கேள்வி
தேவன் பெரிய பாவங்களை மன்னிக்கிறாரா? ஒரு கொலைபாதகனை தேவன் மன்னிப்பாரா?
பதில்
பொய், கோபம் மற்றும் தீமையான எண்ணங்கள் போன்ற "சிறிய" பாவங்களை மட்டும் கடவுள் மன்னிக்கிறார், ஆனால் கொலை மற்றும் விபச்சாரம் போன்ற "பெரிய" பாவங்களை மன்னிக்க மாட்டார் என்று பலர் தவறாக எண்ணங்கொண்டிருக்கிறார்கள். இது உண்மையல்ல. தேவனால் மன்னிக்க முடியாத அளவுக்கு பெரிய பாவம் இல்லை. இயேசு சிலுவையில் மரித்தபோது, உலகத்தின் அனைத்து பாவங்களுக்காகவும் தண்டனையை செலுத்தவே அவர் மரித்தார் (1 யோவான் 2:2). ஒரு நபர் இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைக்கும் போது, அவருடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். அதில் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம், பெரியவை அல்லது சிறியவை என அனைத்தும் அடங்கும். நம் பாவங்களுக்கெல்லாம் உள்ள பாவத்தண்டனையை செலுத்தவே இயேசு மரித்தார், அவைகள் மன்னிக்கப்பட்டவுடன், அவைகள் அனைத்தும் மன்னிக்கப்படும் (கொலோசெயர் 1:14; அப். 10:43).
நாம் அனைவரும் பாவத்தின் குற்றவாளிகள் (ரோமர் 3:23) மற்றும் நித்திய தண்டனைக்கு தகுதியானவர்கள் (ரோமர் 6:23). நம் தண்டனையை செலுத்த இயேசு நமக்காக மரித்தார் (ரோமர் 5:8). இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவை நம்புகிற எவரும் அவர்கள் செய்த பாவங்கள் எதுவாக இருந்தாலும் அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும் (யோவான் 3:16). இப்போது, ஒரு கொலைபாதகன் அல்லது விபச்சாரம் செய்பவன் "வெறும்" ஒரு பொய்யன் ஒருவனை விட இன்னும் அவனுடைய தீய செயல்களுக்கு கடுமையான விளைவுகளை (சட்டரீதியான, தொடர்புடைய, முதலியன) சந்திக்க நேரிடும். ஆனால் ஒரு கொலைபாதகனின் அல்லது விபச்சாரக்காரனின் பாவங்கள் அவன் விசுவாசித்து மற்றும் கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்கும் தருணத்தில் முழுமையாகவும் நிரந்தரமாகவும் மன்னிக்கப்படுகின்றன.
பாவத்தின் அளவு அல்ல இங்கே தீர்மானிக்கும் காரணி; மாறாக அது கிறிஸ்துவின் பிராயச்சித்த பலியின் அளவாகும். தேவனுடைய பாவமில்லாத ஆட்டுக்குட்டியானவரின் சிந்தப்பட்ட இரத்தம் அவரை நம்பும் அனைத்து மில்லியன் கணக்கான மக்களின் அனைத்து பாவங்களையும் மூடுவதற்கு போதுமானதாக இருந்தால், மூடப்பட்ட பாவங்களின் அளவு அல்லது வகைக்கு வரம்பு இல்லை. "எல்லாம் முடிந்தது" என்று அவர் கூறியபோது, பாவம் முடிவுக்கு வந்தது, அதற்காக முழுமையான பரிகாரம் மற்றும் திருப்திகரமாக அளிக்கப்பட்டது, முழுமையான மன்னிப்பு கிடைத்தது, அமைதி கிடைத்தது, மற்றும் அனைத்து பாவங்களிலிருந்தும் மீட்பு அடையப்பட்டது. இரட்சிப்பு மெய்யாகவும் உறுதியாகவும் முழுமையாகவும் இருந்தது; எதுவும் சேர்க்கப்பட வேண்டியதில்லை, அல்லது சேர்க்கப்பட அவசியமில்லை. மேலும், கிறிஸ்துவின் இரட்சிக்கும் கிரியை முற்றிலும் மனிதனின் உதவியின்றி செய்து முடிக்கப்பட்டது, அதை இல்லாமல் செய்ய முடியாது.
English
தேவன் பெரிய பாவங்களை மன்னிக்கிறாரா? ஒரு கொலைபாதகனை தேவன் மன்னிப்பாரா?