கேள்வி
இஸ்ரவேலரை அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாக இருக்கும்படிக்கு தேவன் ஏன் தெரிந்து கொண்டார்?
பதில்
இஸ்ரவேலரைப் பற்றி பார்க்கும்போது, "சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள் பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள். கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார். ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்," உபாகமம் 7:7-9 வரையிலுள்ள வசனங்கள் சொல்லுகிறது.
பாவம் மற்றும் மரணத்திலிருந்து மீட்பளிக்கப்போகிற (யோவான் 3:16) இயேசு கிறிஸ்து இஸ்ரவேல் வம்சத்தில் பிறப்பதற்காக தேவன் அந்த தேசத்தாரை தெரிந்தெடுத்தார். ஆதாம் ஏவாள் பாவத்தில் வீழ்ந்த போதே தேவன் மேசியாவை குறித்து வாக்குப்பண்ணினார் (ஆதியாகமம் 3). பின்பு ஆபிரகாம், ஈசாக்கு, மற்றும் யாக்கோபின் வம்சத்திலிருந்து மேசியா தோன்றுவார் என்று தேவன் உறுதிசெய்தார் (ஆதியாகமம் 12:1-3). தேவன் ஏன் இஸ்ரவேலரை தன்னுடைய விசேஷ ஜனமாக தெரிந்தெடுத்தார் என்பதற்கு இயேசுகிறிஸ்துவே பிரதான காரணம் ஆகும். தேவனுக்கென்று தெரிந்துக்கொள்ளப்பட்ட ஜனம் தேவையில்லை ஆனால் அவர் அப்படி செய்ய தீர்மானித்தார். இயேசு கிறிஸ்து ஏதேனும் ஒரு தேசத்தின் மக்களிடத்திலிருந்து பிறக்கவேண்டும் எனவே தேவன் இஸ்ரவேலரை தெரிந்தெடுத்தார்.
எனினும் தேவன் இஸ்ரவேல் தேசத்தாரை தெரிந்தெடுத்ததன் பிறதான நோக்கம் மேசியா அந்த ஜனத்திடம் இருந்து வரவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. இஸ்ரவேலர் பிறருக்கும் தம்மைப்பற்றி போதிப்பார்கள் என்பதே அவர்களை குறித்த தேவனுடைய வாஞ்சையாகும். இஸ்ரவேல் தேசத்தார் இந்த உலகத்திற்கு ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் மிஷனரிகள் தேசமாக இருக்க வேண்டும். மற்ற ஜனங்களை தேவனிடத்திற்கும், அவருடைய வாக்குதத்தமாகிய மீட்பர், மேசியா மற்றும் இரட்சகரிடத்தில் நடத்த கூடிய தனித்துவம் வாய்ந்த ஜனமாக இஸ்ரவேலர் இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய நோக்கம் ஆகும். அநேக நேரங்களில் இஸ்ரவேலர்கள் இந்த இலக்கை நிறைவேற்றத் தவறினார்கள். இருந்தபோதிலும் மேசியாவை இந்த உலகத்திற்கு கொண்டு வரும் தேவனுடைய பிரதான முடிவான நோக்கம் இயேசுகிறிஸ்வில் பூரணமாக நிறைவேறினது.
English
இஸ்ரவேலரை அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாக இருக்கும்படிக்கு தேவன் ஏன் தெரிந்து கொண்டார்?