ரூத்தின் புத்தகம்
எழுத்தாளர்: ரூத்தின் புத்தகம் குறிப்பாக அதன் எழுத்தாளர் யார் என்று அவரது பெயரைக் குறிப்பிடவில்லை. பாரம்பரிய மரபு என்னவென்றால், ரூத்தின் புத்தகம் சாமுவேல் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது என்பதாகும்.எழுதப்பட்ட காலம்: ரூத்தின் புத்தகம் எழுதப்பட்ட சரியான காலம் தெரியவில்லை. இருப்பினும், நடைமுறையில் உள்ள முதன்மையான பார்வை இந்த புத்தகம் கி.மு. 1011 முதல் கி.மு. 931 வரையிலுள்ள ஆண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்டது என்பதாகும்.
எழுதப்பட்டதன் நோக்கம்: ரூத்தின் புத்தகம் இஸ்ரவேலருக்கு எழுதப்பட்டது. சில சமயங்களில் உண்மையான அன்புக்கு சமரசமற்ற தியாகம் தேவைப்படலாம் என்று அது கற்பிக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் உள்ள நிறைய விஷயங்களைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய கட்டளைகளின்படி வாழ முடியும். உண்மையான அன்பும் தயவும் வெகுமதி அளிக்கும். கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கையை வாழ முற்படுபவர்களை தேவன் ஏராளமாக ஆசீர்வதிக்கிறார். கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கை தேவனுடைய திட்டத்தில் "விபத்துக்களை" அனுமதிக்காது. தேவன் இரக்கமுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுகிறார்.
திறவுகோல் வசனங்கள்: ரூத் 1:16, "அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்."
ரூத் 3:9, "நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்.”
ரூத் 4:17, "அயல் வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்."
சுருக்கமான திரட்டு: ரூத் புத்தகத்திற்கான அமைப்பு சவக்கடலின் வடகிழக்கில் ஒரு பகுதியான மோவாப் என்ற புறஜாதி நாட்டில் தொடங்குகிறது, ஆனால் பின்னர் பெத்லகேமுக்கு நகர்கிறது. இந்த உண்மையான கணக்கு இஸ்ரவேலர்களின் தோல்வி மற்றும் கலகத்தின் மோசமான நாட்களில் நடைபெறுகிறது, இது நியாயாதிபதிகளின் காலம் என்று அழைக்கப்படுகிறது. தேசத்தில் உண்டாயிருந்த ஒரு பஞ்சம் எலிமெலேக்கையும் அவருடைய மனைவி நகோமியையும் இஸ்ரவேல் தேசத்திலிருந்து அதாவது பெத்லேமிலிருந்து மோவாப் நாட்டுக்குப் போகத் தூண்டுகிறது. எலிமெலேக் அங்கெ இறந்துவிடுகிறார், நகோமி தனது 2 மகன்களுடன் எஞ்சியிருக்கிறார், அவர்கள் விரைவில் 2 மோவாபிய பெண்களான ஓர்பா மற்றும் ரூத்தை திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்னர் மகன்கள் இருவரும் இறந்துவிடுகிறார்கள், நகோமி ஓர்பா மற்றும் ரூத்துடன் ஒரு அந்நிய தேசத்தில் தனியாக இருக்கிறார். ஓர்பா தனது பெற்றோரிடம் திரும்பி வருகிறாள், ஆனால் பெத்லகேமுக்குச் செல்லும்போது நகோமியுடன் செல்ல ரூத் தீர்மானிக்கிறாள். அன்பு மற்றும் பக்தியின் இந்த கதை, போவாஸ் என்ற ஒரு செல்வந்தனுடன் ரூத் திருமணம் செய்துகொள்வதைக் கூறுகிறது, அவளால் ஓபேத் என்ற மகனைப் பெற்றெடுத்தார், அவர் தாவீதின் தாத்தாவாகவும் அதாவது இயேசுவின் மூதாதையராகவும் மாறுகிறார். கீழ்ப்படிதல் ரூத்தை கிறிஸ்துவின் சலுகை பெற்ற வம்சாவளியில் கொண்டுவருகிறது.
முன்னிழல்கள்: ரூத் புத்தகத்தின் ஒரு முக்கிய கருப்பொருள் உறவின்முறை-மீட்பர் ஆகும். ரூத்தின் கணவரின் அடுத்த உறவினரான போவாஸ், மோசே நியாயப்பிரமாணத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, ஒரு வறிய உறவினரை அவனது சூழ்நிலைகளிலிருந்து மீட்பதற்காக தனது கடமையைச் செய்தான் (லேவி. 25:47-49). இந்த காட்சியை கிறிஸ்து மீண்டும் செய்கிறார், அவர் நம்மை ஆவிக்குரிய ரீதியில் வறியவர்களாக உள்ளவர்களின் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொள்கிறார். நம்முடைய பரலோகப் பிதா தம்முடைய குமாரனை சிலுவையில் மரிக்கும் படியாக அனுப்பினார், இதனால் நாம் தேவனுடைய பிள்ளைகளாகவும் கிறிஸ்துவின் சகோதர சகோதரிகளாகவும் ஆகிவிட்டோம். நம்முடைய மீட்பராக இருப்பதன் மூலம், நாம் அவருடைய உறவினர்களாக மாறுகிறோம்.
நடைமுறை பயன்பாடு: நம்முடைய பெரிய தேவனின் இறையாண்மை ரூத்தின் கதையில் தெளிவாகக் காணப்படுகிறது. அவர் தனது பிள்ளையாக மாறுவதற்கான ஒவ்வொரு அடியையும் அவளுக்கு காண்பித்து வழிகாட்டினார், மேலும் இயேசு கிறிஸ்துவின் மூதாதையராக ஆவதற்கான தனது திட்டத்தையும் நிறைவேற்றினார் (மத்தேயு 1:5). அதேபோல், நம் ஒவ்வொருவருக்கும் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதில் நமக்கும் உறுதியுள்ளது. நகோமியும் ரூத்தும் அவருக்காக விசுவாசம் வைத்து நம்பிக்கையோடு இருந்தது போலவே, நாமும் அவ்வாறு செய்ய வேண்டும்.
நீதிமொழிகள் 31-ல் கூறப்பட்டுள்ள குணாசாலியான ஸ்திரீயின் உதாரணத்தை ரூத்தில் காண்கிறோம். அவளுடைய குடும்பத்தினருக்காக அர்ப்பணிப்புடன் (ரூத் 1:15-18; நீதிமொழிகள் 31:10-12) மற்றும் தேவனையே மெய்யாக நம்பியிருக்கும் (ரூத் 2:12; நீதிமொழிகள் 31:30), தேவபக்தியுள்ள ஒரு பெண்ணை ரூத்தில் காண்கிறோம். நகோமி மற்றும் போவாஸ் ஆகியோருக்கு அவளுடைய அன்பான, கனிவான, மற்றும் மரியாதைக்குரிய வார்த்தைகளைக் காண்கிறோம். நீதிமொழிகள் 31-ன் குணாசாலியான ஸ்திரீ “தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது” (வச. 26). நம்முடைய முன்மாதிரியாக இருப்பதற்கு ரூத் போன்ற தகுதியான ஒரு பெண்ணை இன்று கண்டுபிடிக்க நாம் இங்கும் அங்குமாக தேடி அலைய வேண்டும்.
English
ரூத்தின் புத்தகம்