கேள்வி
கிறிஸ்லாம் என்றால் என்ன?
பதில்
கிறிஸ்லாம் என்பது கிறிஸ்தவத்தை இஸ்லாத்துடன் ஒருங்கிணைக்கும் முயற்சியாகும். இது 1980-களில் நைஜீரியாவில் தொடங்கியது, மேலும் கிறிஸ்லாமிக் கருத்துக்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. கிறிஸ்லாமின் இன்றியமையாத கருத்து என்னவென்றால், கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒத்துப்போகின்றன என்பதாகும், ஒரே நேரத்தில் ஒருவர் கிறிஸ்தவராகவும் முஸ்லிமாகவும் இருக்கலாம். கிறிஸ்லாம் அதன் சொந்த மதம் அல்ல, மாறாக கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் இடையே உள்ள வேறுபாடுகள் மற்றும் வித்தியாசங்களை மங்கலாக்குகிறது.
குரானில் இயேசு 25 முறை குறிப்பிடப்பட்டிருப்பது போன்ற உண்மைகளை கிறிஸ்லாமின் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர், அல்லது கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஒரே மாதிரியான போதனைகளை அறநெறிகள் மற்றும் நெறிமுறைகள் அல்லது நாத்திகம் மற்றும் நாத்திகத்தின் எழுச்சிக்கு எதிராக போராட இரண்டு பெரிய ஏகத்துவ மதங்கள் ஒன்றிணைவதன் அவசியம் மாற்று ஆவிக்குரிய வாழ்வைக் குறித்து கூறுகின்றன. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மேற்கத்திய நாடுகளுக்கும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கான தீர்வாக கிறிஸ்லாமானது சிலரால் பார்க்கப்படுகிறது.
கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் (மற்றும் யூத மதம்) ஆகியவற்றுக்கு இடையே பல ஒற்றுமைகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது என்றாலும், கிறிஸ்லாம் இறுதியில் தோல்வியடைகிறது, ஏனெனில் கிறிஸ்தவமும் இஸ்லாமும் மிக முக்கியமான பிரச்சினைகளில்—இயேசு கிறிஸ்து யார் என்பதை அடையாளம் காண்பதில்—முற்றிலும் எதிர்க்கப்படுகின்றன. உண்மையான கிறிஸ்தவம் இயேசுவை மனித உருவில் வந்த தேவன் என்று அறிவிக்கிறது. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, கிறிஸ்துவின் தெய்வீகம் என்பது பேச்சுவார்த்தைக்குட்படாத ஒன்று, ஏனென்றால் அவருடைய தெய்வீகம் இல்லாமல், இயேசுவின் சிலுவை மரணம் முழு உலகத்தின் பாவங்களுக்குப் பரிகாரப் பலியாக போதுமானதாக இருந்திருக்காது (1 யோவான் 2:2).
இஸ்லாம் கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை பிடிவாதமாக நிராகரிக்கிறது. குரான் இயேசுவை தேவன் என்கிற கருத்தை நிந்தனை என்று அறிவிக்கிறது (5:17). கிறிஸ்துவின் தெய்வத்துவத்தின் மீதான நம்பிக்கை முஸ்லிம்களுக்கு ஷிர்க் "அசுத்தமாக" கருதப்படுகிறது. மேலும், சிலுவையில் கிறிஸ்து மரித்த மரணத்தை இஸ்லாம் மறுக்கிறது (4:157-158). கிறிஸ்தவ நம்பிக்கையின் மிக முக்கியமான கோட்பாடு இஸ்லாத்தில் நிராகரிக்கப்படுகிறது. இதன் விளைவாக, இரண்டு மதங்களும் முற்றிலும் பொருந்தவில்லை, கிறிஸ்லாமை கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் நிராகரிக்க வேண்டிய ஒரு கருத்தாக்கம் ஆகும்.
English
கிறிஸ்லாம் என்றால் என்ன?