கேள்வி
தேவன் அவரது மனதை மாற்றிக்கொள்கிறாரா?
பதில்
மல்கியா 3:6 அறிவிக்கிறது: “நான் கர்த்தர் நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.” இதேபோல், யாக்கோபு 1:17 நமக்கு சொல்லுகிறது, “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.” இதை எண்ணாகமம் 23:19 இன்னும் தெளிவாக்குகிறது: “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?” இந்த வசனங்களின் அடிப்படையில், இல்லை, தேவன் மாறமாட்டார். தேவன் மாறாதவரும் மாறக்கூடாதவருமாக இருக்கிறார். அவர் சர்வ ஞானமுள்ளவராகவும் இருக்கிறார். எனவே, அவர் தவறு செய்து, அது தவறு என்று அறிந்து பிறகு அதிலிருந்து பின்மாறி ஒரு புதிய முயற்சி செய்வதன் மூலம் அவர் தனது "மனதை மாற்றிக் கொள்ளவேண்டிய” அவசியம் இல்லை அப்படி செய்யவும் கூடாது.
அப்படியானால், தேவன் அவருடைய மனதை மாற்றிக்கொள்ளுகிறார் என்று சொல்லும் வசனங்களை நாம் எவ்வாறு விளக்குவது? ஆதியாகமம் 6:6 போன்ற வசனங்கள், “தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.” மேலும், யாத்திராகமம் 32:14 கூறுகிறது: “அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.” இந்த வசனங்கள் தேவன் சிலவற்றிலிருந்து “மனந்திரும்பினார்" அல்லது “பரிதாபங்கொண்டார்" என்று சொல்லுகிறது, தேவன் மாறாதவராக இருக்கிறார் என்கிற உபதேசத்திற்கு முரண்பாடாகத் தோன்றுகிறது.
தேவன் அவரது மனதை மாற்றிக்கொள்ளுவதாக காண்பித்து பயன்படுத்தப்படுகிற மற்றொரு வேதபாகம் யோனாவின் கதையாகும். தேவன் நினிவேக்கு எதிராக அவர் தீர்க்கதரிசி மூலம் இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று சொன்னார் (யோனா 3:4). எனினும், நினிவே பட்டணத்தார் அவர்களுடைய பாவங்களை விட்டு மனந்திரும்பினார்கள் (வசனங்கள் 5-9). அசீரியர்களின் மனந்திரும்புதலுக்கு பதிலளிக்கும் விதமாக தேவன் மனஸ்தாபப்பட்டார்: “அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்” (வசனம் 10).
தேவன் அவரது மனதை மாற்றிகொண்டார் என்று கருதப்படுகின்ற பத்திகளைக் குறித்து இரண்டு முக்கிய கருத்துக்கள் உள்ளன. முதலாவதாக, “தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்” (ஆதியாகமம் 6:6) போன்ற வார்த்தைகள், மனிதர்களுடைய உணர்ச்சிகளை தேவனுடைய உணர்வுகளை அறிந்து கொள்ளுவதற்காக கற்ப்பிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு எடுத்துக்காட்டுகளாகும். மனித இனத்தின் உணர்வுகள் அல்லது சிந்தனை செயல்முறைகள் எல்லையற்ற தேவனைக் குறிப்பிடுவதற்கு மாந்தவுருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் தேவனுடைய செயல்களைப் புரிந்துகொள்வதற்கு உதவ இது ஒரு வழியாகும். குறிப்பாக ஆதியாகமம் 6:6-ல், மனிதனின் பாவத்தின் மீது தேவனுடைய துக்கத்தை நாம் புரிந்துகொள்கிறோம். இந்த இடத்தில் தேவன் வெளிப்படையான நிலையில் மனிதன் மீண்டுமாக சிருஷ்டிக்க அவரது முடிவை தலைகீழாக மாற்றிக்கொள்ளவில்லை. இன்று நாம் உயிருடன் இருக்கிறோம் என்கிற உண்மையானது, தேவன் தமது “மனதை மாற்றிக்கொள்ளவில்லை" என்பதற்கான அத்தாட்சியாக இருக்கிறது.
