கேள்வி
ஒரு கிறிஸ்தவன் தனது இரட்சிப்பை இழக்க முடியுமா?
பதில்
முதலாவதாக, கிறிஸ்தவன் என்கிற சொல் வரையறுக்கப்பட வேண்டும். ஒரு "கிறிஸ்தவன்" என்பது ஒரு பிரார்த்தனை செய்கிறவனோ அல்லது ஒரு இடைகழிக்கப்பட்ட (கிறித்தவ சபைகளின் தூண்களுக்கு இடைப்பட்ட நடைபாதை) பாதையில் நடத்தல் அல்லது ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்க்கப்பட்ட ஒருவர் அல்ல. இவை ஒவ்வொன்றும் கிறிஸ்தவ அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்கிறபோதும், அவைகள் ஒருபோதும் ஒருவரை கிறிஸ்தவனாக மாற்றுவதில்லை. ஒரு கிறிஸ்தவனாகப்பட்டவன் இயேசு கிறிஸ்துவில் முழு நம்பிக்கை வைத்து அவர் ஒருவரை மட்டுமே ஒரே இரட்சகராக ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியானவரையும் கொண்டிருக்கிறவராவார் (யோவான் 3:16; அப்போஸ்தலர் 16:31; எபேசியர் 2:8-9).
எனவே, இந்த பொருள்விளக்கத்தை மனதில்கொண்டு, ஒரு கிறிஸ்தவன் தனது இரட்சிப்பை இழக்க முடியுமா? இது ஒரு மிகவும் முக்கியமான கேள்வி ஆகும். இரட்சிப்பைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை ஆராய்வதற்கும், இரட்சிப்பை இழந்துபோகும் காரியங்களைப் புரிந்துகொள்வதற்கும் என்ன செய்யலாம் என்பதைச் சோதித்துப் பார்ப்பதுதான் சிறந்த வழியாகும்:
ஒரு கிறிஸ்தவன் ஒரு புதிய சிருஷ்டியாக இருக்கிறான். "இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17). ஒரு கிறிஸ்தவன் என்பவன் ஒரு நபரின் "மேம்படுத்தப்பட்ட" பதிப்பு அல்ல; மாறாக ஒரு கிறிஸ்தவன் என்பவன் முற்றிலுமாக ஒரு புதிய ஜீவனாக இருக்கிறான். அவன் "கிறிஸ்துவில்" இருக்கிறான். ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க வேண்டுமானால், புதிய சிருஷ்டிப்பே அழிக்கப்பட வேண்டும்.
ஒரு கிறிஸ்துவன் மீட்டுக்கொள்ளப்பட்டவன். “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேதுரு 1:18-19). மீட்டெடுக்கப்பட்ட என்கிற வார்த்தை விலைக்கு வாங்குவதை மற்றும் விலையை செலுத்துகிறதைக் குறிக்கிறது. கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் விலைக்கு நாம் வாங்கப்பட்டோம். ஒரு கிறிஸ்தவன் தன் இரட்சிப்பின் இழக்க வேண்டுமானால், தேவன் அவனை தம்முடைய கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தை சிந்தி சம்பாதித்ததை வேண்டாம் என்று திரும்ப பெறுதல் வேண்டும்.
ஒரு கிறிஸ்தவன் நீதிமானாக்கப்படுகிறான். "இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்" (ரோமர் 5:1). நியாயப்படுத்துதல் என்பது நீதிமான் என்று அறிவிப்பதாகும். இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்பவர்கள் தேவனால் "நீதியுள்ளவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க கூடுமானால், தேவன் அவரது வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் அவர் முன்பு அறிவித்த "அறிவிக்கையை" நீக்கிப்போடவேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மறுபடியும் முயற்சி செய்து குற்றவாளிகள் எனக் கருதப்பட வேண்டும். தேவன் தெய்வீக தீர்மானத்தின்படி வேண்டாம் என்று கைவிடப்பட்ட தண்டனை மீண்டுமாக திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு கிறிஸ்தவன் நித்திய ஜீவனையுடையவனாக வாக்குறுதியளிக்கப் பட்டிருக்கிறான். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16). நித்திய ஜீவன் என்பது தேவனோடு பரலோகத்தில் என்றென்றுமாக செலவழிப்போம் என்கிற வாக்குறுதியாகும். “விசுவாசியுங்கள் அப்பொழுது நித்திய ஜீவனைப் பெறுவீர்கள்" என்று தேவன் வாக்குறுதி அளிக்கிறார். ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க வேண்டுமென்றால், நித்திய ஜீவன் மீண்டுமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். கிறிஸ்தவன் என்றென்றுமாக வாழ உறுதியளிக்கப்பட்டிருக்கிறார். நித்தியம் என்பது "நித்தியம்" என்பதாக அர்த்தம் அல்லவா?
ஒரு கிறிஸ்தவன் தேவனால் குறிக்கப்பட்டு ஆவியானவரால் முத்திரையிடப்படுகிறான். "நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்" (எபேசியர் 1:13-14). கிறிஸ்துவில் விசுவாசித்த தருணத்தில், புதிய கிறிஸ்தவன் குறிக்கப்பட்டு மற்றும் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்படுகிறார், பரலோக சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வைப்பதாக உறுதியளித்தார். இறுதி முடிவானத்து தேவனுடைய மகிமையை புகழ்கிறது. ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க நேரிடும் என்றால், தேவன் குறியை அழித்து பரிசுத்த ஆவியானவரை திரும்ப விலக்கிக் கொள்ளுதல், வைப்புத்தொகையை ரத்து செய்தல், அவருடைய வாக்குறுதியை முறித்துக் கொள்ளுதல், உத்தரவாதத்தைத் திரும்பப் பெறுதல், பாராட்டுக்குத் துரோகம் செய்தல், மற்றும் அவருடைய மகிமையைக் குறைத்தல்.
