்பாடு: புதிய ஏற்பாட்டில் எண்ணாகமத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு முக்கிய இறையியல் கருப்பொருள் என்னவென்றால், பாவமும் அவநம்பிக்கையும், குறிப்பாக கலகம் செய்து கிளர்ச்சி உண்டாக்குதல், தேவனுடைய நியாயத்தீர்ப்பை அறுவடை செய்கிறது. 1 கொரிந்தியர் குறிப்பாக கூறுகிறது - எபிரெயர் 3:7-4:13 வரையிலுள்ள வேதபாகமும் இதை வலுவாகக் குறிக்கிறது - இந்த நிகழ்வுகள் யாவும் விசுவாசிகள் மிகவும் கவனமாக கவனிக்கவும் தவிர்க்கவும் எடுத்துக்காட்டுகளாக எழுதப்பட்டுள்ளன. நாம் “தீய காரியங்களில் நம் இருதயங்களை அமைத்துக் கொள்ளக்கூடாது” (வச. 6), அல்லது பாலியல் ஒழுக்கக்கேடானவர்களாக இருக்கக்கூடாது (வச. 8), அல்லது தேவனை சோதனைக்குட்படுத்த கூடாது (வச. 9) அல்லது வலுக்கட்டாயமாக குறைகூறவும் கூடாது (வச. 10).
இஸ்ரவேலர் தங்கள் கிளர்ச்சியின் காரணமாக ஏறக்குறைய 40 வருடங்கள் வனாந்தரத்தில் அலைந்ததைப் போலவே, சில சமயங்களில் தேவன் நம்மை அவரிடமிருந்து விலகி அலையவும், தனக்கு எதிராக கலகம் செய்யும்போது தனிமையும் ஆசீர்வாதங்கள் இல்லாதிருக்கவும் அனுமதிக்கிறார். ஆனால் தேவன் உண்மையுள்ளவர், நீதியுள்ளவர், இஸ்ரவேலரை அவருடைய இருதயத்தில் சரியான இடத்திற்கு மீட்டெடுத்தது போலவே, நாம் மனந்திரும்பி அவரிடம் திரும்பி வந்தால், கிறிஸ்தவர்களை ஆசீர்வதிக்கும் இடத்திற்கு நெருக்கமான கூட்டுறவுக்கும் அவர் எப்போதும் மீட்டெடுப்பார் (1 யோவான் 1:9 ).
English
எண்ணாகமம் புத்தகம்