கேள்வி
கரிஸ்மாட்டிக் இயக்கம் என்றால் என்ன?
பதில்
கரிஸ்மாட்டிக் இயக்கம் ஒரு சபைபாகுபாடற்ற கிறிஸ்தவ புதுப்பிப்பு இயக்கமாகும், இது இன்று கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சக்திகளில் ஒன்றாகும். இந்த இயக்கம் அதன் தோற்றங்களை 1906 இல், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவில் உள்ள மெதடிஸ்ட்-அளித்த மறுமலர்ச்சியில் உள்ள அசுசா ஸ்ட்ரீட் மிஷனில் இருந்து வருகிறது. பெந்தெகொஸ்தே கொண்டாட்டத்தின் போது அப்போஸ்தலர் 2 ஆம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதத்தில் "பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெற்றதாக" மக்கள் கூறினர். மக்கள் அந்நியபாஷையில் பேசுவது மற்றும் குணமாக்குவதும் போன்ற அற்புதங்கள் மக்களை ஆவிக்குரிய வெறியில் ஆழ்த்தியது. அந்த கூட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் அமெரிக்கா முழுவதும் தங்களுக்கு உண்டாயிருந்த அதீத உற்சாகத்தை பரப்பினர், மற்றும் பெந்தேகோஸ்தே/கரிஸ்மாட்டிக் இயக்கம் தொடங்கியது.
1970-களின் முற்பகுதியில், இயக்கமானது ஐரோப்பாவிற்கு பரவியது, 1980-களில் இயக்கம் விரிவடைந்தது, அதிலிருந்து பல புதிய பிரிவுகள் உருவாகின. பாப்திஸ்டுகள், எப்பிஸ்கோப்பலியர்கள் மற்றும் லூதரன்ஸ் போன்ற பல பிரிவுகளிலும், வகுப்பு சாரா சபைகள் அவற்றின் செல்வாக்கைக் காண்பது அசாதாரணமானது அல்ல.
இந்த இயக்கம் அதன் பெயரை கிரேக்க வார்த்தைகளான காரிஸ் "கிருபை" என்பதற்கான கிரேக்க வார்த்தையின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்தும் மற்றும் மாட்டா, கிரேக்க வார்த்தையான "வரங்கள்" என்பவைகளில் இருந்து வருகிறது. ஆகவே கரிஸ்மாட்டா என்றால் "கிருபை வரங்கள்" என்று பொருள்படும். இது பரிசுத்த ஆவியானவருடைய வரங்களின் வெளிப்பாடுகளை பரிசுத்த ஆவியின் இருப்பின் அடையாளமாக வலியுறுத்துகிறது. இந்த வரங்கள் வேதாகம "கரிஸ்மாக்கள்" அல்லது ஆவிக்குரிய வரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன, அவை அதிக எண்ணிக்கையிலான மக்கள் மீது தனிப்பட்ட செல்வாக்கு அல்லது அதிகாரத்தை அளிக்கின்றன. இந்த "கரிஸ்மாக்களில்" முக்கிய வரங்கள் அந்நியபாஷையில் பேசுவது மற்றும் தீர்க்கதரிசனம் உரைப்பது. முதல் நூற்றாண்டு சபையில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்த ஆவியின் வெளிப்பாடுகள் இன்றும் அனுபவிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கலாம் என்று கரிஸ்மாட்டிக் கொள்கையாளர்கள் கருதுகின்றனர்.
