settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவ ஆராதனையின் பொருள் என்ன?

பதில்


புதிய ஏற்பாட்டில் கிரேக்க வார்த்தையின் அர்த்தம் பெரும்பாலும் "ஆராதனை" (புரோஸ்குனேயோ) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அதன் பொருள் "முகங்குப்புற கீழே விழுவது" அல்லது "முன்பாக குனிவது" ஆகும். ஆராதனை என்பது ஆவியின் சுபாவ அணுகுமுறை. இது ஒரு உள்ளான, தனிப்பட்ட செயல் என்பதால், கிறிஸ்தவர்கள் வாரத்தில் ஏழு நாட்களிலும், எல்லா நேரத்திலும் ஆராதிக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் முறையாக ஆராதனையில் ஒன்றுகூடும் போது, தனித்தனியாக கர்த்தரை ஆராதிப்பதில் இன்னும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். ஆராதனை ஒரு சபையின் ஒரு பகுதியாக இருந்தாலும், ஒவ்வொரு பங்கேற்பாளரும் அவன் அல்லது அவள் தேவனை தனிப்பட்ட முறையில் ஆராதிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

கிறிஸ்தவ ஆராதனையின் தன்மை உள்ளானது மற்றும் இரண்டு சமமான முக்கிய குணங்களைக் கொண்டுள்ளது. நாம் "ஆவியோடும் உண்மையோடும்” தேவனைத் தொழுதுகொள்ளவேண்டும் (யோவான் 4:23-24). ஆவியில் ஆராதிப்பதற்கும் நமது சரீர நிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது நம் உள்ளத்தோடு தொடர்புடையது மற்றும் இதற்குப் பல விஷயங்கள் தேவைப்படுகிறது. முதலில், நாம் மீண்டும் பிறக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வசிக்காமல், ஆராதனையில் நாம் தேவனுக்கு மாறுத்திரம் அளிக்க முடியாது காரணம் நாம் அவரை அறியவில்லை. "தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்" (1 கொரிந்தியர் 2:11). நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் ஆராதனையை ஊக்குவிப்பவர், ஏனெனில் அவர் சாராம்சத்தில் தன்னை மகிமைப்படுத்துகிறார், மேலும் அனைத்து உண்மையான ஆராதனைகளும் தேவனை மகிமைப்படுத்துகின்றன.

இரண்டாவதாக, ஆவியில் ஆராதிப்பதற்கு தேவனை மையமாகக் கொண்ட மற்றும் சத்தியத்தால் புதுப்பிக்கப்பட்ட ஒரு மனம் தேவைப்படுகிறது. பவுல் நம்மை, "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என அறிவுறுத்துகிறார் (ரோமர் 12:1-2). உலக காரியங்களை மையப்படுத்தியுள்ளவையில் இருந்து வெளியேறி தேவனை மையப்படுத்தி நம் மனம் மாறும்போதுதான் நாம் ஆவியில் ஆராதிக்க முடியும். பல வகையான கவனச்சிதறல்கள் நம் மனதை நிறைத்து நாம் தேவனைப் துதித்து மகிமைப்படுத்துவதை இடையூறு செய்து, நமது உண்மையான ஆராதனையை தடைபண்ணலாம்.

மூன்றாவதாக, நாம் சுத்த இதயத்துடன், திறந்த மற்றும் மனந்திரும்புதலால் மட்டுமே ஆவியில் ஆராதிக்க முடியும். பத்சேபாளுவுடன் (2 சாமுவேல் 11) பாவம் செய்ததால் ராஜாவின் இதயம் குற்ற உணர்ச்சியால் நிரம்பியபோது, அவரால் ஆராதிக்க முடியவில்லை. தேவன் தன்னிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதை அவர் உணர்ந்தார், மேலும் அவர் "நாள் முழுவதும் கதறினார்", இரவும் பகலும் அவர்மேல் தேவனுடைய கை பாரமாயிருந்தது (சங்கீதம் 32:3, 4). ஆனால் அவர் தனது பாவத்தை ஒப்புக்கொண்டபோது, தேவனுடனான ஐக்கியம் மீட்டெடுக்கப்பட்டது மற்றும் ஆராதனையும் துதியும் அவரிடமிருந்து ஊற்றப்பட்டது. தேவனுக்குப் பிரியமான பலிகள் உடைந்த ஆவி என்பதை அவர் புரிந்து கொண்டார். “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயம்” என்பதை புரிந்துகொண்டார் (சங்கீதம் 51:17). தேவனுக்கேற்ற துதியும் ஆராதனையும் ஒப்புக்கொள்ளப்படாத பாவத்தால் நிரம்பிய இருதயங்களிலிருந்து வர முடியாது.

உண்மையான ஆராதனையின் இரண்டாவது குணம் அது "சத்தியத்தில்" செய்யப்படுகிறது. எல்லா ஆராதனைகளும் சத்தியத்தின் மாறுத்திரமாகும், மேலும் தேவனுடைய வார்த்தையை விட சத்தியத்தின் சிறந்த அளவீடு எதுவாக இருக்கும்? இயேசு தனது பிதாவிடம், "உம்முடைய வசனமே சத்தியம்" என்றார் (யோவான் 17:17). சங்கீதம் 119 கூறுகிறது, "உம்முடைய வேதம் சத்தியம்" (வசனம் 142) மற்றும் "உம்முடைய வசனம் சத்தியம்" (வசனம் 160). தேவனை உண்மையாக ஆராதிக்க, அவர் யார், அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அவர் தன்னை முழுமையாக வெளிப்படுத்தியது அவரது வார்த்தையாகிய வேதாகமத்தில் உள்ளது. ஆராதனை என்பது அவருடைய வார்த்தையின் மூலம் புரிந்துகொள்ளப்பட்ட தேவனை நோக்கி நம் இருதயத்தின் ஆழத்திலிருந்து வரும் துதிகளின் வெளிப்பாடாகும். வேதாகமத்தின் சத்தியம் நம்மிடம் இல்லை என்றால், நமக்கு தேவனைத் தெரியாமல் போயிருக்கும் மற்றும் நாம் உண்மையாக அவரை ஆராதிக்க முடியாது.

கிறிஸ்தவ ஆராதனையில் வெளிப்புற நடவடிக்கைகள் இரண்டாம் பட்சமாக இருப்பதால், கூட்டு ஆராதனையில் நாம் உட்காரவோ, நிற்கவோ, கீழே விழவோ, அமைதியாக இருக்கவோ அல்லது சத்தமாகத் துதி பாடவோ கூடாது என்கிறதான எந்த விதியும் இல்லை. இந்த காரியங்கள் சபையின் தன்மையின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் தேவனை ஆவியிலும் (நம் இருதயங்களில) மற்றும் சத்தியத்திலும் (நம் மனங்களில்) ஆராதிக்கிறோம்.

English



முகப்பு பக்கம்

கிறிஸ்தவ ஆராதனையின் பொருள் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries