கேள்வி
தேவன் சர்வ வல்லமையுள்ளவர் என்பதன் அர்த்தம் என்ன?
பதில்
சர்வவல்லமை என்ற சொல் ஒம்னி (omni) - அர்த்தம் "சர்வ" மற்றும் பொட்டென்ட் (potent) அர்த்தம் "வல்லமை" என்பதிலிருந்து வருகிறது. சர்வஞானி மற்றும் சர்வவியாபி ஆகிய பண்புகளைப் போலவே, தேவன் எல்லையற்றவராக இருந்தால், நமக்கு தெரிந்தது போல அவர் சர்வ ஆளுமையுள்ளவராக இருந்தால், அவர் சர்வ வல்லமையுள்ளவராக இருக்க வேண்டும். அவர் எல்லா காலங்களிலும் எல்லா வழிகளிலும் எல்லாப் பொருட்களின் மீதும் எல்லா வல்லமையையும் கொண்டிருக்கிறார்.
யோபு 42:2 இல் தேவனுடைய வல்லமையைப் பற்றி யோபு கூறுகிறார்: "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்." யோபு அவருடைய திட்டங்களை நிறைவேற்றுவதில் தேவனுடைய சர்வ வல்லமையை ஒப்புக்கொண்டார். மோசேயும், இஸ்ரவேலர்களைப் பற்றிய தனது நோக்கங்களை நிறைவு செய்ய அவருக்கு எல்லா அதிகாரமும் உண்டு என்பதை தேவன் மோசேயிக்கு நினைவூட்டினார்: “அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ? நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்” (எண்ணாகமம் 11:23).
தேவனுடைய சர்வ வல்லமையானது அவர் சிருஷ்டித்த சிருஷ்டிப்பை விட தெளிவாக வேறு எங்கும் காணப்படவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது. தேவன் சொன்னார், "உண்டாகக்கடவது..." அது அப்படியே ஆயிற்று (ஆதியாகமம் 1:3, 6, 9, முதலிய வசனங்கள்). மனிதனுக்கு ஒரு பொருளை உருவாக்க கருவிகள் மற்றும் பொருட்கள் தேவை; ஆனால் தேவனோ வெறுமனே கட்டளையிட்டார், அவருடைய வார்த்தையின் வல்லமையால், எல்லாம் ஒன்றுமில்லாமையில் இருந்து உருவாக்கப்பட்டது. "கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது" (சங்கீதம் 33:6).
அவருடைய சிருஷ்டிப்பைப் பாதுகாப்பதில் தேவனுடைய வல்லமையும் காணப்படுகிறது. தேவன் உணவு, உடை மற்றும் தங்குமிடம் ஆகியவற்றிற்குத் தேவையான அனைத்தையும் வழங்கவில்லை என்றால், பூமியிலுள்ள அனைத்து உயிர்களும் அழிந்துபோகும், மனிதனையும் மிருகத்தையும் அவரது வல்லமையால் பாதுகாக்கிறார் (சங்கீதம் 36:6). பூமியின் பெரும்பகுதியை உள்ளடக்கியது சமுத்திரங்கள், மற்றும் நமக்கு அவற்றின் மீது எவ்வித அதிகாரமும் இல்லை, ஆனால் தேவன் அவற்றிற்கு வரம்புகளை குறித்து தடை செய்யாவிட்டால் அவை நம்மை மூழ்கடிக்கும் (யோபு 38:8-11).
தேவனுடைய சர்வ வல்லமை அரசாங்கங்களுக்கும் தலைவர்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது (தானியேல் 2:21), ஏனெனில் அவர் அவர்களைத் தடுக்கிறார் அல்லது அவருடைய திட்டங்கள் மற்றும் நோக்கங்களின்படியே அவர்கள் வழியில் செல்ல அனுமதிக்கிறார். சாத்தான் மற்றும் அவனது பிசாசுகளைப் பொறுத்தவரை அவருடைய வல்லமை வரம்பற்றது. யோபு மீதான சாத்தானின் தாக்குதல் சில செயல்களுக்கு மட்டுமே. தேவனுடைய வரம்பற்ற வல்லமையால் அவன் கட்டுப்படுத்தப்பட்டான் (யோபு 1:12; 2:6). இயேசு பிலாத்துவுக்கு எல்லா வல்லமையும் தேவனால் வழங்கப்படாவிட்டால் அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை நினைவுபடுத்தினார் (யோவான் 19:11).