கரிஸ்மாடிக் இயக்கம் பரிசுத்த ஆவியானவருக்கு சான்றாக அந்நிய பாஷைகளில் பேசுதல் (குளோஸோலாலியா என்றும் அழைக்கப்படுகிறது), தெய்வீக குணப்படுத்துதல் மற்றும் தீர்க்கதரிசனங்களை ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் பிரபலமானது. பெரும்பாலான கூட்டங்கள் ஜெபித்தல் மற்றும் உற்சாகப்பாட்டு பாடுதல், நடனமாடுதல், "ஆவியில்" என்று கத்துதல் மற்றும் ஜெபத்தில் கைகளை உயர்த்துதல் அசைவாட்டுதல் என நடந்தேறுகிறது. மேலும், வியாதியுள்ளவர்களுக்கு எண்ணெய் பூசுவது பெரும்பாலும் ஆராதனையின் ஒரு பகுதியாகும். இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் புகழுக்கு இவைதான் முதன்மைக் காரணங்கள். வளர்ச்சியும் புகழும் நிச்சயமாக விரும்பத்தக்கது என்றாலும், அவற்றை ஒரு மெய்யான சோதனையாகப் பயன்படுத்த முடியாது.
கேள்வி எஞ்சியுள்ளது: கரிஸ்மாட்டிக் இயக்கம் வேதப்பூர்வமானதா? இந்த கேள்விக்கு நாம் சிறந்த முறையில் பதிலளிக்க முடியும்: மனிதகுலத்தை சிருஷ்டித்ததில் இருந்து சாத்தானின் நயவஞ்சக முதன்மை திட்டம் வெறுமனே தேவனுடைய பிள்ளைகளுக்கும் தேவனுடைய வார்த்தைகளுக்கும் இடையே ஒரு திரையைப் போடுவதாகும். ஏதேன் தோட்டத்தில் சர்ப்பம் ஏவாளிடம் “தேவன் மெய்யாகவே சொன்னது உண்டோ...?" என்று கேட்டபோது, (ஆதியாகமம் 3:1), இதன் மூலம் தேவன் கூறியவற்றின் அதிகாரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுகிறது. அன்று முதல், அவன் வேதாகமத்தின் பிழையற்ற தன்மையையும் போதுமான தன்மையையும் தொடர்ந்து தாக்கினான். எவ்வித சந்தேகமுமில்லாமல், சாத்தான் இந்த தந்திரத்தின் படியே சுற்றித்திரிந்து வருவதை நாம் அறிவோம் (1 பேதுரு 5:8).
இன்று, அற்புதத்தின் உலகில் பிசாசு நடவடிக்கைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். சாத்தான் நம்மிடமிருந்து வேதாகமத்தை எடுத்துப்போட்டு விடலாம் என்கிற திட்டம் வெற்றிபெறாதபோது, வேதாகமத்திலிருந்து நம்மை எடுத்து அகற்றுவதில் முழுமூச்சாக உழைக்கிறான். சில இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களுக்கும் அனுபவங்களுக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் என கிறிஸ்தவர்களின் கவனத்தைச் சிதறடிப்பதன் மூலம் அவன் இதைச் செய்கிறான். இதன் விளைவாக, மற்றவர்களின் அனுபவங்களைத் தேடுபவர்களுக்கு தேவனுடைய வார்த்தையில் உள்ள சத்தியங்களைத் தேடுவதில் நேரமோ ஆர்வமோ இல்லை.
தேவன் அற்புதங்களைச் செய்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. கரிஸ்மாட்டிக் இயக்கத்தில் நிகழும் சில காரியங்கள் பரிசுத்த ஆவியானவரின் உண்மையான கிரியையாக இருக்கலாம். இருப்பினும், முக்கியமான உண்மை இதுதான்: இன்றைக்கு கிறிஸ்துவின் சரீரத்திற்கு புதிய அப்போஸ்தலர்களோ, புதிய விசுவாசத்தால் குணப்படுத்துபவர்களோ அல்லது சுய-பாணியில் அற்புதங்களை செய்யும் ஊழியர்களோ தேவையில்லை. சபைக்குத் தேவையானது என்னவென்றால் தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புவதோடு, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையிலும் அன்பிலும் தேவனுடைய முழு ஆலோசனையையும் அறிவிக்க வேண்டும்.
English
கரிஸ்மாட்டிக் இயக்கம் என்றால் என்ன?