கேள்வி
ஆபேலைக் கொன்ற பிறகு காயீன் யாருக்குப் பயந்தான்?
பதில்
ஆதியாகமம் 4:13-14 இல், அவன் தன் சகோதரன் ஆபேலைக் கொன்ற சிறிது நேரத்திலேயே, “அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது. இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.'' காயீன் உண்மையில் யாருக்குப் பயந்தான்? ஆதியாகமம் புத்தகம் இந்த இடத்தில் குறிப்பிட்டுள்ள ஒரே நபர்கள் ஆதாம் மற்றும் ஏவாள் (அதாவது காயீனின் பெற்றோர்) மற்றும் ஆபேல் (இப்போது இறந்துவிட்டான்). காயீனுக்கு யார் அச்சுறுத்தலாக இருக்க முடியும்?
காயீன் ஆபேலைக் கொன்ற நேரத்தில் காயீன் மற்றும் ஆபேல் இருவரும் முழு வளர்ச்சியடைந்த பெரியவர்கள் என்பதை அங்கீகரிப்பது முக்கியம். காயீன் மற்றும் ஆபேல் இருவரும் தங்கள் சொந்த நிலங்களையும் மந்தைகளையும் பராமரிக்கும் விவசாயிகள் (ஆதியாகமம் 4:2-4). காயீனுக்கும் ஆபேலுக்கும் எவ்வளவு வயது என்று வேதாகமம் சொல்லவில்லை, ஆனால் அவர்கள் 30 அல்லது 40-களில் இருந்திருக்கலாம். ஆபேலுக்கும் சேத்துக்கும் இடையில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் குழந்தைகள் இருப்பதாக வேதாகமம் குறிப்பிடவில்லை (ஆதியாகமம் 4:25). இருப்பினும், உலக வரலாற்றில் இரண்டு மிகச் சிறந்த மனிதர்களான ஆதாம் மற்றும் ஏவாளுக்கு பல தசாப்தங்களாக குழந்தைகள் இல்லை என்பது மிகவும் சாத்தியமில்லை. ஆதாமும் ஏவாளும் சேத்துக்குப் பிறகு பல குழந்தைகளைப் பெற்றனர் (ஆதியாகமம் 5:4), அதனால் அவர்கள் ஏன் ஆபேலுக்கும் சேத்துக்கும் இடையில் வேறு குழந்தைகளைப் பெற்றிருக்க மாட்டார்கள்? ஆபேல் கொல்லப்பட்ட பிறகு சேத் ஆதாம் மற்றும் ஏவாளின் முதல் குழந்தை அல்லது முதல் குமாரன்ன் என்று வேதாகமம் கூறவில்லை. மாறாக, சேத் ஆபேலுக்கு "மாற்றாக" பிறந்தான் என்று கூறுகிறது. ஆதியாகமம் 5ஆம் அதிகாரம் சேத்தின் வம்சவரலாற்றைக் குறிப்பிடுகிறது. மரிப்பதற்கு முன், ஆபேல் "தேர்ந்தெடுக்கப்பட்ட" மகனாக இருக்கலாம், அது இறுதியில் மேசியாவை உருவாக்கும் (ஆதியாகமம் 3:15). இந்த அர்த்தத்தில்தான் சேத் ஆபேலை "பதிலீடு செய்தான்".
எனவே, காயீன் யாருக்கு பயந்தான்? காயீன் ஏற்கனவே பிறந்து பழிவாங்கும் திறன் கொண்ட தனது சொந்த சகோதரர்கள், சகோதரிகள், மருமகன்கள் மற்றும் மருமகள்களுக்கு பயந்தான். காயீனுக்கு ஒரு மனைவி இருந்தாள் (ஆதியாகமம் 4:17) ஆதாமும் ஏவாளும் காயீன் மற்றும் ஆபேலுக்குப் பிறகு, ஆனால் சேத்துக்கு முன் மற்ற குழந்தைகளைப் பெற்றனர் என்பதற்கு மேலும் ஒரு சான்றாகும்.
English
ஆபேலைக் கொன்ற பிறகு காயீன் யாருக்குப் பயந்தான்?