கேள்வி
இரட்சிப்பு என்றால் என்ன? கிறிஸ்தவ இரட்சிப்பின் உபதேசம் என்ன?
பதில்
ஆபத்து அல்லது துன்பத்திலிருந்து மீட்கப்படுகிறதே இரட்சிப்பு ஆகும். இரட்சித்தல் என்பது விடுவி அல்லது பாதுகாத்துக்கொள் என்பதாகும். இந்த வார்த்தை வெற்றி, ஆரோக்கியம், அல்லது பாதுகாப்பு ஆகியவற்றின் கருத்தை கொண்டுள்ளது. சில சமயங்களில், பவுல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதைப் போன்ற, தற்காலிகமான, உடல் ரீதியான விடுதலையைப் பற்றிக் குறிப்பிடுவதற்காக, இரட்சிக்கப்படுதல் அல்லது இரட்சிப்பைக் குறிக்கும் வார்த்தைகளை வேதாகமம் பயன்படுத்துகிறது (பிலிப்பியர் 1:19).
பெரும்பாலும், "இரட்சிப்பு" என்கிற வார்த்தை நித்தியமான, ஆவிக்குரிய விடுதலையைப் பற்றியதாகும். பவுல் பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலை அதிகாரிக்கு இரட்சிக்கப்படுவதற்கு அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொன்னபோது, அவர் சிறைச்சாலை அதிகாரியின் நித்திய விதியைக் குறிப்பிடுகிறார் (அப்போஸ்தலர் 16:30-31). தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதை இயேசு இரட்சிக்கப்பட்டார் என துல்லியப்படுத்துகிறார் (மத்தேயு 19:24-25).
நாம் எதிலிருந்து இரட்சிக்கப்படுகிறோம்? கிறிஸ்தவ இரட்சிப்பின் உபதேசத்தில், நாம் தேவனுடைய "கோபத்தில்" இருந்து மீட்கப்படுகிறோம், அதாவது பாவத்திற்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து மீட்கப்படுகிறோம் (ரோமர் 5:9; 1 தெசலோனிக்கேயர் 5: 9). நம்முடைய பாவங்கள் தேவனிடமிருந்து நம்மை பிரிக்கின்றன, பாவத்தின் விளைவு மரணம் (ரோமர் 6:23). வேதாகம இரட்சிப்பு என்பது பாவத்தின் விளைவுகளிலிருந்து நம்முடைய விடுதலையைக் குறிக்கிறது, எனவே பாவத்தை அகற்றுவதை உட்படுத்துகிறது.
யார் இரட்சிக்கிறது? தேவன் மட்டுமே பாவத்தை நீக்கி பாவத்தின் தண்டனையிலிருந்து விடுவிப்பார் (2 தீமோத்தேயு 1:9, தீத்து 3:5).
தேவன் எப்படி இரட்சிக்கிறார்? இரட்சிப்பின் கிறிஸ்தவ கோட்பாட்டில், தேவன் கிறிஸ்துவின் மூலமாக நம்மை காப்பாற்றியிருக்கிறார் (யோவான் 3:17). குறிப்பாக, நம்முடைய இரட்சிப்பை நாம் அடைவதற்காக இயேசு சிலுவையில் உயிர்த்தெழுப்பப்பட்டார் (ரோமர் 5:10; எபேசியர் 1:7). இரட்சிப்பு தேவனுடைய கிருபையும், தகுதியற்றவர்கள்மேல் காண்பிக்கும் அன்புமாகும் (எபேசியர் 2:5, 8), இது இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசம் மூலம் மட்டுமே கிடைக்கும் (அப்போஸ்தலர் 4:12).
நாம் எப்படி இரட்சிப்பைப் பெறுகிறோம்? நாம் விசுவாசத்தால் இரட்சிக்கப்படுகிறோம். முதலாவதாக நற்செய்தியைக் கேட்க வேண்டும் – நாம் இயேசுவின் மரணத்தையும் அவரது உயிர்த்தெழுதலையும் குறித்த நற்செய்தியைக் கேட்க வேண்டும் (எபேசியர் 1:13). பிறகு நாம் விசுவாசிக்க வேண்டும் – கர்த்தராகிய இயேசுவை நாம் முழுமையாக நம்ப வேண்டும் (ரோமர் 1:16). இது மனந்திரும்புதலையும், பாவம் மற்றும் கிறிஸ்துவைப் பற்றிய மனநிலை மாற்றத்தையும் குறிக்கிறது (அப்போஸ்தலர் 3:19), மற்றும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுதல் (ரோமர் 10: 9-10, 13).
இரட்சிப்பினுடைய கிறிஸ்தவ உபதேசத்தின் ஒரு வரையறை, "தேவனுடைய கிருபையினால், பாவத்தின் நித்திய தண்டனையிலிருந்து மீட்பு, கர்த்தராகிய இயேசுவை மனந்திரும்பி விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படுவதாகும்." இரட்சிப்பு என்பது இயேசுவில் மட்டுமே இருக்கிறது (யோவான் 14:6; அப்போஸ்தலர் 4:12) மற்றும் தேவனை மட்டுமே சார்ந்து கொடுக்கப்பட்ட வாக்குறுதியும், சேகரமும், பாதுகாப்பிற்கும் உரியதாக இருக்கிறது.
English
இரட்சிப்பு என்றால் என்ன? கிறிஸ்தவ இரட்சிப்பின் உபதேசம் என்ன?