சர்வ வல்லமையுள்ளவராக இருப்பதால், தேவன் எதையும் செய்ய முடியும். இருப்பினும், சில காரியங்களை அவரால் செய்ய முடியாது என்று வேதாகமம் சொல்லும்போது தேவன் தனது சர்வ வல்லமையை இழந்துவிட்டார் என்று அர்த்தமல்ல. உதாரணமாக, அவரால் பொய் சொல்ல முடியாது என்று எபிரேயர் 6:18 கூறுகிறது. பொய் சொல்லும் வல்லமை அவருக்கு இல்லை என்று அர்த்தமல்ல, ஆனால் தேவன் தனது சொந்த தார்மீக பண்பின் முழுமைக்கு ஏற்ப பொய் சொல்லக்கூடாது என்று தேர்வு செய்கிறார். அதேபோல், அவர் சகல வல்லமையுள்ளவருமாக இருந்தாலும், அவர் தீமையை வெறுக்கிறார் என்றாலும், அவர் தனது நல்ல நோக்கத்தின்படி, தீமையை நடக்க அனுமதிக்கிறார். மனித குலத்தின் மீட்புக்காக தேவனின் சரியான, பரிசுத்தமான, குற்றமில்லா ஆட்டுக்குட்டியைக் கொல்வது சித்தமாய் தோன்றிற்று.
மாம்சத்தில் வந்த தேவனாக, இயேசு கிறிஸ்து சர்வ வல்லமையுள்ளவர் ஆவார். அவர் நடப்பித்த அற்புதங்களில் அவருடைய வல்லமை காணப்படுகிறது - அவருடைய ஏராளமான சுகமளித்தல், ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல் (மாற்கு 6:30-44), புயலை அமைதிப்படுத்துதல் (மாற்கு 4:37-41), மற்றும் அதிகாரத்தின் இறுதி காட்சி, லாசருவை உயிரோடு எழுப்புதல் மற்றும் யவீருவின் மகளை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்புதல் (யோவான் 11:38-44, மாற்கு 5:35-43), இவை ஜீவன் மற்றும் மரணம் மீதான அவரது அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இயேசு வந்ததற்கு மரணம் தான் முடிவான காரணம் - அதை அழிக்க வந்தார் (1 கொரிந்தியர் 15:22, எபிரேயர் 2:14) மற்றும் பாவிகளை தேவனுடன் சரியான உறவுக்கு கொண்டு வர வந்தார். கர்த்தராகிய இயேசு தனது உயிரைக் கொடுப்பதற்கான அதிகாரம் மற்றும் அதை மீண்டும் எடுத்துக்கொள்ளும் அதிகாரம் கொண்டவர் என்று தெளிவாகக் கூறினார், தேவாலயத்தைப் பற்றி பேசும்போது அவர் இதை உருவகமாக கூறினார் (யோவான் 2:19). தேவையெனில், அவர் சோதிக்கப்பட்ட சோதனையின்போது காப்பாற்ற தேவதூதர்களின் பன்னிரண்டு லேகியோன்களை அழைக்கும் அதிகாரம் அவருக்கு இருந்தது (மத்தேயு 26:53), ஆனால் அவர் மற்றவர்களுக்குப் பதிலாக தன்னை மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொடுத்தார் (பிலிப்பியர் 2:1-11).
இயேசு கிறிஸ்துவில் தேவனுடன் ஒன்றிணைந்த விசுவாசிகளால் இந்த வல்லமையைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்பது பெரிய மர்மம். "கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்" (2 கொரிந்தியர் 12:9). நம்முடைய பலவீனங்கள் மிகப் பெரியதாக இருக்கும்போது தேவனுடைய வல்லமை நம்மில் உயர்ந்ததாக இருக்கிறது, ஏனென்றால் அவர் "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராக” இருக்கிறார் (எபேசியர் 3:20). தேவனுடைய வல்லமையே நமது பாவத்தை மீறி நம்மை தொடர்ந்து கிருபையின் நிலையில் வைத்திருக்கிறது (2 தீமோத்தேயு 1:12), அவருடைய வல்லமையால் நாம் வீழ்ச்சியடையாமல் காக்கப்படுகிறோம் (யூதா 24). அவருடைய வல்லமை எல்லா நித்தியத்திற்கும் பரலோகத்தின் அனைத்து சேனைகளால் அறிவிக்கப்படும் (வெளி. 19:1). அது நம்முடைய முடிவில்லாத ஜெபமாக இருக்கட்டும்!
English
தேவன் சர்வ வல்லமையுள்ளவர் என்பதன் அர்த்தம் என்ன?