settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவ தொல்பொருளியல் – இது ஏன் முக்கியமானது?

பதில்


தொல்பொருளியல் இரண்டு ஒருங்கிணைந்த கிரேக்க சொற்களிலிருந்து வருகிறது - ஆர்க்கே என்றால் “பண்டைய”, மற்றும் லோகோஸ் என்றால் “அறிவு”; இதனால், "பண்டைய அல்லது புராதன அறிவு/ஆய்வு" என்று பொருள்படுகிறது. இண்டியானா ஜோன்ஸ் என்னும் வகையை விட அதிகமான ஒரு தொல்பொருள் ஆய்வாளர் என்னும் தனிநபராக, அருங்காட்சியகத்தில் வைக்க பழைய கலைப்பொருட்களைத் தேடும் உலகெங்கும் இயங்குபவராகும். தொல்பொருளியல் என்பது ஒரு விஞ்ஞானமாகும், இது பண்டைய கலாச்சாரங்களை கடந்த காலத்திலிருந்து மீட்டெடுத்து ஆவணப்படுத்துவதன் மூலம் ஆய்வு செய்கிறது. கிறிஸ்தவ தொல்பொருளியல் என்பது கிறிஸ்தவத்தையும் யூத மதத்தையும் வெகுவாக பாதித்த பண்டைய கலாச்சாரங்களையும் யூத மற்றும் கிறிஸ்தவ கலாச்சாரங்களையும் தாங்களே ஆய்வு செய்யும் ஒரு விஞ்ஞானமாகும். கிறிஸ்தவ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடந்த காலத்தைப் பற்றிய புதிய விஷயங்களைக் கண்டறிய முயற்சிப்பது மட்டுமல்லாமல், கடந்த காலத்தைப் பற்றி நாம் ஏற்கனவே அறிந்தவற்றை சரிபார்க்கவும், வேதாகமத்தினுடைய மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறைகளைப் பற்றிய நமது புரிதலை முன்னேற்றவும் முயற்சிக்கின்றனர்.

வேதாகம உரை மற்றும் பிற எழுதப்பட்ட பதிவுகள் பண்டைய வேதாகம மக்களின் வரலாறு பற்றி நம்மிடம் உள்ள மிக முக்கியமான தகவல்கள் ஆகும். ஆனால் இந்த பதிவுகள் பல பதிலளிக்கப்படாத கேள்விகளை தனியே விட்டுவிட்டன. அங்குதான் கிறிஸ்தவ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்கள். வேதாகம விவரிப்பு வழங்கும் பகுதி சித்திரத்தை அவர்கள் முழுமையாக நிரப்ப முடியும். பண்டைய குப்பைக் கழிவுகள் மற்றும் கைவிடப்பட்ட நகரங்களின் அகழ்வாராய்ச்சிகள் துண்டுகள் மற்றும் துணுக்குகளை வழங்கியுள்ளன, அவை கடந்த காலத்திற்கு துப்பு தருகின்றன. கிறிஸ்தவ தொல்பொருளியலின் குறிக்கோள் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளின் அத்தியாவசிய உண்மைகளை பண்டைய மக்களின் உடல் கலைப்பொருட்கள் மூலம் சரிபார்க்க வேண்டும்.

கிறிஸ்தவ தொல்பொருளியல் 19-ஆம் நூற்றாண்டு வரை அறிவியல் ஒழுக்கமாக மாறவில்லை. கிறிஸ்தவ தொல்பொருளியல் துறையின் கட்டுமானத் தொகுதிகள் ஜோஹான் ஜான், எட்வர்ட் ராபின்சன் மற்றும் சர் பிளிண்டர்ஸ் பெட்ரி போன்றவர்களால் அமைக்கப்பட்டன. வில்லியம் எஃப். ஆல்பிரைட் என்பவர் 20-ஆம் நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்தியவர். ஆல்பிரைட் தான் வேதாகம கதைகளின் தோற்றம் மற்றும் நம்பகத்தன்மை குறித்த சமகால விவாதங்களில் கிறிஸ்தவ தொல்பொருள் ஆய்வை ஈர்த்தார். ஆல்பிரைட் மற்றும் அவரது மாணவர்கள்தான் வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளுக்கான பௌதீக ஆதாரங்களை வழங்கினர். இருப்பினும், இன்று பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வேதாகமத்தை நிரூபிக்க முயற்சிக்கிறார்கள், அது துல்லியமானது என்பதை நிரூபிப்பவர்களும் இருக்கிறார்கள்.

உலக சம்பந்தமானவற்றிலிருந்து கிறிஸ்தவத்தின் மீதான புதிய தாக்குதல்களைக் கண்டுபிடிக்க நாம் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. டிஸ்கவரி சேனலில் “தி டா வின்சி கோட்” ஆவணப்படம் போன்ற நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு ஆகும். பிற காரியங்கள் கிறிஸ்துவின் வரலாற்றுத்தன்மையைக் கையாண்டன. ஜேம்ஸ் கேமரூனின் ஒரு திட்டம், இயேசுவின் கல்லறை மற்றும் அடக்கம்பண்ணப்பட்ட பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக வாதிட்டது. இந்த "கண்டுபிடிப்பிலிருந்து" இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பவில்லை என்ற முடிவுக்கு வந்தது. இந்த திட்டம் சொல்லத் தவறியது என்னவென்றால், அந்த பெட்டி பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது, அது கிறிஸ்துவின் அடக்கம்பண்ணப்பட்ட பெட்டி அல்ல என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கடின உழைப்பின் மூலம் இந்த அறிவு அடையப்பட்டது.

தொல்பொருளியல் சான்றுகள் தான், முன்னோர்களின் வாழ்க்கை மற்றும் நேரங்கள் குறித்த சிறந்த பௌதீக தகவல்களை வழங்குகிறது. பண்டைய தளங்களின் அகழ்வாராய்ச்சிக்கு முறையான விஞ்ஞான முறைகள் பயன்படுத்தப்படும்போது, பண்டைய மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரம் மற்றும் வேதாகம உரையை உறுதிப்படுத்தும் சான்றுகள் பற்றிய கூடுதல் புரிதலை நமக்கு வழங்கும் தகவல்கள் வெளிவருகின்றன. உலகெங்கிலும் உள்ள நிபுணர்களுடன் பகிரப்பட்ட இந்த கண்டுபிடிப்புகளின் முறையான பதிவுகள், வேதாகம காலங்களில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைப் பற்றிய முழுமையான தகவல்களை நமக்குத் தரும். கிறிஸ்தவ தொல்பொருளியல் என்பது வேதாகம விவரிப்பு மற்றும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை முழுமையாகப் பாதுகாக்க அறிஞர்கள் பயன்படுத்தக்கூடிய கருவிகளில் ஒன்றாகும். பெரும்பாலும், நம்முடைய விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, விசுவாசிகள் அல்லாதவர்களால் அதாவது அவிசுவாசிகளால் கேட்கப்படும் கேள்வி, வேதாகமம் எவ்வாறு உண்மை என்று நமக்குத் தெரியும் என்பதாகும். நாம் தரக்கூடிய பதில்களில் ஒன்று, கிறிஸ்தவ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் பணி மூலம், வேதாகமத்தின் பல உண்மைகள் சரிபார்க்கப்பட்டுள்ளன.

English



முகப்பு பக்கம்

கிறிஸ்தவ தொல்பொருளியல் – இது ஏன் முக்கியமானது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries