கேள்வி
கிறிஸ்தவ ஞானஸ்னானத்தின் முக்கியத்துவம் என்ன?
பதில்
சபையானது கடைபிடித்து ஆசரிக்கவேண்டுமென்று இயேசு நிறுவி ஆரம்பித்து வைத்த இரண்டு சடங்குகள் அல்லது ஆசரிப்புகளில் ஒன்றுதான் இந்த கிறிஸ்தவ ஞானஸ்நானம். இயேசு பரமேறிச் செல்லுவதற்கு முன்பதாக, “நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்”. இந்த உபதேசங்கள் குறிப்பிட்டு கூறுகிற காரியம் என்னவெனில், எங்கும் சென்று சுவிசேஷம் அறிவித்து, சீஷர்களாக மாற்றி பிறகு அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்கிறதான காரியம் சபைக்கு இயேசு கொடுத்த மாபெரும் பொறுப்பு ஆகும். உலகத்திற்கு முடிவு வரும்வரை இந்த காரியங்கள் எல்லா இடங்களிலும் செய்யப்பட வேண்டும். இயேசுவே ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும் என்று கட்டளையிட்டபடியினாலே, இதனுடைய முக்கியத்துவம் மிகதெளிவாக விளங்குகிறது.
சபை ஸ்தாபிக்கப்படும் முன்னரே ஞானஸ்நானம் கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. பண்டைய நாட்களில் வேற்று மதத்திலிருந்து யூத மதத்திற்கு மதம் மாறியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. யோவான்ஸ்நானன் கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தி கொண்டு, தம்மிடத்தில் வந்தவர்களுக்கு மனந்திரும்புதலுக்கு என்று தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தார். ஜாதிகளுக்கு மட்டுமல்ல யூதர்களுக்கும் கொடுத்துவந்தார், காரணம் மனந்திரும்புதல் எல்லாருக்கும் அவசியமானதாகும். எனினும் யோவானின் ஞானஸ்நானம் காண்பிக்கிற மனந்திரும்புதல் போலல்ல கிறிஸ்தவ ஞானஸ்நானம் (அப்போஸ்தலர் 18:24-26; 19:1-7). கிறிஸ்தவ ஞானஸ்நானம் ஆழமான தனிச்சிறப்பு நிறைந்ததாகும்.
கிறிஸ்தவ ஞானஸ்நானம் பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே கொடுக்கப்படவேண்டும். இந்த சடங்கின் மூலமாகத்தான் ஒரு நபர் சபையின் ஐக்கியத்தில் சேர்க்கப்படுகிறார். நாம் இரட்சிக்கப்பட்டபோது, பரிசுத்த ஆவியானவராலே கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். 1 கொரிந்தியர் 12:13 கூறுகிறது: “நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்”. தண்ணீரினால் எடுக்கிற ஞானஸ்நானம் போல் ஆவியானவரால் ஞானஸ்நானம் பெற்றதற்கும் அடையாளமாக இருக்கிறது.
கிறிஸ்தவ ஞானஸ்நானத்தில் ஒரு நபர் வெளிப்படையாக தனது விசுவாசம் மற்றும் சீஷத்துவத்தை அறிக்கையிடுகிறார். தண்ணீர் ஞானஸ்நானத்தின்போது, ஒருவர் வார்த்தைகள் எதுவுமின்றி கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை அதாவது கிறிஸ்து பாவத்திலிருந்து கழுவி பரிசுத்தமாக வாழ்வதற்கான புதிய ஜீவனை அளித்திருக்கிறார் என்பதை பிரகடனம் செய்கிறார்.
கிறிஸ்தவ ஞானஸ்நானம் கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலை தத்ரூபமாக விளக்குகிறது. அதேவேளையில் இயேசு கிறிஸ்துவில் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, அவரோடு உயிர்த்தெழுந்து அவரில் நமக்கு உண்டாயிருக்கிற புதிதான ஜெவனையும் காண்பிக்கிறது. ஒரு பாவி கிறிஸ்துவை அறிக்கை பண்ணும்போது, அவர் பாவத்திற்கு மரித்து (ரோமர் 6:11), புதிதான ஜீவனுள்ளவராக (கொலோசெயர் 2:12) மாறுகிறதன் அடையாளமாகும். தண்ணீருக்குள் செல்லுதல் பாவத்திற்கு மரித்த செயலையும், வெளியே வருவது கழுவப்பட்டு புதிதான ஜீவனைப்பெற்றதையும் தெரிவிக்கிறது. “மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்” (ரோமர் 6:4).
சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஞானஸ்நானம் என்பது, உள்ளான மாற்றத்தினுடைய வெளியரங்கமான சாட்சியாகும். இரட்சிக்கப்பட்டவுடன் கர்த்தருக்கு கீழ்படிகிற ஒரு செயலாக இருக்கிறது கிறிஸ்தவ ஞானஸ்நானம். ஞானஸ்நானம் நமது இரட்சிப்போடு நெருங்கிய உறவு இருந்தாலும், இரட்சிக்கப்படுவதற்கு இது ஒரு அவசியம் இல்லை. வேதாகமத்தின் பல இடங்களில் இந்த கிரமம் கொடுக்கப்பட்டுள்ளது: 1) ஒருவர் கர்த்தர் இயேசுவில் விசுவாசிக்கிறார்; 2) அவர் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்கிறார். இந்த முறையை அப்போஸ்தலர் 2:41ல் காணலாம். பேதுருவின் செய்தியை ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் (அப்போஸ்தர் 16:14-15).
இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரில் இருக்கிற புதிய விசுவாசி, கூடுமானவரை சீக்கிரமாகவே ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போஸ்தலர் 8ஆம் அதிகாரத்தில், “அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப்பிரசங்கித்தான். இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்” என்று வாசிக்கிறோம்(வசனங்கள் 36-36). உடனே இரத்தத்தை நிறுத்தி பிலிப்பு அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்.
ஞானஸ்நானம் என்பது ஒரு விசுவாசி இயேசுவின் மரணம், அடக்கம், மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றுடன் தன்னை இணைதுக்கொண்டதற்கான வெளியரங்கமான அடையாளமாகும்.எங்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைக்கும்போது, அவர்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
English
கிறிஸ்தவ ஞானஸ்னானத்தின் முக்கியத்துவம் என்ன?