இரண்டாவதாக, தேவனுடைய நிபந்தனையுள்ள அறிவிப்புகளுக்கும் மற்றும் தேவனுடைய நிபந்தனையற்ற தீர்மானங்களுக்கும் இடையில் ஒரு வேறுபாட்டை நாம் உருவாக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், “இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்” என்று தேவன் சொன்னபோது, அவர் அசீரியர்களின் மறுபடியின்மீது நிபந்தனையுடன் பேசினார். அசீரியர்கள் மனந்திரும்பியபடியால், தேவன் கூறியதைச் செய்யவில்லை என்பது நமக்கு தெரியும், உண்மையில், நியாயத்தீர்ப்பை முன்னெடுக்கப்பட்டுள்ளது நமக்கு தெரியும். தேவன் அவரது மனதை மாற்றிக்கொள்ளவில்லை; மாறாக, நினிவேக்கு அவருடைய செய்தி மனந்திரும்புதலைத் தூண்டும் ஒரு எச்சரிக்கையாக இருந்தது, அவருடைய எச்சரிக்கை வெற்றிகரமாக இருந்தது.
தேவன் நிபந்தனையற்ற அறிவிப்பிற்கு ஒரு உதாரணம் தாவீதுக்கு தேவன் அளித்த வாக்குறுதி, “உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்” (2 சாமுவேல் 7:16). இந்த அறிவிப்பில் எந்தொரு தகுதியும் வெளிப்படுத்தப்படவுமில்லை அல்லது உட்படுத்தப்படவுமில்லை. தாவீது என்ன செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும் கர்த்தருடைய வார்த்தை நிறைவேறும்.
தேவன் அவருடைய அறிவிப்புகளின் சில எச்சரிக்கைகள் மற்றும் அவர் நமது விருப்பங்களுக்கேற்ப செயல்படுவார் என்கிற உண்மையையும் நமக்கு சொல்லுகிறார்: “பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில், நான் விரோதமாய் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன். கட்டுவேன், நாட்டுவேன் என்றும், ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு. அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன். இப்பொழுதும், நீ யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருவப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல” (எரேமியா 18:7-11). நிபந்தனையுள்ள சொல்லாகிய “என்றால்” (னால்) என்பதை கவனியுங்கள்: “அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால்” [யோனா 3-ஆம் அதிகாரத்தில் அசீரியாவைப்போல்]... நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன். மாறாக, தேவன் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று ஒரு தேசத்திடம் சொல்லலாம், ஆனால் “அவர்கள் தேவனுடைய சத்தத்தைக்கேளாமல், அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால்” [மீகா 1-ஆம் அதிகாரத்தில் இஸ்ரவேலைப் போல]...”நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்.”
அடிவரை என்னவென்றால் தேவன் எப்பொழுதும் முற்றிலும் சீரான நிலையில் இருக்கிறார். அவருடைய பரிசுத்தத்தின்படி, தேவன் நினிவே பட்டிணத்தை நியாயந்தீர்க்கப் போகிறார். எனினும், நினிவே மனந்திரும்பி அதன் வழிகளை விட்டு மாறினது. இதன் விளைவாக, தேவன், அவரது பரிசுத்தத்தில், நினிவே மீது இரக்கம் காண்பித்து அவர்களை அழித்துப்போடாமல் காப்பாற்றினார். இந்த "மனதை மாற்றுவது" அவருடைய பண்புடன் முற்றிலும் ஒத்திருக்கிறது. அவரது பரிசுத்தத்தன்மையில் ஒரு ஐயோட்டா (iota) அளவுபோலும் தடுமாற்றம் ஏற்படவில்லை.
