கேள்வி
தேவன் / வேதாகமம் பாலியல் சார்பியமுள்ளதா?
பதில்
பாலியல் சார்பியம் என்பது ஒரு பாலினம், பொதுவாக ஆண் பாலினம், பிற பாலினத்தை ஆட்கொண்டு ஆதிக்கம் கொண்டிருப்பது, பொதுவாக பெண் மீது ஆண் ஆதிக்கம் செலுத்துகிறதைக் குறிக்கிறது. பெண்களைப் பற்றிய பல குறிப்புகள் வேதாகமத்தில் உள்ளன, அது நமது நவீன மனநிலையானது பெண்கள் மீது பாகுபாடு காண்பிக்கிறதாக கருதுகின்றது. ஆனால், வேதாகமம் ஒரு செயலை விவரிக்கும்போது, அந்த செயலை வேதாகமத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அர்த்தமில்லை. சொத்துக்களைக் காட்டிலும் பெண்களுக்கு குறைவான நிலையில் நடத்துவதாக வேதாகமம் விவரிக்கிறது, அதற்காக அந்த செயலை தேவன் அங்கீகரிக்கிறார் என்று அர்த்தமல்ல. நம்முடைய சமுதாயங்களைவிட நம்முடைய ஆத்மாக்களை சீர்திருத்துவதில் தான் வேதாகமம் அதிக கவனம் செலுத்துகிறது. மாற்றப்பட்ட இருதயம் ஒரு மாற்றப்பட்ட நடத்தைக்கு வழிவகுக்கும் என்பதை தேவன் அறிந்திருக்கிறார்.
பழைய ஏற்பாட்டு காலங்களில், உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட ஒவ்வொரு கலாச்சாரமும் ஆணாதிக்க கட்டமைப்பில் இருந்தது. வரலாற்றின் இந்த அந்தஸ்து மிகவும் தெளிவாக இருக்கிறது – இது வேதாகமத்தில் மட்டுமல்லாமல் பெரும்பாலான சமுதாயங்களையும் ஆளுகின்ற விதிகளாக இருந்தன. நவீன மதிப்பமைப்புகள் மற்றும் உலக மனிதனின் கண்ணோட்டத்தில், இவர்கள் "பாலியல் சார்பியமுள்ளவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். சமுதாயத்தில் ஒழுங்கை தேவன் கட்டளையிட்டார், மனிதனல்ல, அதிகாரத்தின் நடைமுறை பிரமாணங்களை ஸ்தாபித்தவர் தேவனே ஆவார். எனினும், எல்லாவற்றையும் போலவே, விழுந்துபோன மனிதன் இந்த ஒழுங்கையும் சிதைத்துவிட்டான். இது வரலாறு முழுவதிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என்கிற சமத்துவமின்மையை விளைவித்துள்ளது. இன்று நம்முடைய உலகில் நாம் காணும் விலக்கம் மற்றும் பாகுபாடு புதியதல்ல. இது மனிதனின் வீழ்ச்சி மற்றும் பாவத்தின் அறிமுகம் ஆகியவற்றின் விளைவாகும். ஆகையால், பதம் மற்றும் செயல்படுத்துதலாகிய "பாலியல் சார்பியம்" என்பது பாவத்தின் விளைவாகத்தான் இருக்கிறது என்று நாம் சரியாக சொல்ல முடியும். வேதாகமத்தின் படிப்படியாகவுள்ள வெளிப்பாடு, பாலியல் சார்பியம் மற்றும் உண்மையில் மனித இனத்தின் அனைத்து பாவம் பழக்கவழக்கங்களுக்கும் குணப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.
தேவனால் நியமிக்கப்பட்ட அதிகார பதவிகளுக்கு இடையே ஒரு ஆவிக்குரிய சமநிலையை கண்டுபிடித்து பராமரிக்க, நாம் வேதவாக்கியத்தையே பார்க்க வேண்டும். புதிய ஏற்பாடானது பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதலாக இருக்கிறது, அதில் பாவத்திற்கான தீர்வையும் சரியான வரையின் அதிகாரத்தை சொல்லுகிற சகல மனிதகுலத்தின் தீமைகளையும், மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகளையும் உள்ளடக்கிய பிரமாணங்களையும் கண்டுபிடிக்கிறோம்.
