கேள்வி
ஆதாம் மற்றும் ஏவாளைத் தவிர மற்ற மனிதர்களையும் தேவன் படைத்தாரா?
பதில்
ஆதாம் மற்றும் ஏவாளைத் தவிர வேறு மனிதர்களை தேவன் படைத்தார் என்று வேதாகமத்தில் எங்கும் குறிப்பு இல்லை. ஆதியாகமம் 2ல், “தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே. நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்” (ஆதியாகமம் 2:4-8, 18, 21-22) என்று வாசிக்கிறோம்.
"தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்" என்று வசனம் கூறுவதைக் கவனியுங்கள். "மனிதர்கள்" அல்ல, ஒரே ஒரு "மனிதன்". இந்த மனிதன் தனியாக இருந்தான் (வசனம் 18) அதனால் தேவன் அவனுடைய விலா எலும்பில் இருந்து ஒரு பெண்ணை அவனுக்கு துணையாக உருவாக்கினார். மற்ற எல்லா மனிதர்களும் இந்த இரண்டு முதல் மனிதர்களிடமிருந்து வந்தவர்கள்.
English
ஆதாம் மற்றும் ஏவாளைத் தவிர மற்ற மனிதர்களையும் தேவன் படைத்தாரா?