ஒரு கிறிஸ்தவனுக்கு மகிமை உறுதியாக இருக்கிறது. "எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்" (ரோமர் 8:30). ரோமர் 5:1-ன் படி, விசுவாசித்த அந்த தருணத்தில் நீதிமானாக்கப்படுதல் நடைபெறுகிறது. ரோமர் 8:30 படி, நீதிமானாக்கப்படுதலோடு மகிமை வருகிறது. தேவன் நீதிமான்களாக்கியிருக்கிற எல்லாரையும் மகிமைப்படுவதாக வாக்களிக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் தங்களுடைய பரிபூரண உயிர்த்தெழுதல் சரீரத்தைப் பரலோகத்தில் பெற்றுக்கொள்வதால் இந்த வாக்குறுதி நிறைவேறும். ஒரு கிறிஸ்துவர் இரட்சிப்பினை இழக்க வேண்டுமானால், பின்னர் ரோமர் 8:30 பிழை உள்ளதாகிவிடும், ஏனெனில் தேவன் எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்து, நீதிமான்களாக்கி, மகிமைப்படுத்தியுமிருக்கிறார் என்பதற்கு உத்தரவாதம் இருக்கமுடியாது.
ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க முடியாது. இரட்சிப்பு இழக்க நேர்ந்தால், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, வேதாகமம் நிகழ்வதாக கூறும் எல்லாவற்றிற்கும் மேலானது, செல்லுபடியாகாது. இரட்சிப்பு தேவனுடைய ஈவு, மற்றும் தேவனின் ஈவுகள் "மாற்றமுடியாதது" (ரோமர் 11:29). ஒரு கிறிஸ்தவன் புதிதாக உருவாக்கப்பட்டவனாக இருக்க முடியாது. விலைக்கொடுத்து மீட்டெடுக்க முடியாது. நித்திய வாழ்க்கை தற்காலிகமாக இருக்க முடியாது. தேவன் அவரது வார்த்தையை பின்வாங்கிக் கொள்ள முடியாது. தேவன் பொய் சொல்லுகிறவர் என்று சொல்ல முடியாது என்று வேதம் கூறுகிறது (தீத்து 1:2).
ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க இயலாது என்கிற நம்பிக்கைக்கு இரண்டு பொதுவான ஆட்சேபனைகள் இந்த அனுபவங்களைக் குறித்து விவாதிக்கப்படுகின்றன: 1) பாவத்தில் வாழ்கிற, மனந்திரும்பாத வாழ்க்கை வாழ்வில் வாழும் கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? 2) விசுவாசத்தை நிராகரித்து கிறிஸ்துவை மறுதலிக்கும் கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? இந்த ஆட்சேபனைகளைப் பற்றிய பிரச்சனை என்னவென்றால், தன்னை ஒரு "கிறிஸ்தவன்" என்று அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவரும் உண்மையிலேயே மறுபடியும் பிறந்திருக்கிறார்கள் என்று கருதுவதாகும். ஒரு உண்மையான கிறிஸ்தவன் தொடர்ச்சியான, மனந்திரும்பாத பாவத்தின் நிலையில் வாழ மாட்டான் என வேதாகமம் அறிவிக்கிறது (1 யோவான் 3:6). விசுவாசத்தைப் புறக்கணிப்பவர் எவரும் உண்மையில் ஒரு கிறிஸ்தவர் அல்ல என்பதையே நிரூபிக்கிறார்கள் (1 யோவான் 2:19). அவர் ஒரு மதபக்தனாக இருந்திருக்கலாம், அவர் ஒரு நல்ல செயல்களை வாழ்வில் கொண்டிருக்கலாம், ஆனால் அவர் தேவனின் வல்லமையால் மறுபடியும் பிறக்கவில்லை. "அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்" (மத்தேயு 7:16). தேவனால் மீட்கப்பட்டவர்கள், "நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி" (ரோமர் 7:4) அவருக்கு சொந்தமானவர்களாக இருக்கிறார்கள்.
பிதாவின் அன்பிலிருந்து தேவனுடைய பிள்ளைகளை எதுவும் பிரிக்க முடியாது (ரோமர் 8:38-39). ஒரு கிறிஸ்தவனை தேவனுடைய கையிலிருந்து நீக்க முடியாது (யோவான் 10:28-29). தேவன் நமக்கு அளித்த நித்திய ஜீவனை உறுதிப்படுத்துகிறார், மற்றும் அவர் நமக்கு அளித்த இரட்சிப்பைப் பராமரிக்கிறார். நல்ல மேய்ப்பன் காணாமற்போன ஆடுகளை தேடுகிறார், "கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு” வீட்டிற்குப் போகிறான்" (லூக்கா 15:5-6). ஆட்டுக்குட்டியைக் கண்டபின்பு, மேய்ப்பன் மகிழ்ச்சியுடன் அதைச்சுமப்பான்; இழந்துபோனதை மீண்டுமாய் வீட்டிற்கு பத்திரமாய் கொண்டு வருவதற்கு கர்த்தர் முழு பொறுப்பையும் எடுத்துக்கொள்கிறார்.
யூதேயா 24-25 நம்முடைய இரட்சகராகிய நற்குணத்தையும் உண்மையையும் மேலும் வலியுறுத்துகிறது: "வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்."
English
ஒரு கிறிஸ்தவன் தனது இரட்சிப்பை இழக்க முடியுமா?