கிறிஸ்துவின் சிலுவை பெரிய சமன்படுத்தியாக இருக்கிறது. யோவான் 3:16 கூறுகிறது, "விசுவாசிக்கிறவன் எவனோ," அது சமுதாயத்தின் நிலை, மனநிலை அல்லது பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் எல்லாரையும் உட்படுத்திய ஒரு முழுமையான அறிக்கை ஆகும். இரட்சிப்புக்கான சமமான வாய்ப்பைப் பற்றி பேசுகிற வசனங்களை கலாத்தியர் நிருபத்தில் காணலாம். “நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்” (கலாத்தியர் 3:26-28). சிலுவையில் பாலியல் சார்பியம் இல்லை.
ஆண்கள், பெண்கள் ஆகியோரின் பாவங்களைப் பற்றிய விளைவுகளில் அதன் துல்லியமான சித்தரிப்புகளில் வேதாகமம் பாலியல் சார்பியமுள்ளது அல்ல. வேதாகமம் எல்லா வகையான பாவத்தையும் பதிவு செய்கிறது: அடிமைத்தனம், மற்றும் மிகப்பெரிய கதாநாயகர்களின் தோல்விகள். ஆனால், அதேவேளையில் தேவன் மீதும் அவருடைய ஒழுங்குமுறை மீதும் அந்தப் பாவங்களுக்கான தீர்வை நமக்கு அளிக்கிறது - தேவனுடன் இருக்கிற ஒரு சரியான உறவு. பழைய ஏற்பாடு மிக உயர்ந்த ஒரு பலியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது, ஒவ்வொரு முறையும் பாவத்திற்கு ஒரு பலி செலுத்தப்பட்டபோது, தேவனோடு ஒரு நல்லிணக்கம் அவசியமாக இருக்கிறது என்று அது போதிக்கிறது. புதிய ஏற்பாட்டில், "உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற ஒரு ஆட்டுக்குட்டி" பிறந்தார், மரித்தார், அடக்கம் பண்ணப்பட்டார் மற்றும் மீண்டும் உயர்ந்தது, பின்னர் பரலோகத்திலுள்ள அவரது இடத்திற்கு ஏறிச்சென்றார், அங்கு அவர் நமக்காக பரிந்து பேசுகிறார். பாலியல் சார்பியம் உட்பட பாவத்திலிருந்துள்ள தீர்வு அவரில் விசுவாசிப்பதன் மூலமாக வருகிறது.
வேதாகமத்தில் பாலியல் சார்பியத்தின் குற்றச்சாட்டு வேதவாக்கியத்தைக் குறித்த சரியான அறிவில்லாமையே ஆகும். எல்லா வயதினரிலுமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் தேவனால் நியமிக்கப்பட்ட இடங்களை எடுத்துக்கொண்டு, "கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறபடி” வாழ்ந்தால், பின்னர் பாலினங்களுக்கு இடையே ஒரு அற்புதமான சமநிலை உண்டாயிருக்கும். அந்த சமநிலையை தேவனே தொடங்கினார், அதை அவர் முடியவும் பண்ணுவார். பாவத்தின் வேருக்கு கவனம் செலுத்தி அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதனுடைய விளைவாக உண்டாகும் பல்வேறு பொருட்களுக்கு கூடுதல் கவனம் கொடுக்கப்படுகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனோடு தனிப்பட்ட நல்லிணக்கம் இருக்கும்போது மட்டுமே இந்த உண்மையான சமத்துவம் கிடைக்கிறது. "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32).
வேதாகமம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறான பங்குகளை விவரிக்கிறது பாலியல் சார்பியத்தையல்ல என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். திருச்சபையிலும் வீட்டிலும் தலைமைத்துவ பொறுப்பை ஆண்கள் எடுத்துக் கொள்ளும்படி தேவன் எதிர்பார்க்கிறார் என வேதாகமம் மிகவும் தெளிவான நிலையில் தெளிவுபடுத்துகிறது. இது பெண்களை சிறுமைப்படுத்துகிறதா? நிச்சயமாக இல்லை. இது பெண்களுக்கு குறைவான புத்திசாலித்தனம், குறைவான திறன், அல்லது தேவனுடைய பார்வையில் குறைவாகவே கருதப்படுகிறதா? நிச்சயமாக இல்லை! அதனுடைய அர்த்தம் என்னவென்றால், நம்முடைய பாவக் கறைபட்ட உலகில், கட்டமைப்பு மற்றும் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதாகும். நம்முடைய நன்மைக்காக தேவன் அதிகாரங்களை படைத்திருக்கிறார். பாலியியல் சார்பியம் இந்த பாத்திரங்களின் துஷ்பிரயோகம் ஆகும், இந்த பாத்திரங்களின் இருப்பு அல்ல.
English
தேவன் / வேதாகமம் பாலியல் சார்பியமுள்ளதா?