நம்முடைய விருப்பங்களை பிரதிபலிப்பதன் மூலம் தேவன் தம்மை மாற்றிக்கொள்கிறார் என்கிற உண்மை அவருடைய தன்மைக்கு ஒருபோதும் ஒன்றும் இழைப்பதில்லை. உண்மையில், தேவன் மாறாதவராக இருக்கிறபடியால், அநீதியுள்ளவர்களிடமிருந்து நீதிமான்களை அவர் வித்தியாசமாக நடத்த வேண்டும். யாராவது மனந்திரும்பினால், தேவன் தொடர்ந்து மன்னிக்கிறார்; ஒருவர் மனந்திரும்ப மறுத்தால், தேவன் தொடர்ந்து நியாயந்தீர்க்கிறார். அவர் அவருடைய சுபாவம், அவரது திட்டம், மற்றும் அவரது இருக்கும் தன்மையில் மாறாமல் இருக்கிறார். அவர் நருங்குண்டவர்களால் ஒரு நாள் பிரியமுடனும் நருங்குண்டவர்களால் அடுத்த நாள் கோபமாகவும் அவரால் இருக்க முடியாது. அப்படியிருந்தால், அது அவரை மாறக்கூடிய மற்றும் நம்பத்தகாதவர் என்றே காண்பிக்கும். தேவன் நினிவேயிடம், "நான் உன்னை நியாயந்தீர்க்கப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு, பின்னர் (அவர்கள் மனந்திரும்பிய பிறகு) அவர்களை நியாயந்தீர்க்காமல் மறுக்கும் செயல் தேவன் அவரது மனதை மாற்றிகொண்டார் என்பதுபோல் இருக்கலாம். உண்மையில், தேவன் வெறுமனே அவரது பண்பிற்கு ஏற்றபடி உண்மையான நிலையிலே தங்கியிருக்கிறார். அவர் இரக்கத்தை நேசித்து நொறுங்குண்டவர்களை மன்னிக்கிறார். “தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ?” (சங்கீதம் 77:9). பதில், இல்லை.
ஒரு சமயத்தில் நாம் நமது பாவத்தின் காரணமாக தேவனுக்கு எதிரிகளாக இருந்தோம் (ரோமர் 8:7). பாவத்தின் சம்பளத்தை எடுத்துரைத்து (ரோமர் 6:23) நம்மை மனந்திரும்பும்படி தேவன் எச்சரித்தார். நாம் மனந்திரும்பி, இரட்சிப்புக்காக கிறிஸ்துவை நம்பியபோது, தேவன் நமக்கு செய்யவேண்டியதை செய்யாமல் "அவருடைய மனதை மாற்றிக்கொண்டார்", இப்போது நாம் அவருக்கு எதிரிகள் அல்ல, மாறாக அவருடைய அன்பான பிள்ளைகளாக இருக்கிறோம் (யோவான் 1:12). நாம் நமது பாவத்தில் தொடர்ந்திருந்தால் நம்மை தண்டிக்காமல் இருப்பது தேவனுடைய குணாதிசயத்திற்கு முரணாக இருப்பதுபோல, நாம் நமது பாவத்திலிருந்து மனந்திரும்பிய பிறகு நம்மை தேவன் தண்டிப்பதும் அவருடைய குணாதிசயத்திற்கு முரணாக இருக்கும். நம்முடைய மனதை மாற்றிக்கொள்ளுவது தேவனை மாற்றுவதாக அர்த்தப்படுத்துகிறதா? இல்லை, ஏதாவது இருந்தால், நம்முடைய இரட்சிப்பு தேவன் மாறாதவர் என்கிற உண்மையை சுட்டிக்காட்டுகிறது, ஏனென்றால், கிறிஸ்துவின் நிமித்தமாக அவர் நம்மைக் காப்பாற்றவில்லையென்றால், அவர் தமது பண்பிற்கு முரணாக இருந்திருப்பார்.
English
தேவன் அவரது மனதை மாற்றிக்கொள்கிறாரா?