கேள்வி
காயீனின் மனைவி யார்? காயீனின் மனைவி அவனது சகோதரியா?
பதில்
காயீனின் மனைவி யாரென்பதை வேதாகமம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அவனது சகோதரியோ, மருமகளோ அல்லது பேத்தியோ போன்றவர்தாம் காயீனின் மனைவியாக இருந்திருக்க முடியும் என்கிற ஒரே பதில்தான் இங்கு சாத்தியம். காயீன் ஆபேலைக் கொலை செய்தபோது அவனது வயது என்ன என்பதையும் வேதாகமம் நமக்குச் சொல்லவில்லை (ஆதியாகமம் 4:8). இருவரும் விவசாயிகள் என்பதனால் இருவரும் வயது வந்தவர்கள் எனலாம். சொந்தக் குடும்பமும் இருந்திருக்கலாம். ஆபேல் கொலை பண்ணப்பட்டபோது, காயீனையும் ஆபேலையும் தவிர ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வேறு அநேக பிள்ளைகள் இருந்திருப்பார்கள். நிச்சயமாகவே பின்பு இன்னும் பல குழந்தைகளைப் பெற்றிருப்பார்கள் (ஆதியாகமம் 5:4). ஆபேலைக் கொலை செய்தபின் காயீன் தன் உயிருக்குப் பயந்திருந்தான் (ஆதியாகமம் 4:14) என்னும் உண்மை நமக்கு காண்பிக்கிற தெளிவு அப்பொழுதே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மேலும் பல குழந்தைகள் இருந்திருப்பார்கள், சொல்லப்போனால் பேரக்குழந்தைகளும் இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. காயீனின் மனைவி (ஆதியாகமம் 4:17) ஆதாம் ஏவாளுடைய மகளோ அல்லது பேத்தியோதான்.
ஆதாமும் ஏவாளும் தேவனால் முதன் முதலாக படைக்கப்பட்ட மனிதர்கள் என்பதால், அன்று அவர்கள் அவர்களது குழந்தைகளுக்கு குடும்பத்திற்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இல்லாதிருந்தது. மக்கள்தொகை அதிகமாகி குடும்பத்திற்குள்ளேயே திருமண உறவு ஏற்படுத்திக்கொள்வது தேவையில்லை என்கிற காலம் வரையில் அவர்களுக்குள்ளேயே அதாவது குடும்பத்திற்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதை அவர் தடைபண்ணவில்லை (லேவியராகமம் 18:6-18). மிகவும் நெருங்கிய, முறையல்லாத உறவினர்களிடையில் நிகழும் சேர்க்கை இக்காலத்தில் அதிகமாக மரபியல் சீர்கேடுகளில் முடிகிறது. என்னத்தினாலெனில், ஒரே மரபியற்குழுவைச் சேர்ந்த இரண்டுபேர் (எ.கா. ஒரு சகோதரனும் சகோதரியும்) சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, ஒடுங்கிய பண்புகொண்ட மரபணுக்கள் மேலாதிக்கம் செலுத்தி பிறக்கிற குழந்தைகள் கோளாறுகளுடன் பிறக்கும் ஆபத்தான நிலை உருவாகிறது. இரு வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்போது, பெற்றோர்கள் இருவருக்கும் ஒரே ஒடுங்கிய பண்புகொண்ட மரபணுக்களின் மேலாதிக்கம் இருப்பது மிகக்குறைவு. மனிதகுல மரபியல் குறியீடு “மாசுபடுதல்” அதிகமாகிக்கொண்டே போகிறது. ஆண்டுகள் நூற்றாண்டுகளாக மரபணு குறைவுகள் தலைமுறை தலைமுறைகளாக பல மடங்குகளாக உயர்ந்து, இன்று பூதாகரமாக மாறிவிட்டது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எந்த மரபணுக்குறைவும் இருக்கவில்லை. அதனால் அவர்களும், அவர்களது சந்ததியில் அடுத்து வந்த சில தலைமுறைகளும் நமக்கு இன்று இருப்பதைவிட நல்ல ஆரோக்கியமான உடல்நிலை இருந்தது. ஆதாம் ஏவாளின் குழந்தைகளுக்கு எந்த மரபணுக் குறையும் இருக்கவில்லை. அதன் பலனாக குடும்பத்திற்குள்ளே நெருங்கிய உறவினர்களுக்கிடையே திருமணம் செய்துகொள்வது பாதுகாப்பானதாகவும் இருந்தது.
English
காயீனின் மனைவி யார்? காயீனின் மனைவி அவனது சகோதரியா?