கேள்வி
பச்சை குத்திக்கொள்வது கிறிஸ்தவ சுபாவமுடையதாக இருந்தால், பச்சைக் குத்திக்கொள்வது சரியா?
பதில்
பின்னணியாக, "பச்சை குத்துதல் மற்றும் சரீரத்தைக் குத்திக்கொள்வது குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?" என்கிற எங்களுடைய கட்டுரையைப் படிக்கவும். அந்தக் கட்டுரையின் பொதுவான கருப்பொருளுக்கு அப்பால், கிறிஸ்தவ பச்சைக் குத்துதல்கள் பற்றிய கேள்வி உள்ளது. சிலுவை, கிறிஸ்தவ சுலோகன் அல்லது வேதாகம வசனம் போன்ற கிறிஸ்தவ சுபாவமுடைய பச்சைக் குத்துதல்களுக்கும் இந்த கொள்கைகள் பொருந்துமா? சில கிறிஸ்தவர்கள் பச்சை குத்திக்கொள்வது அவர்களுக்கு அதிக நம்பகத்தன்மையை அளிக்கிறது என்றும், மேலும் சில குழுக்களுடன் சுவிசேஷம் அறிவிப்பதற்கான அதிக சாத்தியக்கூறுகளை வழங்குகிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். ஆகவே கிறிஸ்தவப் பச்சை குத்துதல்கள் பற்றி என்ன?
வெளிப்படையாக, எரிகிற மண்டை ஓடு, நிர்வாணமாயிருக்கும் பெண் அல்லது பிசாசுப் போன்றவற்றை விட சிலுவையைப் பச்சைக் குத்துவது "சிறந்தது". "இயேசு இரட்சிக்கிறார்" என்று பச்சை குத்திக்கொள்வது, பாரம்பரிய ஆடைகளை அணிந்து வரும் பிரசங்கியை அணுகாதவர்களுடன் சில உரையாடல்களைத் தொடங்குவதற்கு வழிவகுக்கலாம். சிலர் வெளிப்படுத்துதல் 19:16ஐ இயேசு தனது தொடையின்மேல் "ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா" என்னும் நாமத்தைப் பச்சை குத்தியிருப்பதற்கு உதாரணமாக குறிப்பிடுகின்றனர். “பச்சைக் குத்திக்கொள்வது பாவமா?” என்ற கேள்வி அவசியமில்லை. மாறாக "பச்சைக் குத்திக்கொள்வது நல்லது மற்றும் அவசியமான காரியமா?" என்கிற கேள்வி இன்னும் அதிகமாக கேட்கவேண்டி உள்ளது. 1 கொரிந்தியர் 10:23 கூறுகிறது, “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.” கிறிஸ்தவப் பச்சைக் குத்திக்கொள்ளுதல்கள் ஒருவேளை "அனுமதிக்கப்படலாம்", ஆனால் அவை நன்மை பயக்குமா மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கையைக் கட்டியெழுப்புமா?
1 கொரிந்தியர் 9:22-23 ல், பவுல் கூச்சலிடுகிறார், “பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப் போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்” என்றார். சிலரை இரட்சிக்க எல்லாமுமாக மாறுவது ஒரு கிறிஸ்தவ பச்சை குத்துவதற்கான ஒரே நல்ல காரணம். பச்சை குத்திக்கொள்வது சுவிசேஷத்திற்கான கதவுகளை மூடாமல் திறக்கும் என்றால், கிறிஸ்தவ பச்சை குத்திக்கொள்வது, "எல்லாருக்கும் எல்லாமானேன்" என்னும் பவுலின் கூற்றின்படி "தகுதி" பெறக்கூடும். அதே சமயம், பச்சை குத்திக்கொள்வது, சுவிசேஷம் அறிவிப்பதற்கான அதிக வாய்ப்பை வழங்கும் ஒரு காட்சியை கற்பனை செய்வது வெளிப்படையாக கடினமாக உள்ளது. பச்சைக் குத்திக்கொள்ளாததால் ஒருவர் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால், நீங்கள் பச்சைக் குத்திக்கொண்டால் மெய்யாகவே அவர் உங்களுடைய பேச்சைக் கேட்பார் என்பதற்கு சாத்தியமில்லை.
அப்படிச் சொல்லும்போது, வேதாகமத்தின் அடிப்படையிலான முடிவானது கிறிஸ்தவப் பச்சை குத்துதல்கள் அனுமதிக்கப்படுவது போல் தோன்றும், ஆனால் அவை நன்மை பயக்கும் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கையில் கட்டப்பட மற்றும் வளருவதற்கு வழிவகுப்பதாகக் கருதப்படுமா என்பது மிகவும் கேள்விக்குரியதாக இருக்கிறது. பச்சைக் குத்திக்கொள்வதைக் குறித்து சிந்திக்கிற அல்லது கருத்தில் கொண்ட ஒரு கிறிஸ்தவர் அதற்கான ஞானத்திற்காக தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும் (யாக்கோபு 1:5) மற்றும் சுத்தமான நோக்கங்களையும் விவேகத்தையும் வழங்குமாறு கர்த்தரிடத்தில் கேட்க வேண்டும்.
English
பச்சை குத்திக்கொள்வது கிறிஸ்தவ சுபாவமுடையதாக இருந்தால், பச்சைக் குத்திக்கொள்வது சரியா?